|
||||||||
தடம் பதித்த இயக்குநர் சேரன் |
||||||||
இயக்குநர் சேரன் இவர் கே எஸ் ரவிகுமாரிடம் உதவியாளராக இருந்தவர் . ஆனால் அவருடைய பாணி எதையும் பின் பற்றாமல்- தனக்கான ஒரு பாணியை நிலை நிறுத்தி கொண்டவர் என்ற வகையில் இவர் தனித்து தெரிபவர்! இவருடைய பாரதி கண்ணம்மா, பொற்காலம் , ஆட்டோ கிராப் , பாண்டவர் பூமி, வெற்றிக்கொடி கட்டு போன்றவை பரவலாக அனைவராலும் பாரட்ட பட்டவை ! இவர் பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம், இயக்குனராக உருவெடுத்தார் ,அந்த படமே நல்ல கதையமைப்பு கொண்ட படம். இப்படி அருமையான துவக்கத்தை கொண்ட இவர் பின்னாளில் அதிக படங்களை குறைந்த இடை வெளியில் தந்தார். நடிகை பத்மபிரியாவுக்கு நல்ல அறிமுகமும் ராஜ் கிரண் பார்த்திபன் போன்றோருக்கு மறு பிரவேசத்திற்கும் வழி வகுத்தார். மேலும் பார்த்திபன் , வடிவேலு இணையை உருவாக்கி புதிய பாதையை நகைச்சுவையில் அளித்தார். பொற்காலம் படத்தில் மட்பாண்டம் செய்பவர்களின் ஏழ்மை நிலையை விளக்கிஇருப்பார். இதுவும் அனைவராலும் ரசிக்கப்பட்ட படம் வெற்றி கொடிகட்டுக்காக தேசிய விருது பெற்றார் மேலும் பிலிம் பேர் விருது போன்ற விருதுகளும் வாங்கியுள்ளார். அதன் பின் பிரிவோம் சந்திப்போம், யுத்தம் செய், முரண், சென்னையில் ஒருநாள் போன்ற வெளிப்படங்களிலும், ஆட்டோ கிராப், தவமாய் தவமிருந்து பொக்கிஷம் போன்ற தன்னோட படங்களிலும் நடித்தார் . கதைகள் புதிததாக பிடிப்பதில் வல்லவர் என்பதில் ஐயமில்லை. கிராமங்களை, கிராமியத்தை, தமிழ்நாட்டின் அழகை வேறு கோணத்தில் பார்க்கவைக்கும் சாதனை இயக்குநர் சேரன் தமிழுக்குக் கிடைத்த ஒரு சொத்து.
|
||||||||
by Swathi on 19 Oct 2023 0 Comments | ||||||||
Tags: இயக்குநர் சேரன் | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|