- புத்தாண்டு நம் அனைவருக்கும் ஏற்றத்தையும் , மகிழ்ச்சியையும், நிறைவையும் அள்ளித்தரும் ஆண்டாக அமையட்டும்!
- சிந்திப்பதை, கனவுகாண்பதை, திட்டமிடுவதை செயல்வடிவம் கொடுக்கும் ஆண்டாக அமையட்டும்!
- நல்ல நட்புகளைப் பெருக்கி, உறவுகளை மேம்படுத்தி ஏற்றம் காணும் ஆண்டாக அமையட்டும்!
- புதிய திசையில் பயணிக்க சிந்தனைத் தெளிவை, முடிவெடுக்கும் திறனை கொடுக்கும் ஆண்டாக அமையட்டும்!
- உடல்நலம், நிறைசெல்வம், உயர்புகழ் , மெய்ஞானம் தரும் ஆண்டாக அமையட்டும்!
- நான், எனது , என் குடும்பம் என்று இல்லாமல், நாம், நமது, நம் மண்,நம் மக்கள், நம் நாடு , நம் உலகம் என்று சிந்தனை விரியும் ஆண்டாக அமையட்டும்!
- ஈட்டும் செல்வத்தின் ஒரு பகுதியை நம்மை ஏற்றிவிட்ட இந்த சமூகத்திற்கு தொண்டுசெய்யும் ஈகை எண்ணம் பெருக்கும் ஆண்டாக அமையட்டும்!
- பிள்ளைகளை வசதி வாய்ப்புகள், செல்வத்தை மட்டும் முன்னிறுத்தி வளர்த்துவிடாமல் வாழ்வியல் உண்மைகளை, சக மனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் பக்குவம் கொண்டவர்களாக வளர்க்கும் ஆண்டாக அமையட்டும்!
- ஏற்றம் வந்தவுடன் தன் சுய அடையாளத்தை மறந்துவிடாமல் , கடந்துவந்த பாதையைபெருமையாகக் கருதி அதில் வளர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு கருவியாக தானும் இருக்கும் ஆண்டாக அமையட்டும்!
- சமூகத்தின் மீது அளவு கடந்த பேரன்பும், இயற்கை பிரபஞ்சப் பேராற்றலை உணர்ந்துகொள்ளும் உள்ளுணர்வைப் பெரும் ஆண்டாக அமையட்டும்!
- நாம் அனுபவிக்கும் உரிமைகளும், சுந்தரமும் பலரது தியாகம், இன்னுயிரை ஈந்து பெற்றது என்பதை உணர்ந்து அனைவருக்கும் நன்றியுடையவர்களாக இருக்கும் ஆண்டாக இவ்வாண்டு அமையட்டும்!
- தற்சார்பு வாழ்வியலை மேற்கொண்டு நமக்குக் கிடைக்கும் தூய நீர், காற்று, உணவு போன்றவை நம் பிள்ளைகளுக்கு கிடைக்கச்செய்ய முதல் அடியை எடுத்துவைக்கும் ஆண்டாக அமையட்டும்!
- நல்ல நூல்களை வாசிக்கும் வாய்ப்பும் , சான்றோர் தொடர்புகளும் பெருகும் ஆண்டாக இவ்வாண்டு அமையட்டும்.
- திருக்குறள் நூல் நம் வீடுகளில் இருக்கவேண்டும், குடும்பத்தோடு வள்ளுவத்தின் வாழ்வியல் நெறியை உள்வாங்கி பின்பற்றி மேலும் உயர வாய்ப்பமைந்த ஆண்டாக அமையட்டும்!
|