LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பிற்கான சில முக்கிய விழிப்புணர்வு குறிப்புகள் !!

நகர்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகளில் தனியாக வசிக்கும் வயதுமூத்த குடிமக்களின் பாதுகாப்பான வாழ்விற்கு தேவையான சில முக்கிய குறிப்புரைகளை கீழே வழங்கியுள்ளோம்

.1) வயதுமூத்த குடிமக்கள் தனியே வசிக்கும் வீடுகள், அப்பார்ட்மெண்ட்கள், பிளாட்டுகளில் பாதுகாப்பிற்கு தேவையான பாதுகாப்பு கேமரா, அலாரம் போன்ற சில எலக்ட்ரானிக் சாதனங்களை பொருத்துதல் வேண்டும்.

2) வீட்டிற்கு வரும் அந்நிய நபர்களை ஜன்னல் வழியாகவோ அல்லது கதவுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிறு நுண்துளை கேமரா வழியாக அடையாளங்கள் பார்த்தபின்பே கதவை திறக்கவேண்டும்.

3) திருடர்கள் பற்றிய விழிப்புணர்வு அலாரம் மற்றும் கேமராக்கள் ஆகியவை சரியான முறையில் இயங்குகிறதா என்று அவ்வப்போது சோதித்து பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

4) முன் விபரங்கள் தெரியாத நபர்களை வீடுகளில் குடியிருக்க அனுமதிக்கக் கூடாது.

5) வீட்டிற்கு வரும் அந்நிய நபர்கள் கண் பார்வையில் படும் படியாக வீட்டின் கார்சாவி, வீட்டுசாவி ஆகியவற்றை வைத்தல் கூடாது.

6) வீட்டிற்கு வேலை செய்யவரும் பிளம்பர், எலெக்ட்ரிசியன் ஆகியவர்களின் விபரங்களை முன்கூட்டியே அறிந்த பின்பே அனுமதிக்க வேண்டும்.

7) தனியாக "வாக்கிங்" செல்லாமல் குழுவாக "வாக்கிங்" போகலாம். நன்கு தெரிந்த பரிச்சயமான இடங்களில் மட்டுமே வாக்கிங் செல்ல வேண்டும்.

8) அனாமத்தாக கிடக்கும் பொருட்களை எடுத்தல் கூடாது.

9) வீட்டில் "மிளகாய் போடி ஸ்பிரே ", "மிளகு ஸ்பிரே" இவற்றை வைத்திருத்தல் வேண்டும்.

10) வீட்டிற்கு வெளியே விற்பனைக்காக வரும் நபர்களை வீட்டின் உள்ளே அனுமதித்தல் கூடாது.

11) சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் வீட்டிற்கு/பிளாட்டிற்கு வெளியே வாகனகள் நிறுத்தினால் அதுபற்றி உடனடியாக பக்கத்து வீடுகளில் வசிக்கும் நபர்களுக்கோ அல்லது அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கோ தெரியப்படுத்துதல் வேண்டும்.

12) வீட்டிற்கு இரும்பினாலான கிரில் கதவுகளை அமைத்தல் வேண்டும். பகுதியாக கதவுகள் திறக்கும் வகையில் இரும்பு செயின் அமைத்தல் வேண்டும்.

13) விலையுயர்ந்த நகைகள், பணம் ஆகியவற்றை அதிக அளவில் வீட்டில் வைத்திருத்தல் கூடாது. பாதுகாப்பு பெட்டக வசதி செய்து கொள்ளுதல் வேண்டும்.

14) அந்நிய நபர்களை அதிகமாக நம்புதல் கூடாது. அடையாளம் தெரியாத நபர்களுக்காக கதவை திறந்து பதில் கூறக்கூடாது.

15) உங்களது வீட்டில் வேலை செய்யும் நபர்களுக்கு தெரிந்தவர்களை வீட்டில் அனுமதித்தல் கூடாது.

16) வீட்டில் பாதுகாப்பிற்காக நாய் வளர்க்கலாம் அல்லது "நாய்கள் ஜாக்கிரதை" என்ற போர்டை மட்டுமாவது வீட்டின் கேட்டில் மாட்டி வைக்கலாம்.

