LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF
- தமிழர் பண்டிகை

சித்திரையை கொண்டாடுவோம்

தமிழ் மரபில் சித்திரை முழுநிலவு நாளில்தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவார்கள். அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும் காலம் என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும்.  மக்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பர். சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடையது. சித்திரைத் திங்களில் கடற்கரை மணல் வெளியில், ஆற்றுப்படுகைகளில் தமிழர்கள் விழா எடுத்து வந்துள்ளனர்.


பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் செய்திகள் சித்திரையின் சிறப்பை பதிவு செய்து வைத்துள்ளன. இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. “சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்” என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார். 


சித்திரை மாதத்தில் வானத்திலே மேகம் சித்திரம் போல இருக்கும். அதனால் ஒப்பனை செய்யப்பட்டிருப்பது போலத் தோன்றும். இக்காலத்தில் ‘சித்திரைக் கார்’ என்னும் நெல் அறுவடை செய்யப்படும். இம்மாதம் மக்களின் உணவை நிறைவு செய்யும் மாதமாக இருப்பதால் சூரியனுக்குப் பொங்கலிட்டு வழிபடும் வழக்கம் இன்று வரை உள்ளது.


சித்திரை மாத முழு நிலவு நாளில் ‘சித்திரைக் கஞ்சி’ வழங்கும் நடைமுறையும்,  காவேரி ஆற்றில் இம்மாதத்தில் ஏற்படும் நீர்ப்பெருக்கிற்கு  ‘சித்திரைச் சிலம்பன்’ எனச் சிறப்புப் பெயரும் இருந்துள்ளது. அனால், இன்று காவிரி கால்வாயாக சுருங்கிவிட்ட நிலையில் அங்கே நீர்ப்பெருக்கு ஏற்படுவது காவிரியில் அல்ல, காவிரி டெல்டா விவசாயிகளின் கண்களில்தான் என்பதை கவலையுடன் பதிவுசெய்கிறேன்.


நமது முன்னோர் இயற்கையின் தொழிற்பாட்டை நன்கு கண்காணித்து வாழ்ந்தனர். ஐம்பெரும் பூதங்களான நீர்,நெருப்பு, காற்று,மண்,  ஆகாயம் என்பவற்றில் சித்திரை மாதத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து அம்மாதத்தைத் தனித்துவமுடையதாகக் கருதி வாழ்ந்துள்ளனர். சித்திரை மாத நிறைமதி நாளில் திருவிழாக்கள் நடத்தினர். சித்திரா பௌர்ணமி, சித்திரைக் கஞ்சி, சித்திரைக் கார், சித்திரைச் சுழி, சித்திரைச் சிலம்பன், சித்திரைக் கதை, சித்திரைக் குழப்பம் என்ற சொற்களின் பயன்பாடு இம்மாதத்தின் சிறப்பை நன்கு விளக்குகிறது.


சித்திரை மாதத்தின் முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகவும் கருதப்பட்டது. தை மாதம் தமிழர் புது வருடத்தின் தொடக்க மாதமாக இருந்ததையும் இலக்கியங்கள் பதிவுசெய்து வைத்துள்ளன. எனவே எதை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது என்ற குழப்பங்கள் தமிழக அரசியலில் இருந்தாலும், சித்திரையும், தை யும் தமிழர்கள் மத்தியில் சிறப்பு பெற்ற மாதங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்றைய அரசியல் தேக்க நிலைமை மாறி எதிர்காலத்தில் தெளிந்த இளைஞர்கள் தமிழர் அரசியலை நிர்ணயிக்கும் காலத்தில், முறையான ஆய்வுகள் நடந்து, தெளிவான தமிழர் வாழ்வியல் சிந்தனைகள் உருவாகும், குழப்பங்கள் தீரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. 


சித்திரை மாதம் குழந்தை பிறக்கக்கூடாது என்று சிலர் கூறுவதுண்டு.அது கோடைகாலத்தை மனதில் வைத்து சொல்லி இருக்கலாம்.  ஆனால் அந்த மாதத்தில் பிறந்த பலரும் உலகப் புகழ் பெற்றிருக்கிறார்கள்.  விக்டோரியா மகாராணி, சார்லி சாப்ளின், ராணி எலிசபெத், மாவீரன் அலெக்சாண்டர், கார்ல் மார்க்ஸ், டார்வின், ஷேக்ஸ்பியர், லெனின், மனோன்மணியம் சுந்தரனார், பாவேந்தர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று வரலாற்றில் நிலைபெற்ற பலர் இந்த சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள்தான்.


எனவே சித்திரையை கொண்டாடுவோம், மகிழ்ச்சியுடன் வாழ்வோம். 

by Swathi   on 06 May 2015  0 Comments
Tags: சித்திரை   Chithirai Thiruvizha   Chithirai Festivals              
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம்
குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம் குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.