எப்பொழுதும் சுறுசுறுப்பும் தெய்வ சிந்தனையும் எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிக்கும் திறனும் உடைய உங்கள் மிதுன லக்னத்திற்கு குருபகவான் 4ம் இடத்திலும் சனி 7ம் இடத்திலும் 3ம் இடத்தில் ராகுவும் 3ம் இடத்தில் கேதுவும் வருட ஆரம்பத்தில் சஞ்சாரம் செய்கிறார்கள். உங்கள் லக்னத்திற்கு 3ம் இடத்தில் ராகு பகவான் சஞ்சாரம் செய்வது புதிய முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பும் அதனால் நன்மையும் ஏற்படும். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்கள் சாதகமாக அமையும். சமூகத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் கூடும். 2ம் விட்டதிபதியாக சந்திரன் வருவதால் தேவையான பண வரவு வந்த வண்ணம் இருக்கும். இதுவரை இருந்த பொருளாதார நெருக்கடி குறைந்து பணப்புழக்கம் சாதகமாக இருந்து வரும்.
பேச்சில் இதுவரை இருந்துவந்த தடைநீங்கி இனிமையாகப் பேசப் பழக வாய்ப்புகள் வந்து சேரும். அதே சமயம் சந்திரன் 2ம் விடு அதிபதியாக வருவதால் தேவையற்ற பிரச்சனைகளைப் பற்றி பேசுதல் கூடாது. 3ம் இடத்தில் ராகு சகோதர சகோதரர்களால் நன்மையும் அதே சமயம் அவர்களால் தேவையற்ற மனவருத்தங்களும் ஏற்பட்டு விலகும். சொத்துக்கள் ஏதேனும் இருப்பின் ஆரம்பத்தில் ஒரு சிலருக்கு விற்க வேண்டியது வரும். விற்றதிற்குப் பின் மறுபடியும் சொத்து வாங்க வேண்டியது வரும். அம்மாவின் அன்பும் ஆதரவும் கிட்டும். வேலையின் நிமித்தமாக இடமாற்றம் அமையும். வீடு மாற சந்தர்ப்பம் ஒரு சிலருக்கு கிட்டும்.
அடிக்கடி டூர் போக சந்தர்ப்பமும் விருந்து கேளிக்கைகளில் ஈடுபாடும் அதிகரிக்கும்இ காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் ஒரு சிலருக்கு திருமணத்திலும் முடிய வாய்ப்புகள் வந்து சேரும். பார்க்கும் வேலையில் அதிகக் கவனம் தேவை. தேவையில்லாமல் வேலையை விடுதல் கூடாது. வழக்குகள் சாதகமாக அமையும். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அமையும். தேவையில்லாமல் கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது. எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். யாரையும் நம்பி எந்த வேலையும் ஒப்படைக்கக் கூடாது. வண்டி வாகனங்களில் எச்சரிக்கை தேவை. தந்தையாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். நண்பர்களால் நன்மையும் உதவியும் கிட்டும். தாய்மாமன்களின் ஆதரவு கிட்டும். குழந்தைபாக்யம் அமைய வாய்ப்புகள் அமையும்.
வேலை அல்லது உத்யோகம் (JOB)
இதுவரை வேலையில்லாமல் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை அமைந்தாலும் குரு மற்றும் ராகு கேது பெயர்ச்சிக்குப்பின் வேலையில் ஒரு மாற்றம் அமையும். நீங்கள் பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழங்குங்கள். உயரதிகாரிகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். எனவே அவர்கள் விஷயத்தில் சற்று கவனம் தேவை. ஒரு சிலருக்கு வேலையின் நிமித்தமாக வெளியூர்இ வெளிநாடு செல்ல வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமையும். முதலில் கிடைத்த வேலையில் அமர்ந்து அதன்பின் திருப்தியான வேலையைத் தேடுதல் நலம்.
