|
|||||
அம்ருதபுரியில் ஸ்ரீ நவக்கிரக விநாயகரின் சதுர்த்தி விழா! |
|||||
![]() ஸ்ரீ ராமானுஜரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. வைணவ மரபில் வந்தவர் என்றாலும், ஜாதி, மதம், இனம் பாராமல், "சேர வாரும் ஜகத்தீரே" என்று அனைவரையும் ஒருமுகப்படுத்தியவர். யோகவனம் என்றால் தபோவனம். ஸ்ரீ ராமானுஜரின் பெயரால் அமைந்த யோகவனம் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகில் உள்ள படாளம் கூட்டு ரோட்டிலிருந்து வேடந்தாங்கல் செல்லும் வழியில், 3வது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அம்ருதபுரியில் அமைந்துள்ளது. ஶ்ரீ மத் ஸீதாராம் ஸ்வாமிகளால் உருவாக்கப்பட்டது இந்த யோகவனம். காஞ்சி ஶ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாசியினால் அவர் வழி காட்டிய பாதையில் ஸ்ரீ சீதாராம் சுவாமிகள் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகின்றார். ஸ்ரீ ராமானுஜ யோகவனத்தில் ஸ்ரீநவக்கிரக விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குருவை தலையிலும், சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், சனியை வலது மேல் கையிலும், புதனை வலது கீழ்க்கையிலும், செவ்வாயை வலது தொடையிலும், சுக்கிரனை இடதுகீழ்க்கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சியளிக்கிறார். இவரை வழிபடுவதால், ஒரே நேரத்தில் நவக்கிரகங்களையும் வழிபாடு செய்த பலன் உண்டாகும். அது மட்டுமல்ல இவருக்குப் பின்புறம் ஸ்ரீ யோக நரசிம்மர் காணப்படுவது வேறெங்கும் காண முடியாத தனிச்சிறப்பு. தமிழகத்திலேயே பிரம்மாண்டமாக அமைந்த நவக்கிரக விநாயகர் இவர் மட்டும் தான் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவருக்கு சிறப்பு அபிசேக அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். |
|||||
![]() ![]() |
|||||
![]() ![]() |
|||||
|
|||||
|
|||||
|
|||||
by Swathi on 13 Sep 2018 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|