வேலை செய்யும் நிறுவனம் சம்பளத்தை தாமதமாக வழங்கினால்
sandhiya - 21 Mar 2014 06:04 AM
நான் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த ஐந்து வருடமாக வேலை பார்த்து வருகிறேன். கடந்த சில மாதங்களாக நான் வேலை செய்யும் நிறுவனம் சம்பளம் தருவதில் தாமதம் செய்கிறது. இதனால் என்னால் டூ வீலருக்கு வாங்கிய கடன் இ.எம்.ஐ.-யை சரியாக கட்ட முடியவில்லை. நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா?
Rajasekar Said : 21 Mar 2014 06:13 AM
பொதுவாக தொழிலாளர் விதிமுறைப்படி சம்பளம் என்பது மாதம் தொடங்கியதில் இருந்து 10-ம் தேதிக்குள் கட்டாயம் தந்துவிட வேண்டும். அப்படி தராத பட்சத்தில் நீங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகம் இருக்கும். அங்கு உங்களின் நிலைமையை விளக்கி புகார் கடிதம் தரவேண்டும். நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தில் நேரில் சென்று ஆய்வு செய்து உங்களுக்கு நிவாரணம் பெற்று தர தொழிலாளர் ஆய்வாளர் நடவடிக்கை எடுப்பார்கள்.