17) வீட்டின் முன்கதவில் "மேஜிக் கண்" எனப்படும் லென்ஸ் கண்ணாடிகளை பொருத்துதல் வேண்டும்.

18) வீட்டில் உள்ள அதிக அளவிலான பணம், நகை ஆகியவற்றைப் பற்றி அந்நிய நபர்களிடம் பேசுதல் கூடாது. மேலும் அடுத்தவர்கள் பார்வையில் படும்படியாக வைத்தல் கூடாது.

19) வீட்டில் குடியிருப்பவர்களின் முன்விபரங்களை அறிந்திருத்தல் அவசியம்.

20) வீட்டின் சாவியை ஜன்னல் ஓரம், கதவின் மேல் வைத்து விட்டு வெளியில் செல்ல கூடாது.

21) வீட்டின் சாவி தொலைந்து போனால் பழைய பூட்டை மாற்றி விட வேண்டும்.

22) வீட்டில் வேலை பார்க்கும் நபர்களின் முன்பாக வீட்டில் உள்ள பணம் மற்றும் நகை விபரங்களை பேசுதல் கூடாது.

23) வீட்டில் உள்ள ஏணியை பின்புறமாக வைத்தல் கூடாது.

24) வாடகைக்கு கார், பொருட்கள் ஆகியவை எடுக்கும் பொது அவர்களைப் பற்றிய முன்விபரங்கள் அறிந்திருத்தல் வேண்டும்.

25) இரும்பு கிரில் வடிவிலான கதவுகளை அமைத்தல் வேண்டும்.

காவல்துறையால் பரிந்துரைக்கப்படும் சில முக்கிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள்

1) தங்களைப் பற்றிய விபரங்களை அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் பதிந்திருத்தல் வேண்டும்.

2) வேலைக்கு ஆட்களை அமர்த்தும் போது அவர்களைப் பற்றிய விபரங்கள், போட்டோக்கள், முகவரி மற்றும் இதர விபரங்களை வாங்கி வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

3) பதிவு செய்யப்பட்ட ஏஜெண்டுகள் மூலமாக வேலையாட்களை தேர்வு செய்தல் வேண்டும்.

4) நன்கு பிரகாசமான வெளிச்சம் தரும் பல்புகளை வீட்டின் முன்புறம் பொருத்துதல் வேண்டும்.

5) தங்களின் விலையுயர்ந்த நகைகள் மற்றும் பணத்தை வங்கிகளில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்தல் நலம்.

6) ஏதேனும் சந்தேக நபர்கள் நடவடிக்கை குறித்து அறிந்தால் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.

7) தங்கள் வீடுகள் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் போன் நம்பர் அறிந்திருத்தல் மிகவும் அவசியம்.

மூத்தகுடிமக்களின் அவசர உதவிக்கு சென்னை மாநகரக் காவல் போன் : 1090 முக்கிய தொடர்புக்கு காவல் கட்டுபாட்டு அறை : 100 தீயணைப்பு துறை : 101 அவசர ஆம்புலன்ஸ் தேவைக்கு : 108

மேற்படி தொலைபேசி எண்களை தங்களின் மொபைல் போனில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுதல் மிகவும் நன்று. 

by Swathi   on 27 Dec 2014  0 Comments
Tags: Safety Tips   Older Adults Safety Tips   Muthiyor Safety Tips   முதியோர் பாதுகாப்பு குறிப்புகள்           
 தொடர்புடையவை-Related Articles
வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பிற்கான சில முக்கிய விழிப்புணர்வு குறிப்புகள் !! வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பிற்கான சில முக்கிய விழிப்புணர்வு குறிப்புகள் !!
பெண்களே உஷார்... உஷார்... பெண்களே உஷார்... உஷார்...
மழை காலத்தை சமாளிக்க சில டிப்ஸ் மழை காலத்தை சமாளிக்க சில டிப்ஸ்
ஏ.டி.எம் மையங்களில் அரங்கேறும் புது வகையான திருட்டு : விழிப்புடன் இருக்க சில டிப்ஸ் !! ஏ.டி.எம் மையங்களில் அரங்கேறும் புது வகையான திருட்டு : விழிப்புடன் இருக்க சில டிப்ஸ் !!
சாலையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை ! சாலையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.