LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் : பாடல் பிறந்த கதை - சொல்கிறார் மதன் கார்க்கி

தன் படத்தின் கதையை என்னிடம் இரண்டு நிமிடங்களில் சொல்லிய ராம் பிரகாஷ், அதன் தலைப்பை முன்னிலைப் படுத்தி ஒரு மூன்று நிமிடப் பாடல் வேண்டும் என்று கேட்டார். ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற தலைப்பைப் பாடலுக்குள் எப்படிக் கொண்டு வருவது என்று தமனின் ஒலிப்பதிவுக் கூடத்தின் வரவேற்பறையில் வீற்றிருக்கும் புத்தர் சிலையோடு பேசிக்கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன். ‘தமிழ்’ ‘எண்’ ‘ஒன்று’ ‘அழுத்து’ என்ற நான்கு சொற்களும் என் விரல்களுக்கும் மடிக்கணினி விசைப்பலகைக்கும் நடுவே நடனமாடிக்கொண்டிருக்க, மொழிகளை மையப்படுத்தலாமா? எண், எழுத்து என்று பட்டியலிடலாமா? ஒன்று, இரண்டு மூன்று என்று எதையாவது வரிசைப் படுத்தலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்த என்னை இழுத்தது ‘அழுத்து’. 
‘எது கிடைக்க எதை அழுத்த வேண்டும்’ என்பதைச் சூத்திரமாகக் கொண்ட வரிகளை அமைக்க நினைத்தேன். தமனிடமும் ராம் பிரகாஷிடமும்  இந்த எண்ணத்தைச் சொன்னவுடன் இருவருக்கும் பிடித்துப் போனது.  எழுதச் சொன்னார்கள். நான் எழுதிய வரிகள்:
 
அலைவரிசை மாற்றவே
தொலை இயக்கி அழுத்தவும்! 
தலை எழுத்தை மாற்றவே - உன்
மூளையை நீ அழுத்தவும்!
வேகத்தை எடுக்க
முடுக்கியை அழுத்து!
நியாயத்தை உரைக்க
சொற்களை அழுத்து!
பணம் உடனே வேண்டுமா?
தானியங்கி வங்கி சென்று - உன்
இரகசியத்தை அழுத்தவும்!
காதல் செலுத்த வேண்டுமா?
தானியங்கி இதழ்களின் மேலே
முத்தத்தை அழுத்தவும்!
குறுஞ்செய்தி அனுப்பவே
விசைப்பலகை அழுத்தவும்!
பெருஞ்செய்தி எழுதவே - உன்
ஆயுளை நீ அழுத்தவும்!
புகழுக்கு உன் இன்றை அழுத்தவும்!
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்!
 
எழுதி முடித்த சில நிமிடங்களில், வரிகளை பொருள் சிதையாத ஒரு மெட்டில் பூட்டினார் தமன். பாடலை பதிவு செய்தோம். ‘ஆரோமலே’ அல்ஃபோன்ஸ் அவர்களின் மந்திரக் குரலுக்கு நடுவில் ஓர் எந்திரக் குரலாக கேட்பது என் குரலே. அழுத்தமான ஒரு பாடலை உருவாக்கியதில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி.

by Swathi   on 23 Nov 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகர் விருது மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகர் விருது
நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ்  திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்
டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக யாத்திசை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.. டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக யாத்திசை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது..
பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார் பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்
தேசிய திரைப்பட விருதுகள் 2023 தேசிய திரைப்பட விருதுகள் 2023
ரஜினிக்கு BMW கார் பரிசளித்த கலாநிதிமாறன் ரஜினிக்கு BMW கார் பரிசளித்த கலாநிதிமாறன்
லைசென்ஸ்  திரைப்படத்தின்  இசை & ட்ரெய்லர்  வெளியீட்டு விழா!... லைசென்ஸ் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா!...
முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசும் லைசென்ஸ் திரைப்படம் முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசும் லைசென்ஸ் திரைப்படம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.