குழந்தை திருமணத்தை, தடுக்க வகைசெய்யும் ஐ.நா சபையின் தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் நடைபெறும் குழந்தை திருமணங்களால், சிறு வயதிலேயே, பெண் குழந்தைகள், தங்கள் உரிமைகளை இழந்து, கல்வி அறிவை வளர்த்துக் கொள்ள முடியாமலும், உடல் நலனை பேண முடியாமலும் அவதிப்படுகின்றனர். இந்த அவல நிலையை போக்க, ஐ.நா மனித உரிமை சபை, குழந்தை திருமணத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தை 107 நாடுகள் ஆதரித்த நிலையில், இந்தியா,வங்கதேசம் உட்பட சில நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளன.
இந்தியா இந்த குழந்தை திருமணத்தை, தடுக்க வகைசெய்யும் ஐ.நா சபையின் தீர்மானத்திற்கு மறுப்பு தெரிவித்திருப்பது, அனைத்து நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உலகெங்கிலும் நடைபெறும் 6 கோடி குழந்தை திருமணங்களில், இந்தியாவில் மட்டும், 2.4 கோடி குழந்தை திருமணங்கள் நடத்தப்படுகின்றன என்கிறது ஒரு அதிகாரபூர்வ ஆய்வு.
|