LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF

வளைகுடா நாடு ஓமனில் இந்தியர்களின் வாழ்வியல் முறை - பகுதி 1

 

 - இங்கு நாம் இந்தியாவின் எல்லா மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் பழகும் வாய்ப்பு மிக அதிகம், அது இந்தியாவிலேயே கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகும். பெரும்பாலும் தென்னிந்தியர்களுக்கு வடகிழக்கு மற்றும் வங்காளம் மேலும் பீகாரைச்  சேர்ந்தவர்களுடன் பழகும் வாய்ப்பு மிகக் குறைவு. 
  - அதேபோல நம்முடைய அண்டை நாடுகளான இலங்கை வங்கதேசம் பாகிஸ்தான் முதலியவர்களுடன் பழகும் வாய்ப்பும் இங்கு மிக அதிகம். 
   - மற்றொன்று, பிலிப்பைன்ஸ் போன்ற பிற ஆசிய நாட்டு மக்களுடன் பழகும் வாய்ப்பு மிக மிக அதிகம். 
   
- வளைகுடா நாட்டுக்கு மிக  அருகாமையில் உள்ள கண்டம் ஆப்பிரிக்கா, இதனால் இங்கு ஆப்பிரிக்க நாட்டின் மக்களை காண்பது, அவர்களுடன் பணிபுரிவது என்பது இங்கு மற்றொரு வாய்ப்பு. 
 
  - சற்றேறக்குறைய நம் இந்திய நாட்டின் உணவு மற்றும் ஆடை, சீதோசனம், பழக்கவழக்கங்கள் எல்லாவற்றிலும் ஒத்திருப்பதை இங்கு காணலாம். 
   
- இங்கு நம் இந்திய மக்கள் எல்லா நிலைகளில் உள்ள வேலைகளில் மணி அமர்த்தப்படுகிறார்கள்.  துப்புரவு பணி, செவிலியர்கள் மருத்துவர்கள் ஆசிரியர்கள் விமானிகள் மற்றும் வீட்டு பணிப்பெண்கள் போன்ற எல்லா வேலைகளிலும் மிகத் திறமையானவர்களே பணி அமர்த்தப்படுகிறார்கள். 
- நன்கு பழக தெரிந்தவராகவும், ஒன்றுக்கு மேற்பட்ட இந்திய மொழிகள் மற்றும் ஆங்கில அறிவு மற்றும் உள்ளூர் மொழிகள் தெரிந்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. 
- இங்கு சுத்தம் மிகவும் இன்றியமையாதது அது எல்லா பணியாளர்களும் கடைப்பிடிக்க வேண்டியதாக உள்ளது. 
  •  இங்கு நாம் இந்தியாவின் எல்லா மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் பழகும் வாய்ப்பு மிக அதிகம், அது இந்தியாவிலேயே கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகும். பெரும்பாலும் தென்னிந்தியர்களுக்கு வடகிழக்கு மற்றும் வங்காளம் மேலும் பீகாரைச்  சேர்ந்தவர்களுடன் பழகும் வாய்ப்பு மிகக் குறைவு. 
  •  அதேபோல நம்முடைய அண்டை நாடுகளான இலங்கை வங்கதேசம் பாகிஸ்தான் முதலியவர்களுடன் பழகும் வாய்ப்பும் இங்கு மிக அதிகம். 
  •  மற்றொன்று, பிலிப்பைன்ஸ் போன்ற பிற ஆசிய நாட்டு மக்களுடன் பழகும் வாய்ப்பு மிக மிக அதிகம்.    - வளைகுடா நாட்டுக்கு மிக  அருகாமையில் உள்ள கண்டம் ஆப்பிரிக்கா, இதனால் இங்கு ஆப்பிரிக்க நாட்டின் மக்களை காண்பது, அவர்களுடன் பணிபுரிவது என்பது இங்கு மற்றொரு வாய்ப்பு.    - சற்றேறக்குறைய நம் இந்திய நாட்டின் உணவு மற்றும் ஆடை, சீதோசனம், பழக்கவழக்கங்கள் எல்லாவற்றிலும் ஒத்திருப்பதை இங்கு காணலாம்.    
  • இங்கு நம் இந்திய மக்கள் எல்லா நிலைகளில் உள்ள வேலைகளில் மணி அமர்த்தப்படுகிறார்கள்.  துப்புரவு பணி, செவிலியர்கள் மருத்துவர்கள் ஆசிரியர்கள் விமானிகள் மற்றும் வீட்டு பணிப்பெண்கள் போன்ற எல்லா வேலைகளிலும் மிகத் திறமையானவர்களே பணி அமர்த்தப்படுகிறார்கள். 
  •  நன்கு பழக தெரிந்தவராகவும், ஒன்றுக்கு மேற்பட்ட இந்திய மொழிகள் மற்றும் ஆங்கில அறிவு மற்றும் உள்ளூர் மொழிகள் தெரிந்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. 
  • இங்கு சுத்தம் மிகவும் இன்றியமையாதது அது எல்லா பணியாளர்களும் கடைப்பிடிக்க வேண்டியதாக உள்ளது. 
  • இங்குள்ள மக்களுக்கு மிகுந்த இறை நம்பிக்கையும் மேலும் கட்டுப்பாடான இறை வழிபாட்டு முறைகளை கடைப்பிடிப்பவர்கள் ஆக உள்ளதால், தீய பழக்கவழக்கங்கள் மற்றும் அதர்ம காரியங்கள் செய்வதற்கு பயப்படுவார்கள். 
  • உலகத்திற்கே தெரிந்த உண்மை, இங்கு சட்டங்கள் மிகவும்  கண்டிப்பானவை. இதனால் தண்டனைக்கு பயந்து தவறு செய்ய பொதுவாக பெரும்பாலானவர்கள் துணிய மாட்டார்கள். 
  •  
  • சமையல் எரிவாயு மற்றும் குடிநீர், மின்சாரம், சாலை போக்குவரத்து போன்ற அத்தியாவசியமான தேவைகளுக்கு எப்பொழுதுமே பற்றாக்குறை இல்லை. இவை எல்லாமே நல்ல தரத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. 
  • அதிலும் குறிப்பாக வியாபாரம் செய்பவர்கள் முறைகேடு செய்வது என்பது  இங்கு காணவே முடியாது.  பச்சை மிளகாய் முதல் தங்கம் வரை எல்லாவற்றிலும் தரக்கட்டுப்பாடு பின்பற்றப்படுவதால், அதனால் தான் உலக மக்கள் இங்கு தங்க ஆபரணங்களை வாங்குவதை விரும்புகிறார்கள்.
  • போராட்டம், பஸ் எரிப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் என்று எதுவும் நடக்காததால் மிக அமைதியாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியும்.
  • இங்கு குடிநீர்  குழாய்களின் பராமரிப்பு மணி முனிசிபாலிட்டி மேற்கொள்ளப்பட்டால், அரசாங்கமே அருகில் இருக்கும் மசூதியில் தண்ணீர் லாரியுடன் மக்களுக்கு கொடுப்பதற்காக சேவையில் 24 மணி நேரமும் இருக்கும். தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தால், வீட்டிற்கு வந்து நம்முடைய  தண்ணீர் தொட்டியை இலவசமாக நிரப்பி விட்டுச்  செல்வார்கள். எதற்கு இலவசம் என்ற வார்த்தையை உபயோகப் படுத்துகிறேன் என்றால் இங்கு தண்ணீருக்கு மீட்டர் ஒவ்வொரு வீட்டிலும் பொருத்தப்பட்டு அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
  • அதைப்போலவே இரவு நேரங்களில் முடிந்தவரை எல்லா சாலைகளும் செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எந்த ஒரு  நெடுஞ்சாலையும் புதிதாக அமைக்கும் பணி  முடிந்தவுடன் அமைச்சர்களுக்கு காத்திராமல் உடனே மக்களுக்கு திறந்துவிடப்படுகிறது. சாலைகளுக்கு கட்டணம் கிடையாது. 
  • இங்கு எல்லா மத வழிபாடுகளுக்கும் அனுமதி உண்டு, ஆனால் அது பொதுமக்களையும் பொது இடத்தையும் ஆக்கிரமிப்பு இல்லாமல் அமைதியான முறையில் இருத்தல் மிகவும் அவசியம்.