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
3ம் இடத்தில் ராகு சஞ்சாரம் சிறுதொழில்இ குறுந்தொழில்கள் சாதகமாக அமையும். கமிஷன்இ ஏஜென்ஸிஇ கான்ட்ராக்ட்இ கன்சல்டன்ஸிஇ புரோக்கர்ஸ்இ ரியல் எஸ்டேட்இ போக்குவரத்து தகவல் தொடர்பு நன்கு அமையும். இத்துறைகள் ஏற்றமடையும். சாலையோர வியாபாரம்இ உணவுஇ ஓட்டல்இ ஆடைஇ ஆபரணம் பிளாஸ்டிக் தொழில் லாபகரமாக அமையும். உற்பத்தி செய்தல் வேண்டும். ஷேர் மார்க்கெட்இ லாட்டரிஇ கிளப்இ சூதாட்டம் போன்றவை சுமாராகவே இருந்து வரும். இரும்பு எஃகு சிமெண்ட் மருத்துவம் சுமாராக இருந்து வரும். ஏற்றுமதி இறக்குமதி சாதகமாக இருந்து வரும். கப்பல் மீன்பிடித் தொழில் நீர்இ உப்புஇ வியாபாரம் சீராக இருந்து வரும். விஞ்ஞானம் உரம்இ கெமிக்கல் ஏற்றமுடன் இருந்து வரும். ஒரு சிலருக்கு கூட்டுத் தொழில் செய்ய வாய்ப்புகள் வந்து சேரும்.
விவசாயம்
விவசாயம் சற்று சுமாராகவே இருந்து வரும். விளைச்சல் ஓரளவு சாதகமாக இருந்து வரும். எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். எதிர்பார்த்த மானியங்கள் வந்து சேர வாய்ப்புகள் உண்டு. பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்க வாய்ப்புகள் அமையும்.
அரசியல்
அரசியல் சாதகமாக இருந்து வரும். எதிர்பார்த்த பட்டம் பதவிகள் பெற ஒரு சிலருக்கு வாய்ப்புகள் தாமகவே வந்து சேரும். சமூகத்தில் சற்று மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். பணவரவுகள் தாரளமாக இருந்து வரும்.
கலைஞர்கள்
புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் பொருள்கள் வந்து சேரும். விருது மற்றும் பரிசுகள் பெற ஒரு சிலருக்கு சந்தப்பங்கள் வாய்க்கும். புதிய நட்பு வட்டாரம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு கடன் வாங்கி பொருட்கள் வாங்க வாய்ப்புகள் வந்து சேரும். தேவையற்ற பேச்சுகளைக் குறைத்தல் வேண்டும். தேவையற்ற கடன்களைத் தவிர்த்தல் நலம்.
மாணவர்கள்
தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. அன்றாடப் பணியை அன்றே செய்தல் நலம். ஞாபக சக்தியை அதிகரித்துக் கொள்ளவும். விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைப்பதில் சற்று போராட்டம் அமையும். அதே சமயம் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்வி பயில வாய்ப்புகள் ஒரு சிலருக்கு வந்து சேரும். கல்விக் கடன்கள் ஒரு சிலருக்கு சீக்கிரம் வாய்ப்புகள் வரும்.
பெண்கள்
வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அதே சமயம் வேலையில் ஒரு திருப்தியற்ற நிலை இருந்து கொண்டேயிருக்கும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடாமல் அடுத்த வேலை கிடைத்த பின் விடுதல் நலம். வீட்டில் சுபகாரியங்கள் இனிதே நடந்தேற வாய்ப்புகள் வந்து சேரும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்யம் அமையும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சிகரமாக இருக்கும். பேச்சில் அதிக நிதானம் தேவை. குடும்பத்தில் புது உறுப்பினர் வருகை அதிகரிக்கும். அடிக்கடி அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்யத்தில் சற்று கவனம் தேவை. கணவன் மனைவு உறவு சற்று சுமாரகவே இருந்து வரும். சுயதொழில் புரிபவர்கள் முதலீட்டில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும்.
உடல் ஆரோக்யம்
உடலில் சளித்தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளல் அவசியம். உடலில் அசதிஇ சோர்வு இவை வராமல் சுறுசுறுப்பாக இருத்தல் வேண்டும். உடலில் அடிவயிறு கால் சிறுநீரகப் பிரச்சனை வராமல் காத்தல் நலம்.
அதிர்ஷ்ட எண் : 9, 5 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, பச்சை அதிர்ஷ்ட நாள் : செவ்வாய், புதன்கிழமை அதிர்ஷ்ட இரத்னம் : பவளம், மரகதப் பச்சை
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை “மஹாலக்ஷ்மியை” வணங்கி வருதல் நலம்இ சனிக்கிழமைஇ “சனிபகவான்” மற்றும் “சிவனை” வழிபடுதல் சிறப்பாகும்.
|