|
||||||||
சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா சம்மதம் !! |
||||||||
![]() தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு, 26 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட, கர்நாடகா அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், காவிரி கண்காணிப்புக் குழுவின் தலைவர் அலோக் ராவத், தமிழக மற்றும் கர்நாடக அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசிதழில் காவிரி இறுதி தீர்ப்பு :
கடந்த பிப்ரவரி, 2ம் தேதி, மத்திய அரசின் அரசிதழில், காவிரி இறுதி தீர்ப்பு வெளியானபோதும், அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. கடைசியாக ஜூலை, 15ம் தேதி, கண்காணிப்பு குழு கூடியது. அதன் பிறகு, கூட்டப்படவில்லை.
தமிழக அரசின் கோரிக்கைகள் :
நேற்று நடைபெற்ற காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் தமிழக அரசு முன்வைத்துள்ள சில முக்கிய அம்சங்கள்
காவிரி இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது போல், காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்குமுறை அமைப்பையும் உடனடியாக அமைக்க வேண்டும்.
சம்பா பயிர்களை காப்பாற்றுவதற்காக, அடுத்த மூன்று மாதங்களுக்கு, இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அளவு தண்ணீரை, தமிழகத்துக்கு, முழுமையாக திறந்து விட வேண்டும்.
கர்நாடக அரசின் முடிவு :
தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த கர்நாடக அரசு கூறியிருப்பதாவது, தமிழகத்திற்கு இதுவரையிலும், 214 டி.எம்.சி., அளவு தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, காவிரி கண்காணிப்பு குழுவின் உத்தரவின் படி, மாதந்தோறும், தமிழகம் கேட்கும் தண்ணீரின் அளவை தருவதற்கு ஒப்புக்கொள்கிறோம். அதன் படி, நவம்பர் மாதத்துக்கு, 15 டி.எம்.சி.,யும், டிசம்பர் மாதத்துக்கு, 8 டி.எம்.சி.,யும், ஜனவரி மாதத்துக்கு, 3 டி.எம்.சி.,யும், தண்ணீர் வழங்க போவதாக கர்நாடக மாநில தலைமைச் செயலர் ஹவுசிக் சட்டர்ஜி உறுதியளித்துள்ளார்.
காவிரி கண்காணிப்பு குழுவின் உத்தரவு :
இருமாநில அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்திய, கண்காணிப்புக் குழுவின் தலைவர் அலோக் ராவத், தனது உத்தரவில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசின் கோரிக்கையின் படி, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்குமுறை அமைப்பும் விரைவில் அமைக்கப்படும்.
காவிரி இறுதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள படி, நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மூன்று மாதங்களுக்கும் சேர்த்து, 26 டி.எம்.சி., தண்ணீரை, தமிழகத்துக்கு கர்நாடக அரசு, திறந்துவிட வேண்டும். |
||||||||
by Swathi on 08 Nov 2013 2 Comments | ||||||||
Tags: Kaviri Cauvery Supervisory Committee Karnataka காவிரி பிரச்சனை காவிரி ஆறு | ||||||||
|
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|