LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

இருப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி ?

நம்மில் பலர் இருப்பிடச் சான்றிதழுக்கும் பிறப்பிடச் சான்றிதழுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறியாமல் குழம்பிக்கொள்கிறோம். 


இருப்பிடச் சான்றிதழ் என்பது வழக்கமாக ஒருவர் எங்கு வசிக்கிறார் என்பதைக் காட்டும் சான்றிதழ் ஆகும். 


பிறப்பிடச் சான்றிதழ் என்பது ஒருவர் எங்கு பிறந்தார், அவர் பிறக்கும் பொழுது அவர் குடும்பம் எங்கு வசித்தது போன்ற தகவல்களைத் தரும் சான்றிதழ் ஆகும். 


இவை இரண்டிற்குமே ஒருவர் விண்ணப்பிக்கும் பொழுது எங்கு வசிக்கிராரோ அந்தப் பகுதி வட்டாட்சியருக்கே விண்ணப்பிக்க வேண்டும். அந்த வட்டாட்சியர் தகுந்த விசாரணை வாயிலாக மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களை உறுதி செய்த பின்னர், மனுதாரருக்கு மேற்படிச் சான்றிதழை வழங்குவார்.


இருப்பிடச் சான்றிதழுக்கான விண்ணப்பத்தினை இந்த முகவரியில் பெறலாம்: http://www.tn.gov.in/appforms/cert-residential.pdf


பிறப்பிடச் சான்றிதழுக்கான விண்ணப்பத்தினை இந்த முகவரியில் பெறலாம்: http://www.tn.gov.in/appforms/cert-nativity.pdf


பொதுவாக இருப்பிடச் சான்றிதழ் என்பது குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு தேவையற்றது. ஆனால், பெரும்பாலான பள்ளி மாணவர்கள் தாங்கள் பள்ளியில் சேர்வதற்குத் தேவையான சான்றிதழ் வாங்கும் பொழுது அதாவது சாதி மற்றும் வருமானச் சான்றிதழ் வாங்கும் பொழுது இருப்பிடச் சான்றிதழையும் வாங்குகின்றனர். 


குடும்ப அட்டையே ஒரு இருப்பிடச் சான்றிதழே ஆகும். குடும்ப அட்டை இல்லாதவர்கள் வேண்டுமென்றால், தனியாக இருப்பிடச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம்.


இதற்கு விண்ணப்பிக்கும் பொழுது மனுவின் கோரிக்கைக்கு சான்றாக வழக்கமாக மற்ற சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் பொழுது அளிக்கும் சான்றுகளைப் போலவே தங்கள் பகுதிப் பொது மக்கள் பத்துப் பேருடைய வாக்குமூலங்களை இணைக்கலாம்.

by Swathi   on 21 May 2014  3 Comments
Tags: Nativity Certificate   இருப்பிடச் சான்றிதழ்                 
 தொடர்புடையவை-Related Articles
இருப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி ? இருப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி ?
கருத்துகள்
14-Feb-2020 18:43:28 பாரதிராமன் said : Report Abuse
நான் தமிழகத்தில் பிறந்து 26 வயதிற்கு பிறகு வேலை நிமித்தமாக மும்பையில் உள்ளேன் எனது மகளுக்கு மருத்துவபடிப்புக்கு state quotavil apply panna mudiyuma?
 
18-Jan-2020 08:25:39 கோவிந்தன் said : Report Abuse
நான் கோவை மாநகரில் வசித்துவருகிரேன் எனக்கு சால்வன்ஸ் சர்டிபிகேட் தேவைபடுகிறது அதை எப்படி பெரவேன்டும்
 
01-Jun-2015 02:35:59 சத்தியவாணி said : Report Abuse
நான் சிறுதொழில் செய்ய விரும்புகிறன் என் கணவர் வேலை இல்லாதவர் என்னுடைய குடும்பம் வறுமையில் உள்ளது மேலும் எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் ஆகவே வருமானம் வேண்டி மளிகை கடை வைப்பதற்காக அரசிடம் லோன் பெறுவதற்காக விண்ணப்பம் செய்துள்ளேன் அதற்காக எனக்கு இருப்பிட சான்றிதழ் தேவைபடுகிறது அதற்காக விண்ணப்பம் செய்வது eppadi
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.