LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF

ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-20-11-2015

பெயர் : M.ராம், S/o.முத்துச்சாமி, பிறந்த தேதி : 4.3.1983, பிறந்த நேரம் : பகல் மணி 11.43, பிற்ந்த இடம் : வள்ளியூர், குரு மஹா தசை இருப்பு 12-1-19

தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் நான் வேலை பார்ப்பேனா? சுயதொழில் தொடங்கலமா? லாபகரமாக இருக்குமா? என்ன தொழில் செய்யலாம்? சொந்த வீடு வாங்குவேனா?

ரிஷப லக்னம் துலாம் ராசி விசாக நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு தற்பொழுது புதன் தசையில் புதன் புத்தி 17-09-2016 வரை நடப்பில் உள்ளது. புதன் தசை 17 வருஷம் ஆகும். புதன் உங்கள் லக்னத்திற்கு 2,5க்குடையவராகி அவர் 10ம் இடத்தில் அமர்ந்து அவர் 7,12க்குடைய செவ்வாய் சாரம் பெற்று செவ்வாய் 11ம் இடத்தில் அமர்வதால் தாங்கள் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு வருவீர்க்ள் அல்லது வேலையை விட்டு வெளியேற்றப்படுவீர்கள் அல்லது அடிக்கடி கம்பெனி மாறுவீர்கள் கம்பெனி மாறினாலும் வேலையில் திருப்தியில்லாமல் ஒரு நாள் வெளியேறி சொந்தமாகவோ அல்லது கூட்டணியாகவோ சுயதொழில் தொடங்க வாய்ப்பு அமையும். நீங்கள் ஆரம்பிக்கும் சுயதொழில் லாபகரமாக இருக்கும். லாபகரமாக இருக்கும் என்றாலும் நீங்கள் சுயதொழில் ஆரம்பிக்கும் நாள், நட்சத்திரம் இதையெல்லாம் நன்கு பார்த்து நல்ல நாளில் ஆரம்பித்தால் நல்ல லாபம் ஏற்படும்.

என்ன தொழில் செய்யலாம் என்று கேட்டுள்ளீர்கள், என்ன தொழில் உங்களுக்குத் தெரியும் என்று குறிப்பிடவில்லை. ஏனெனில் ஒரு கிரகம் என்றால் சுமார் 60 விதமான தொழில்கள் உள்ளன. எது என்று குறிப்பிட முடியும். உங்களுக்கு தற்பொழுது புதன் தசை நடப்பதால் புதனானது போக்குவரத்து, தகவல் தொடர்பு, செய்தி, பத்திரிக்கை, கமிஷன் ஏஜென்ஸி, புரோக்கர்ஸ், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி இறக்குமதி, உணவுப் பொருட்கள் விவசாயம் இப்படி பலவிதமான தொழில்களைக் குறிப்பிடும். உங்களுக்கு இதில் ஏதேனும் முன் அனுபவம் இருப்பின் அத்தொழிலைச் செய்து லாபம் அடைய முடியும். 15-072020க்குப் பின் 22-05-2021க்குள் சொந்த வீடு அமையும்.

ஜோதிட இமயம் அபிராமி சேகர்

maduraiabiramisekar@gmail.com

9994811158

by Swathi   on 01 Dec 2015  1 Comments
Tags: Suyal Tholil Thodangalama   Sontha Veedu Vanga Mudiyuma   Suya Tholil   Sontha Veedu   வேலை நிரந்தரமாகுமா   சுயதொழில் தொடங்கலாமா   தொழில் லாபம் கிடைக்குமா  
 தொடர்புடையவை-Related Articles
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-20-11-2015 ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-20-11-2015
கருத்துகள்
04-Nov-2017 15:44:49 arun raj said : Report Abuse
ஹாய் சார்,இண்டேறேச்ட் தி பிசினஸ் ற்றவேல் பஸ்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.