LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

மார்கழி மாதத்தின் சிறப்பு !!

இந்து மதத்தை பொறுத்தவரை, மற்ற மாதங்களை விட மார்கழி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திர வல்லுனர்கள் மார்கழி மாதத்தை (சூரியன் தனுசு ராசியில் பிரவேசிப்பதால்) தனூர் மாதம் என்று கூறுகின்றனர். 

 

மார்கழி மாத நாட்கள் அனைத்தும் மிகவும் விசேஷமானவை. நாள்தோறும் சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மேளதாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும். 

 

மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து, வீடுகளை சுத்தம் செய்து, உடல் நீராடி, வீட்டு வாசல்களில் அழகிய கோலங்கள் போடுவார்கள். கோலத்தில் மார்கழி பிள்ளையார் வைத்து புஷ்பங்கள் இட்டு, ஆலயம் சென்று இறைவனை வழிபடுவார்கள். இந்த மாதத்தில் மக்கள் அனைவரும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க பார்க்க முடியும். 

 

மனிதர்களுக்கு ஒரு நாள், 60 நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்). பகல் 30 நாழிகை, இரவு 30 நாழிகை. மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி இரவுக் காலம் முடிகிற தேவர்களின் வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன. மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும். ஒரு நாளின் முக்கியமான பாகம் வைகறைப் பொழுது என்றால் அது மிகையாகாது. 

 

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மார்கழியில்தான் இறைவனை அதிகமாக வழிபடும் நிகழ்ச்சிகள் வருகின்றன. மார்கழி மாதத்தில் நிகழ்ந்த சில புராண நிகழ்வுகளை இங்கு காண்போம்

 

மகாபார யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது. 

 

திருப்பாற்கடல் கடையப்பட்டதும், முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் மார்கழி மாதத்தில்தான். 

 

இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான் என்பது வரலாறு. 

 

எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருமாலை திருப்பாவையால் திருவடித் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம் என்னும் சிறப்பு மிக்க மாதத்தில் தான். இவ்வாறு பல மகத்துவத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது மார்கழி மாதம். 

 

மார்கழி மாத அதிகாலைப் பொழுதில், மக்கள் அனைவரும் காத்திருந்து அம்மையப்பன் அருள்பெற்று சகல காரியங்களும் இடையூறின்றி இனிதே நிறைவேற பிரார்த்தனை செய்கின்றனர். இந்த நேரத்தில்தான் சிதம்பரம் நடராஜர் ஐந்தொழில்களையும் புரிகின்றார். 

 

சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கியமான விஷேசங்களுள் ஓன்று. 

 

ஆன்மிக மலர்ச்சிக்கு சிறந்த மாதமாக கருதப்படும் இந்த மார்கழி மாதத்தில் இறைவனை மனதால் துதித்து போற்றுங்கள்..... எல்லா செல்வங்களையும் பெறுங்கள்.....

by Swathi   on 19 Dec 2013  2 Comments
Tags: Margazhi Month   Margali Masam   Maargazhi Maasam   Margazhi Maasam   மார்கழி மாதம்   மார்கழி   மார்கழி மாத விழாக்கள்  
 தொடர்புடையவை-Related Articles
மார்கழி மாதத்தின் சிறப்பு !! மார்கழி மாதத்தின் சிறப்பு !!
கருத்துகள்
23-Dec-2018 09:36:33 Dharshana said : Report Abuse
Super very very awesome
 
15-Dec-2017 14:16:39 Narayanamurthy said : Report Abuse
மாதங்களில் சிறந்த மாதம் மார்கழி இந்த மாதத்தில் ஏன் திருப்பாவை மார்கழியில் படிக்க வேண்டும் எல்லாம் வல்ல எம் பெருமான் கிருஷ்ணன் பாரத போர் முடியும் போது அர்ஜுனனுக்கு கீதா உபதேசம் செய்து பிறகு பகவான் பார்க்கடலுக்கு ஓய்வு எடுக்க சென்று விட்டாராம் பகவான் உபதேசம் அர்ஜுனனுக்கு சரியாக புரியாமல் போனதால் பெருமான் லட்சிமியை பார்த்து தேவி நீ போய் பூலோகத்தில் அவதரித்து அனைத்து மக்களுக்கு புரியம் படி அன்பே இந்த உலகத்தில் சிறந்தது என்பதனை எடுத்துகாட்டாக செய்து பிறகு எம்மை வந்து அடைவாயாக என்பதனை கூர லட்சுமிதேவி சாமி தங்களுடன் பல அவதாரங்களில் பல இன்னல்களை சந்தித்து விட்டேன் அடியேனை மன்னிக்க வேண்டும் என்று மறுக்குபோது பக்கத்தில் லட்சுமியின் அவதாரமான பூமா தேவி ஆண்டாள் ஆக ஸ்ரீவெள்ளிபுத்தூரில் மார்கழியில் துளசி செடியின் அருகில் அவதரித்தார்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.