LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சீனாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை 27 சதவீதம் வரை உயர வைத்த ஜாக்கி ஜான் படம் !!

உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி ஜான் நடிப்பில் உருவாக்கி சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் தான் போலீஸ் ஸ்டோரி 6. இந்த படத்துக்கு குவியும் வசூல் காரணமாக, சீனாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 27 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

 

ஜாக்கி ஜானின் போலீஸ் ஸ்டோரி 6 படம் இதுவரை 106 மில்லியன் டாலர்களைக் குவித்து சாதனைப் படைத்துள்ளது. முதல் வாரத்தில் மட்டும் 26 மில்லியன் டாலர்களை ஈட்டியது இந்தப் படம். இதனால் சீனாவின் சினிமா துறை வருவாய் 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. 18500 திரையரங்குகளைக் கொண்ட சீன நாட்டில், கடந்த ஆண்டு சினிமா துறை வருமானம் 3.6 பில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மட்டும் 5077 அரங்குகள் புதிதாகக் கட்டப்பட்டன! 

 

போலீஸ் ஸ்டோரி 6 படத்தில் ஜாக்கிசான் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். ஆட்சியாளர்களை பணிய வைக்க ஜாக்கிசானின் மகள் உள்பட 33 பேர்களை சர்வதேச தீவிரவாதிகள் கடத்தி விடுகிறார்கள். அந்த 33 பேர்களையும் தீவிரவாதிகளிடம் இருந்து ஜாக்கிசான் எப்படி காப்பாற்றுகிறார்? என்பதே படத்தின் கதை. முதன்முதலாக ஜாக்கிசான் தனது சொந்த குரலில், ஒரு பாடலை பாடியிருக்கிறார். தமிழிலும் இந்தப் படம் டப் செய்யப்படுள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

by Swathi   on 04 Feb 2014  0 Comments
Tags: Box Office   Police Story 6   Jackie Chan Police Story 6   China Box Office   China 2013 Box Office   ஜாக்கி ஜான்   பாக்ஸ் ஆபிஸ்  
 தொடர்புடையவை-Related Articles
100 கோடியை தாண்டியதாம் வேதாளம்!! 100 கோடியை தாண்டியதாம் வேதாளம்!!
புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !! புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !!
ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !! ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !!
சீனாவில் பிரமாண்டமாக களமிறங்கும் பாகுபலி !! சீனாவில் பிரமாண்டமாக களமிறங்கும் பாகுபலி !!
வசூல் மழையில் தனி ஒருவன் !! வசூல் மழையில் தனி ஒருவன் !!
சத்தமில்லாமல் சாதித்த பாபநாசம் !! சத்தமில்லாமல் சாதித்த பாபநாசம் !!
தயாரிப்பு செலவு 80 லட்சம்... லாபம் 8 கோடி.... தயாரிப்பு செலவு 80 லட்சம்... லாபம் 8 கோடி....
இந்தியாவைத் தொடர்ந்து சீனாவிலும் வசூல் சாதனை படைக்கும் பிகே ! இந்தியாவைத் தொடர்ந்து சீனாவிலும் வசூல் சாதனை படைக்கும் பிகே !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.