LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆல் இன் ஆல் அழகுராஜாவில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் !!

ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் சந்தானத்தின் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டு விட்டதாக, அந்த படத்தின் இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

 

ராஜேஷ் இயக்கத்தில், கார்த்தி - காஜல் அகர்வால், சந்தானம் ஆகியோர் நடித்து வரும் படம் ஆல் இன் ஆல் அழகுராஜா. இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் ட்ரைலர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகியது. இதில், சந்தானம் ஒரு காட்சியில், புகையிலை மற்றும் குட்கா எதிர்ப்பு விளம்பரத்தை கிண்டலடிப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு மக்கள் மன்றம் இதுகுறித்து தமிழக அரசிடம் புகார் தெரிவித்தது. குட்கா சாப்பிட்டு புற்றுநோயால் இறந்த முகேஷ் என்ற மனிதன் தன் குரலால் நாட்டு மக்களை எச்சரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த விளம்பரத்தைக் கிண்டலடிப்பதா என கண்டனம் தெரிவித்திருந்தது அந்த அமைப்பு, சர்ச்சைக்குரிய அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது, இதனை அடுத்து, அந்தக் காட்சியே புகையிலைக்கு எதிரான பிரச்சாரம் என்று விளக்கமளித்திருந்தார் இயக்குநர் ராஜேஷ். அதனை ஏற்க மறுத்து எதிர்ப்புகள் அதிகரித்ததால், சர்ச்சைக்குரிய அந்தக் காட்சியை நீக்குமாறு சென்சார் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்கிவிட்டதாக இயக்குனர் ராஜேஷ் அறிவித்துள்ளார்.

by Swathi   on 21 Oct 2013  0 Comments
Tags: ஆல் இன் ஆல் அழகு ராஜா   சந்தானம்   கார்த்தி   ட்ரைலர்   சந்தானம் காமெடி   All in All Azhagu Raja   Santhanam  
 தொடர்புடையவை-Related Articles
விஜய்க்காக மீண்டும் காமெடியனாக களத்தில் இறங்கிய சந்தானம் !! விஜய்க்காக மீண்டும் காமெடியனாக களத்தில் இறங்கிய சந்தானம் !!
இந்திய அளவில் சாதனை படைத்த புலி !! இந்திய அளவில் சாதனை படைத்த புலி !!
இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படம் - வாலிபராஜா !! இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படம் - வாலிபராஜா !!
கொம்பனுக்கு புதிய சிக்கல் !! கொம்பனுக்கு புதிய சிக்கல் !!
பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !! பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !!
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இனிமே இப்படிதான் !! சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இனிமே இப்படிதான் !!
காஷ்மோராவில் வடிவேலுக்கு பதிலாக விவேக் !! காஷ்மோராவில் வடிவேலுக்கு பதிலாக விவேக் !!
ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யாவுக்கு தம்மன்னா, சந்தானத்துக்கு பானு ஜோடி !! ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யாவுக்கு தம்மன்னா, சந்தானத்துக்கு பானு ஜோடி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.