|
|||||
முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசும் லைசென்ஸ் திரைப்படம் |
|||||
இயக்குநர் சுசீந்திரன் திரைப் பட்டறையில் இருந்து வந்த தீவிர திரைக் காதலர் திரு.கணபதி பாலமுருகன் இயக்கத்தில், திரு.ஜீவானந்தம் லைசென்ஸ் திரைப்படம் வெற்றிகரமாக முடிவடைந்து வெளியீடு காண உள்ளது. முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசும் இப்படத்தில் வரும் பாடல்களை திரைப்படப் பாடலாசிரியர் ஏ.இரமணிகாந்தன் எழுதி இசையமைப்பாளர் பைஜு ஜேக்கப் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பழ.கருப்பையா , ராதாரவி , மக்களிசைப் பாடகி ராஜலட்சுமி செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழில் பிறந்தநாள் பாடலை கவிஞர்.அறிவுமதி, செல்வி உத்திரா உன்னிகிருஷ்ணன், இசையமைப்பாளர் அரோல் கரோலி ஆகியோரைக்கொண்டு தயாரித்து வெளியிட்ட வலைத்தமிழ் ஆசிரியர் ச.பார்த்தசாரதி இப்படத்தில் ஒரு வேடத்தில் நடித்துள்ளார். *லைசென்ஸ்* திரைப்பட இசை வெளியீட்டு விழா 28/05/2023 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் திரைக்கு வரும் இத்திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துவோம்.
|
|||||
by Swathi on 13 May 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|