LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF
- தமிழ் வழி வாழ்வியல்

பண்டைத் தமிழன் வேளாண்மை செய்யத் தொடங்கியபோதே பருவச்சுழற்சியைக் கணிக்கக் கற்றுக் கொண்டான்

பண்டைத் தமிழன் வேளாண்மை செய்யத் தொடங்கியபோதே பருவச்சுழற்சியைக் கணிக்கக் கற்றுக் கொண்டான். பருவச்சுழற்சியை அறியாமல் வேளாண்மையும் இல்லை, கடற்போக்குவரத்தும் இல்லை.
தமிழ்ப் பருவங்கள் இயல்பாக, வளர்ச்சியில் தொடங்கி முதிர்ச்சியில் முடிகின்றன. இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறு பருவங்கள். பருவங்களின் தொடக்கம் இளவேனில்.
இந்தப் பருவங்களோடு ஒட்டியவைதாம் மாதக்கணக்கும். பருவங்களின் தொடக்கமும் ஆண்டின் தொடக்கமும் ஒன்றே - இளவேனில். இளவேனிலின் தொடக்கத்தைத்தான் பிற்காலத்தில் சித்திரைத் தொடக்கம் என்றழைத்தார்கள்.
இதை மறுத்து, தையில் பருவம் தொடங்குகிறது, தையில்தான் புத்தாண்டு என்பது வேளாண்மைப் பண்பாட்டைப் புரிந்து கொள்ளாத தப்புக்கணக்கு. அரசியலுக்காகப் பண்பாட்டைப் புரிந்து கொள்ளாத பிழை. அறுபதாண்டுச் சுழற்சிக் கணக்கு என்பதும்கூடப் பாபிலோனியர்களிடமிருந்தே, சிந்து சமவெளிக் காலத்திலேயே வந்திருக்க வேண்டும். ஆண்டுகளுக்குப் பெயரிட்டதும், துல்லியமாகக் கணக்கிட்டதும் பிற்காலத்தில் வந்திருக்க வேண்டும். ஆனால் பருவச்சுழற்சி கணக்கு மிகப் பழமையானது. அதனால்தான் இன்று கம்போடியாவிலிருந்து இந்தியா வரைக்கும் பற்பல பண்பாடுகள் ஆண்டைத் தொடங்குகிறோம். இது அரசியல் அல்ல, பண்பாடு, வரலாறு.
 
 
 
 
-------------
Nethaji
ஒரு காலத்தில் ஐரோபபாவில் ஏப்ரல் மாதத்தில்தான் புத்தாண்டு கொண்டாடினார்கள். பின்னர் அது மாற்றப்பட்டது.. அங்கேயும் ஏப்ரல் மாதத்தை விட்டுவிலகாமல் தூக்கிபிடிக்கும் ஒரு இனக்குழுக்கள் இருந்தனர். அந்த கருத்தை தூக்கிபிடிப்பவர்களை கிண்டல் செய்யும் விதமாக தோன்றியதுதான் " ஏப்ரல் பூல்"..அதுவே இன்று உலகம் முழுவதும் ஏப்ரல் பூல் (1)தினமாக கொண்டாடபடுகிறது என்ற ஒரு கருத்தும் உண்டு..
தமிழ் மண்ணில்
#தை பிறந்தால் #வழி பிறக்கும்" எனும் முதுமொழி காலம் காலமாக உண்டு இதை "புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்" என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும். இந்த கருத்துகளை கொண்ட முது மொழிகள் பல்வேறு நாடுகளிலும் புதுவருட துவக்கத்தில் உண்டு என்பது குறிப்பிடதக்கது...
 
 
Pandiyaraja Paramasivam
கார் காலத் தொடக்கமான ஆவணிதான் புத்தாண்டுத் தொடக்கம் என்பாரும் உளர்.
 
Pandiyaraja Paramasivam ஆவணி ஆண்டின் தொடக்கமாக இருந்ததை ஐயா ந.மு. வேங்கடசாமி அவர்கள் குறிபிட்டுள்ளார்…!
 
மணி மணிவண்ணன்
Rengasamy Kumaran இதைப் பேராசிரியர் இலக்குவனாரும் தம் தொல்காப்பியம் - ஆங்கில மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் முல்லைத் திணையையும் கார் காலத்தையும் வரிசையில் முதன்மையாகக் குறிப்பிட்டதால் அதுவே ஆண்டின் வருகையாக இருந்திருக்கலாம் என்பதும் ஒரு கருத்து.
 
 
Rengasamy Kumaran
மாசியும் பங்குனியும் மத்தளக்கொட்டு; (ஊர் விழாக்கள்) சித்திரை பொறந்தோன குப்புறக் கொட்டு…தஞ்சையில் கேட்ட பழமொழி..!
 
