LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு..

கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆண்டு தோறும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காகப் புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இந்த 2024ம் ஆண்டுக்கான 20 புதிய பயிர் ரகங்களைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி வெளியிட்டார்.

 

வேளாண் பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் என 20 புதிய ரகங்கள் தமிழ்நாடு அரசின் மாநில பயிர் ரகங்கள் வெளியீட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

 

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு

 

இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வேளாண் பயிர்களில் நெல்லில் இருவழி வீரிய ஒட்டு ரகம் மற்றும் பாசுமதி அல்லாத வாசனை கொண்ட நீள் சன்ன ரகம் என இரண்டு ரகங்களும், தானியப் பயிர்களில் இனிப்புச் சோளம் உட்பட நான்கு புதிய ரகங்களும், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் பசுந்தாள் உரப்பயிர் போன்ற பயிர்களில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

 

மேலும், தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பன்னீர் திராட்சை, பலா, வாழை என மூன்று பழப்பயிர்களும், கத்திரி, கொத்தவரை, வெள்ளைத்தண்டுக்கீரை, சிவப்புக்கீரை மற்றும் முருங்கை என ஐந்து காய்கறி பயிர்களும் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி சிவப்புப் புளி மற்றும் தென்னையில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் விவசாயப் பெருமக்கள் இந்த புதிய பயிர் ரகங்களைச் சாகுபடி செய்து பயன்பெறுமாறு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்தார்.

by Kumar   on 09 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
650 நெல் ரகங்களைப் பாதுகாத்து வரும் கேரள விவசாயிக்குப் பத்மஸ்ரீ விருது 650 நெல் ரகங்களைப் பாதுகாத்து வரும் கேரள விவசாயிக்குப் பத்மஸ்ரீ விருது
உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு
இந்தியாவில் முதன் முதலாக வயல்களில் சென்சார் மற்றும் ரேடர்கள் மூலமாக நடைபெற்ற நோய்க் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி. இந்தியாவில் முதன் முதலாக வயல்களில் சென்சார் மற்றும் ரேடர்கள் மூலமாக நடைபெற்ற நோய்க் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி.
3 மடங்கு லாபம் ஈட்டும் பிலிப்பைன்ஸ் விவசாயிகள்: நேரில் பார்வையிட்ட உடுமலை விவசாயிகள் தகவல் 3 மடங்கு லாபம் ஈட்டும் பிலிப்பைன்ஸ் விவசாயிகள்: நேரில் பார்வையிட்ட உடுமலை விவசாயிகள் தகவல்
நேரடியாக_உழவர்களிடம்_வாங்கிடுங்கள்... நேரடியாக_உழவர்களிடம்_வாங்கிடுங்கள்...
விவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள் விவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள்
தமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது? என்ன தீர்வு ? தமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது? என்ன தீர்வு ?
மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு.. மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.