LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

விரதம் - ஆன்மீக வாழ்க்கைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் அவசியமானது !!

நமது நாட்டை பொறுத்த வரை இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என பல மதங்கள் இருந்தாலும், அனைத்து முறையிலும் சில சம்பிரதாயங்கள் ஒன்றாவே இருக்கிறது. அத்தகைய சம்பிரதாயங்களில் மிக முக்கியமானது விரதம் இருத்தல் என்பதாகும்.


விரதம் என்பது ஆன்மீக வாழ்க்கைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் இன்றியமையாததாகும். 


விரதங்கள் பல விதம் :


விரதமானது, மதத்துக்கு மதம், மக்களுக்கு மக்கள் வேறுபடுகிறது. சிலருக்கு ஒரு வேளை உணவு.... இன்னும் சிலருக்கு இருவேளை உணவு. வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது... இப்படி விரதங்கள் பல விதம். 


நாம் சாப்பிடுகிற உணவானது செரித்து, உணவில் உள்ள கொழுப்புகள் ஆற்றலாக மாற்றப்பட குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தேவை. 


ஆனால் நாமோ.. உணவுக்கு இடைவேளை கொடுக்காமல் அடுத்த வேளை சாப்பாட்டை உள்ளே தள்ளுவதால், உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது, உடலியக்கத்துக்குத் தேவையான ஆற்றலாக உபயோகப்படுத்தப்படுவது தடுக்கப்பட்டு, அப்படியே தேங்கி விடுகிறது. 


தினமுமே அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளியை அனுமதிப்பது கூட ஒரு வகையில் விரதம்தான்...ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. 


சிலர் வாரம் இரண்டு முறைகூட விரதமிருப்பதுண்டு.வாரத்தில் எல்லா நாள்களும் மூன்று வேளைகளும் வயிறு முட்ட சாப்பிட்டுப் பழகி விட்டு, திடீரென ஒரு நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள் சிலர். அது தவறு. 


விரதத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே காரம் குறைவான, பருப்பு சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.


அடுத்த நாள், இளநீர், மோர், துளசி சேர்த்த தண்ணீர் மற்றும் பழச்சாறுகள் என திரவ உணவுகளாக சாப்பிடலாம். அதற்கடுத்த நாள், காலை மற்றும் இரவு உணவுக்கு வெறும் பழங்களையும், மதிய உணவுக்கு மிதமான காரமற்ற உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். 


மூன்றாவது நாளில் இருந்து வழக்கமான உணவுப்பழக்கத்துக்கு மாறலாம். இது ஒரு வகையான விரதம். 


இன்னொரு முறையில், மாலை வரை வெறும் பழங்களையும் திரவ உணவுகளையும் மட்டும் எடுத்துக் கொண்டு, இரவுக்கு மிதமான உணவு சாப்பிடுகிற முறை.


இது தவிர இன்று விதம் விதமான விரத முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் மக்கள். சிலர் வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் போது, உடலுக்குள் போகும் உப்பின் அளவு குறைவாக இருக்கும். எனவே உடலில் தண்ணீர் சேராது. நடிகைகள், மாடல் போன்றவர்கள், போட்டோ ஷூட்டுக்கு முன்னால், 3 நாள்களுக்கு பழ விரதம்தான் இருப்பார்கள். அதன் விளைவாக அவர்களது முகத்தில் பொலிவு கூடும். உடலில் தண்ணீர் தேக்கம் இருக்காது என்பதே காரணம். கண்களுக்கு அடியில் வீக்கமும் இருக்காது. 


இங்கிலாந்தில் இப்போது 5:2 டயட் என்பது ரொம்பப் பிரபலம். இதில் வாரம் 2 நாள்கள் விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். விரத நாளன்று ஆண்களுக்கு 600 கிலோ கலோரிகளும், பெண்களுக்கு 500 கிலோ கலோரிகளும் மட்டுமே அனுமதி. எடை குறைக்க விரும்புகிற பலரும் இதையே பின்பற்றுகிறார்கள். வாரம் ஒரு முறை விரதமிருந்தாலே உடலிலுள்ள நச்செல்லாம் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகும்.