மணி மணிவண்ணன்
பெரும்பொழுதுக்காலம் பற்றி "தொல்காப்பியம் காட்டும் காலம்" என்ற நூலில் பேரா. ந. சுப்பு ரெட்டியார் எழுதியது. பக்கம்: 15
 
மணி மணிவண்ணன்
Veeramadhavan Sivaraman பண்டைத் தமிழர்களின் காலக்கணக்கு "பெரும்பொழுது" என்றுதான் இருந்திருக்கிறது. மாதப்பெயர்களும், ஆண்டுப் பெயர்களும் அவற்றைத் துல்லியமாகக் கணிக்கும் நுட்பத்தை வட வல்லுநர்கள் கொண்டு வந்த பிறகு மாறியிருக்க வேண்டும். 7 நாள் வாரம் என்பது பாபிலோனியர்கள் வகுத்தது. எப்படி அது உலகெங்கும் பரவியதோ, எப்படி வார நாட்களின் பெயர்கள் பெரும்பாலான மொழிகளில் ஒரே கோளின் பெயரையும், சூரியனையும் சந்திரனையும் சுட்டுகிறதோ அதே போல் ஆண்டுக்கணக்கும் மாதப் பெயர்களும் வந்திருக்க வேண்டும். அவை தமிழ் போல மாற்றப்பட்டிருக்கின்றன, ஆனால் தமிழ்ப்பெயர்கள் அல்ல.
 இரவி கார்த்திகேயன்
பழங்குடி மக்களிடம் தொடக்கத்தில் மழைக்காலத்தை தொடக்கமாக வைத்து பரூவகாலத்தை வகுத்தனர். வேளாண் சமூக வளர்ச்சியில் வணிகம் வளர்ந்த சூழலில் அறுவடை காலத்தை ஆண்டின் தொடக்கமாக காணமுடியும்
ரிக்வேத சதபதபிரமண பாடல் வரிகள் தேவர்களும் அசுரர்களூம பற்றி குறிப்பிடும்போது தேவர்கள் விதைக்கும் நேரம் என்ற காலத்தில் அசுரர்கள் அறுவடை செய்தார்கள் அதற்கு பருவகாலங்கள் துணைபுரிந்தன என்று குறிப்பிட்டதைகாணலாம்நிலவைவைத்து ஆண்டுகளுக்கு வைதீகம் சார்ந்து மா சூரியனை வைத்து ண்டு கணக்கு இருப் பதை கூறாமல் அரசியல் கணக்கு என்பதுமடைமாற்றுவது
மணி மணிவண்ணன்
இரவி கார்த்திகேயன் சரி, வாருங்கள். சித்திரை முதல் நாளுக்கும் த்ஐ முதல் நாளுக்கும் காலக்கணக்கீட்டு முறையில் என்ன வேறுபாடு? இரண்டுமே ஒரே முறைப்படிதான் மாதத்தின் முதல் நாளைக் கணக்கிடுகின்றன. இரண்டும் ஒரே மாதிரியான இராசியைத்தான் கணக்கில் கொள்கின்றன. இரண்டும் ஒரே சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் காலக்கணக்கைச் செய்கின்றன.
நீங்கள் சொல்வது போல் தை முதல்நாள் வாக்கில் புத்தாண்டு என்றே இருந்தாலும் திராவிடர்கள் எப்படித் தை முதல் நாளைக் கணிப்பீர்கள்? எப்படி ஆண்டுதாண்டுதலையும் பருவங்களோடு ஒத்திசையும் காலக்கணக்கையும் வகுப்பீர்கள்? சமக்கிருத வாசனையே இல்லாமல் கிழமை, திங்கள், ஆண்டுக்கணக்குகளை வகுக்காமல் திராவிட இயக்கம் என்ன பேசினாலும் அது சமக்கிருதக் கணக்குக்கு உறை மாற்றிய வெற்று முழக்கம் மட்டுமே.
இதுவாவது புரிகிறதா?
by Swathi   on 14 Apr 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையில் புத்தாண்டு -ஆடியில் ஆடிப் பெருக்கு -கார்த்திகையில் விளக்குத் திருவிழா -தையில் பொங்கல் சித்திரையில் புத்தாண்டு -ஆடியில் ஆடிப் பெருக்கு -கார்த்திகையில் விளக்குத் திருவிழா -தையில் பொங்கல்
சித்திரையா? தையா? தமிழ் புத்தாண்டு சிக்கல்கள்! சித்திரையா? தையா? தமிழ் புத்தாண்டு சிக்கல்கள்!
*ஏன் திருமணம் தாமதமாகிறது?* *ஏன் திருமணம் தாமதமாகிறது?*
தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர் வந்த வரலாறு-பிபிசி தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர் வந்த வரலாறு-பிபிசி
தமிழர் வேளாண் மரபு!! சித்திரைப் புத்தாண்டில் பொன்னேர் பூட்டி, ஆடிப்பட்டம் தேடி விதைத்து, கார்த்திகையில் களையெடுத்து, தையில் அறுவடை செய்வத் தொடங்குவது!! தமிழர் வேளாண் மரபு!! சித்திரைப் புத்தாண்டில் பொன்னேர் பூட்டி, ஆடிப்பட்டம் தேடி விதைத்து, கார்த்திகையில் களையெடுத்து, தையில் அறுவடை செய்வத் தொடங்குவது!!
தொட்டதற்கெல்லாம் விவாகரத்து  - குடும்ப அமைப்பு என்னவாகும்? தொட்டதற்கெல்லாம் விவாகரத்து - குடும்ப அமைப்பு என்னவாகும்?
மிக நுட்பமான உறவுச் சிக்கல்களில் ஒன்று முன்னாள் காதல் பிரச்சினை. மிக நுட்பமான உறவுச் சிக்கல்களில் ஒன்று முன்னாள் காதல் பிரச்சினை.
புத்தாண்டு வாழ்த்துகள் புத்தாண்டு வாழ்த்துகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.