|
|||||
நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு இலவச பயிற்சி !! |
|||||
தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால், விவசாயிகளுக்கு தண்ணீர் சிக்கனம் குறித்த இலவச பயிற்சி, மதுரையில் உள்ள மாநில நீர் மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. தண்ணீர் சிக்கனம் குறித்த இலவச பயிற்சி நடைபெறும் நாள் பின்வருமாறு, மதுரை - ஜூன் 3 முதல் 6 வரை திண்டுக்கல் - ஜூலை 1 முதல் 4 வரை தேனி - ஜூலை 8 முதல் 11 வரை விருதுநகர் - ஜூன் 24 முதல் 27 வரை ராமநாதபுரம் - அக்டோபர் 7 முதல் 10 வரை சிவகங்கை - டிசம்பர் 2 முதல் 5 வரை இந்த பயிற்சியில் சொட்டுநீர், தெளிப்பு நீர், பண்ணை குட்டை அமைத்தல், வயல்வெளிகளில் மழைநீர் சேகரிப்பு, மாற்றுப் பயிர் திட்டம் மற்றும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, பயிர் சாகுபடி குறித்த நான்கு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மதிய உணவு மற்றும் போக்குவரத்து செலவு வழங்கப்படும். கூடுதல் தகவளுக்கு : 0452 -291 1058ல் தொடர்பு கொள்ளலாம். |
|||||
by Swathi on 05 May 2014 4 Comments | |||||
Tags: Water Management Tamilnadu Former தமிழக விவசாயிகள் நீர் மேலாண்மை | |||||
|
கருத்துகள் | ||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|