எந்த வயதினர் விரதம் இருக்கலாம்?


15 வயதுக்குக் குறைவானவர்கள், 70 வயதைக் கடந்தவர்கள், கடுமையான உடல் உழைப்பு உள்ளவர்கள், வெளியூரில் வேலை செய்பவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள் ஆகியோர் எந்த வகையான விரதமும் இருக்கக் கூடாது. விரதம் இருக்கும் போது, நம் உடலில் உள்ள உயிரி ரசாயனங்கள் வயிற்றுக்குக் கேடு விளைவிக்கக் கூடும். 


விரதத்தை முடிக்கும் போது பழரசம் குடிப்பது சரியா?


சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் உண்ணா விரதமிருக்கும் போது, கடைசியில் பழச்சாறு குடித்து, அதை முடிப்பதைப் பார்த்திருக்கிறோம். அது ஏன் தெரியுமா? பழச்சாறு செரிமானமாவதில் சிக்கல் இருக்காது. அது விரைவில் ரத்தத்துடன் கலந்து, குளூக்கோஸுக்கு இணையாக உடனடியாக உடலுக்கு சக்தியைக் கொடுக்கக் கூடியது. 


நீண்ட நேரம் உண்ணாமல் இருக்கும் போது, பழச்சாறு குடிப்பதன் மூலம் இழந்த சக்தியை சுலபமாகத் திரும்பப் பெற முடிகிறது. பழங்களில் வைட்டமின்கள், கனிமங்கள் என எல்லாம் இருப்பதால், அது ஆரோக்கியமானதும்கூட. விரதத்தை முடிக்கிற போது, பழச்சாறுதான் குடிக்க வேண்டும் என்றில்லை. இளநீர் கூட மிக நல்லது.


விரதமிருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை?


செரிமானத்துக்குக் கடினமான எந்த உணவும் விரத நாள்களில் தவிர்க்கப்பட வேண்டும். பால், மசாலா சேர்த்த உணவுகள், அசைவம், அரிசி மற்றும் கோதுமை உணவுகள், அதிக உப்பு, காரம் சேர்த்த உணவுகள், செயற்கை உணவுகள் கூடவே கூடாது. 


செரிமானத்துக்கு மெனக்கெடுவதைத் தவிர்த்து, உள் உறுப்புகளை சுத்தம் செய்வதற்கு உடல் அந்த நேரம் எடுத்துக் கொள்ளும். முதுமை தள்ளிப் போகும். இன்சுலின் எதிர்ப்பு சக்தி மேம்படும். விரத நாள்களில் மிதமான, பாதகமில்லாத உணவுகளை எடுத்துக் கொள்வதன் விளைவாக, ஆரோக்கியம் மேம்படுவதுடன், ஆயுளும் கூடும்.


விரதம் இருந்தால் உடல் இளைக்குமா?


விரதமிருக்கும் போது பெரும்பாலும் பழங்கள் அல்லது திரவ உணவுகளையே எடுத்துக் கொள்கிறோம். அரிசி சாதம், ரொட்டி, இட்லி, தோசை, சட்னி, ஊறுகாய், அப்பளம், காரசார புளியோதரை, காரக்குழம்பு போன்றவை தவிர்க்கப்படுவதால் உடலில் தண்ணீர் சேர்வதும் தவிர்க்கப்படுகிறது. நமது உடலானது தசைப்பகுதிகளில் தண்ணீரைச் சேர்த்து வைத்திருக்கும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உண்ணும்போது, அவற்றில் உள்ள உப்பும், தன் பங்குக்கு தண்ணீரை சேமிக்கும். எனவே விரதமிருக்கும் போது எடை பார்த்தால், அதில் சில கிலோ குறைவாகத்தான் காட்டும். ஆனால், அது கொழுப்பு கரைந்ததாக அர்த்தமாகாது!


