LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படம் - வாலிபராஜா !!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் வெற்றிக் கூட்டணி தற்போது "வாலிபராஜா" என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.

முழுநீள நகைச்சுவைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் 24-ம்தேதி வெளியாக இருக்கிறது. சேது, சந்தானம், விடிவி கணேஷ், விஷாகா, பவர்ஸ்டார், தேவதர்ஷினி, சித்ரா லெட்சுமணன், சுப்பு பஞ்சு, ஜெயப்பிரகாஷ், நான்கடவுள் ராஜேந்திரன் மற்றும் மும்பை நடிகை நுஷ்ரத் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சாய் கோகுல் ராம்நாத். இவர் கேவி ஆனந்திடம் உதவியாளராக பணியாற்றியவர்.

வாலிபராஜா படம் குறித்து இயக்குனர் சாய் கோகுல் ராம்நாத் கூறும்போது, இதுவரை சினிமாவில் எத்தனையோ குடும்பங்களைப் பார்த்து இருப்பார்கள். ஆனால் இப்படத்தில் வரும் ஒரு குடும்பத்தினர் வித்தியாசமாக இருப்பார்கள் அவர்களது ஒவ்வொரு செயலும் பேச்சும் சிரிக்க வைக்கும் என்கிறார். மேலும் ஒரு காட்சியில் கூட முகம் சுளிக்க வைக்காதபடி படம் இருக்கும் என்று உத்திரவாதமும் தருகிறார்.
 
இந்த படத்தில் டாக்டர் வாலிப ராஜா என்கிற முக்கிய வேடத்தில் சந்தானம் நடித்துள்ளார். சந்தானத்தின் தோற்றம் ஹாலிவுட் இயக்குநர் வுடி ஆலனை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அவர் இதில் ஒரு சைக்கிரியாட்டிஸ்டாக வருகிறார். அவர் கோணத்தில் வரும் ஒரு வித்தியாசமான குடும்பம்தான் கதையின் மையம். அவர்களின் பிரச்சினையை சந்தானம் எப்படித் தீர்க்கிறார்? என்பதே படத்தின் கலக்கலான காட்சிகள்.  

இந்த படம் இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

by CinemaNews   on 14 Sep 2015  0 Comments
Tags: Vaaliba Raja   Vaaliba Raja Movie   Santhanam Vaaliba Raja   Psycho Comedy Movie   First Psycho Comedy Movie   சைக்கோ காமெடி படம்   சைக்கோ காமெடி  
 தொடர்புடையவை-Related Articles
இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படம் - வாலிபராஜா !! இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படம் - வாலிபராஜா !!
சந்தானத்திற்கு ராசியாக திகழும் தியேட்டர் !! சந்தானத்திற்கு ராசியாக திகழும் தியேட்டர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.