 

by   on 02 Sep 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையில் புத்தாண்டு -ஆடியில் ஆடிப் பெருக்கு -கார்த்திகையில் விளக்குத் திருவிழா -தையில் பொங்கல் சித்திரையில் புத்தாண்டு -ஆடியில் ஆடிப் பெருக்கு -கார்த்திகையில் விளக்குத் திருவிழா -தையில் பொங்கல்
சித்திரையா? தையா? தமிழ் புத்தாண்டு சிக்கல்கள்! சித்திரையா? தையா? தமிழ் புத்தாண்டு சிக்கல்கள்!
*ஏன் திருமணம் தாமதமாகிறது?* *ஏன் திருமணம் தாமதமாகிறது?*
பண்டைத் தமிழன் வேளாண்மை செய்யத் தொடங்கியபோதே பருவச்சுழற்சியைக் கணிக்கக் கற்றுக் கொண்டான் பண்டைத் தமிழன் வேளாண்மை செய்யத் தொடங்கியபோதே பருவச்சுழற்சியைக் கணிக்கக் கற்றுக் கொண்டான்
தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர் வந்த வரலாறு-பிபிசி தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர் வந்த வரலாறு-பிபிசி
தமிழர் வேளாண் மரபு!! சித்திரைப் புத்தாண்டில் பொன்னேர் பூட்டி, ஆடிப்பட்டம் தேடி விதைத்து, கார்த்திகையில் களையெடுத்து, தையில் அறுவடை செய்வத் தொடங்குவது!! தமிழர் வேளாண் மரபு!! சித்திரைப் புத்தாண்டில் பொன்னேர் பூட்டி, ஆடிப்பட்டம் தேடி விதைத்து, கார்த்திகையில் களையெடுத்து, தையில் அறுவடை செய்வத் தொடங்குவது!!
தொட்டதற்கெல்லாம் விவாகரத்து  - குடும்ப அமைப்பு என்னவாகும்? தொட்டதற்கெல்லாம் விவாகரத்து - குடும்ப அமைப்பு என்னவாகும்?
மிக நுட்பமான உறவுச் சிக்கல்களில் ஒன்று முன்னாள் காதல் பிரச்சினை. மிக நுட்பமான உறவுச் சிக்கல்களில் ஒன்று முன்னாள் காதல் பிரச்சினை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.