விரதத்தை முடித்து விட்டு விருந்து சாப்பிடலாமா?


அது அத்தனை மணி நேரம் விரதம் இருந்த பலனையே கெடுத்து விடும். விரதம் என்பது உணவு சார்ந்த ஒருவித ஒழுக்கக் கட்டுப்பாடு. குறைந்த கலோரி உணவுகளை உண்ணும்போது, ஆயுள் அதிகரிக்கிறது. அதன் விளைவாக முதுமைத் தோற்றமும் தள்ளிப்போடப்படுகிறது. எனவே, விரதத்தை முடித்த பிறகும், மிதமான உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்வதுதான் நல்லது.


விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் :


குறைந்தளவு உணவு அதாவது ஒருவேளை அல்லது இரு வேளை சாப்பிடாமல் விரதம் இருப்பது நல்லது. இதனால் உடலின் இன்சுலின் சுரப்பது, கொழுப்புச் சத்து குறைவது, எடை குறைவது ஆகிய நன்மைகள் ஏற்படும்.


மன அழுத்தம், சோர்வு நீங்க குறைந்தபட்ச அளவில் வயிற்றைப் பட்டினி போடுவது நல்லது.


தண்ணீர் கூட குடிக்காமல், விரதம் இருக்கக் கூடாது. உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை தண்ணீர் தான் செய்யும். தண்ணீர் குடிக்காமல் விரதம் இருந்தால், கழிவுகள் உடலிலேயே தங்கிவிடும்.


பெண்கள் மதம், பக்தி, நம்பிக்கை அடிப்படையில் அடிக்கடி விரதம் இருப்பது கூடாது. அது ரத்தசோகை நோயை உண்டாக்கும். சிலருக்கு சர்க்கரை நோய் வர அதுவும் ஒரு காரணமாகிவிடும்.


வாரமோ மாதமோ ஒருநாள் குறைந்த அளவு உணவை எடுத்துக் கொண்டு விரதம் இருப்பதே நல்லது. அது உடலில் சில செல்களை வளர்ச்சியடையச் செய்யும். பழுதடைந்த செல்கள் புத்துயிர் பெறும். அதனால் இளமையுடன் இருக்க முடியும் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.

by Swathi   on 17 Jul 2014  3 Comments
Tags: Fasting   Viratham Palangal   விரதம்              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !! நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !!
விரதம் - சேயோன் யாழ்வேந்தன் விரதம் - சேயோன் யாழ்வேந்தன்
விரதத்திற்கும், பட்டினிக்கும் என்ன வித்தியாசம் ? ஹீலர் பாஸ்கர் விரதத்திற்கும், பட்டினிக்கும் என்ன வித்தியாசம் ? ஹீலர் பாஸ்கர்
விரதம் - ஆன்மீக வாழ்க்கைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் அவசியமானது !! விரதம் - ஆன்மீக வாழ்க்கைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் அவசியமானது !!
பக்தி பற்றி சத்குரு ! பக்தி பற்றி சத்குரு !
தைப்பூசத்தின் சிறப்புகளும், விரத முறைகளும் !! தைப்பூசத்தின் சிறப்புகளும், விரத முறைகளும் !!
விநாயகர் சதுர்த்தி - விநாயகர் புராண வரலாறு விநாயகர் சதுர்த்தி - விநாயகர் புராண வரலாறு
கருத்துகள்
17-Nov-2016 00:41:08 ஜீவி மீனா said : Report Abuse
super
 
27-Nov-2015 02:36:57 sangeetha said : Report Abuse
Migavum payan ullathaga iruthadhu.nandri
 
05-Aug-2014 03:47:54 chandrasegaran said : Report Abuse
விரதம் பற்றிய குறிப்பு பயனுள்ளதாக்ஹா இருந்தது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.