LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பட்டையைக் கிளப்பும் பாரதிராஜா ஜெராக்ஸ்!

அச்சு அசலாக பாரதிராஜாவை ஜெராக்ஸ் எடுத்தது போலிருக்கிறார் அவருடைய சொந்த சகோதரர் ஜெயராஜ். 'கத்துக்குட்டி' படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகும் ஜெயராஜுக்கு இப்போதே அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகள் வந்தபடி இருக்கின்றன. பாரதிராஜாவின் உதவியாளராகப் பணியாற்றி தற்போது 'மூச்' என்கிற த்ரில்லர் படத்தை இயக்கும் வினுபாரதி தனது படத்தில் ஜெயராஜூக்கு மிக முக்கியப் பாத்திரம் கொடுத்திருக்கிறார். அடுத்தடுத்தும் நிறைய வாய்ப்புகள் வரும் நிலையில், ''கத்துக்குட்டி ரிலீஸுக்குப் பிறகே இனி படங்களில் நடிப்பேன்'' எனக் கறாராகச் சொல்லிவிட்டார் ஜெயராஜ். இந்நிலையில், தன்னுடைய தம்பியே இந்தளவுக்குப் பிஸியான நடிகனாக மாறியதில் பாரதிராஜாவுக்கு சொல்ல முடியாத சந்தோஷம். கத்துக்குட்டி கதையை முழுக்கப் படித்துப் பார்த்து நரேனுக்குத் தந்தையாக நடிக்கச் சொன்னதே பாரதிராஜாதான். படத்தின் காட்சிகள் குறித்து ஜெயராஜிடம் சமீபத்தில் விசாரித்திருக்கிறார் பாரதிராஜா. படத்தில் காமெடியும் உருக்கமும் கலந்து நடித்த காட்சிகளை அப்ப்டியே பாரதிராஜாவிடம் நடித்துக் காட்டியிருக்கிறார் ஜெயராஜ். இதில்,ரொம்பவே மனம் சிலிர்த்துப்போன பாரதிராஜா, ''நீ இவ்வளவு பெரிய நடிகன்னு தெரிஞ்சிருந்தா என்னோட படத்துலேயே நடிக்க வைச்சிருப்பேனே..." என உருகியிருக்கிறார். தனது மகன் மனோஜை நடிகனாக்க பல முயற்சிகள் எடுத்தும் பலனளிக்காத நிலையில், தனது தம்பி நல்ல நடிகனாக உருவெடுப்பதில் பாரதிராஜாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சியாம். 

 

உபரி தகவல்: தனது தம்பி ஜெயராஜ் பெயரில் உள்ள ராஜாவையும், சகோதரி பாரதியின் பெயரையும் சேர்த்துதான் தனக்கு பாரதிராஜா எனப் புனைப்பெயர் சூட்டிக் கொண்டார் பாரதிராஜா. சகோதரன், சகோதரி மீது பாரதிராஜாவுக்கு அவ்வளவு பாசம்!

by Swathi   on 08 Aug 2014  0 Comments
Tags: Bharathiraja Xerox   Kaththukkutti   பாரதிராஜா சகோதரர்   கத்துக்குட்டி           
 தொடர்புடையவை-Related Articles
“'கத்துக்குட்டி' படத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து!” “'கத்துக்குட்டி' படத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து!”
சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா! சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!
பட்டையைக் கிளப்பும் பாரதிராஜா ஜெராக்ஸ்! பட்டையைக் கிளப்பும் பாரதிராஜா ஜெராக்ஸ்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.