LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    கட்டுரைகள்/சிறப்பு நிகழ்ச்சிகள் Print Friendly and PDF

குளம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் - மெலட்டூர் இரா நடராஜன்

கோயில்களும், குளங்களும் கிராமங்களின் இரண்டு அடிப்படை குறியீடுகள். ஒரு கிராமம் என்று எடுத்துக் கொண்டால் அங்கு நிச்சயம் ஒரு கோயிலாவதுஇருக்கும். அங்கும்இங்குமாக ஒரு சில குளங்களும்இருக்கும். "எங்கே, கோயில், குளம்னு சுத்த கிளம்பிட்டியா?' என்று நாம் அடிக்கடிஉபயோகிக்கும் சொல்லைகூர்ந்துகவனியுங்கள்.

 

இந்த இரண்டுகுறியீடுகளும்ஒண்றோடு ஒண்று சார்ந்தவை. இரண்டும் சேர்ந்துமுழுமையானவை, நம் கண்களைப் போல. இரண்டுக்கும் தொடர்பு அற்று போகும் போதும், இரண்டில் ஏதாவது ஒண்று சீரழிந்து போகும் போதும், ஒட்டு மொத்த கிராமமே பாதிப்புக்குஉள்ளாகிறது.


கொஞ்சம்கண்களைமூடி ஒரு அழகிய கிராமத்தை நினைவுக்கு கொண்டுவாருங்கள். நீண்டு, அகண்ட கோயிலும், உயர்ந்த கோபுரங்களும், பசுமை போர்த்தியகுளங்களும், அதனை சுற்றிமரம் செடி கொடிகளும், நீரில்துள்ளும்மீன்களும் நம் கண் முன்னேவந்து போகும். இயக்கையோடுஒன்றிய,மக்கள்வாழ்வுரிமைக்குஏதுவான அந்த கிராமங்களில் வசிக்க வேண்டும், அல்லது குறைந்த பட்சம்பார்வையிடவேண்டும் என்ற ஆவல்வருகின்றது அல்லவா? ஆனல்இன்றைய கிராமங்கள்எப்படிஇருக்கின்றன? 


கோயில்களுக்குஎன்னவாயிற்று?குளங்கள்எப்படிஇருக்கின்றன?இவைஇரண்டுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவு எந்த நிலையில்இருக்கின்றது என்பதை பார்போம்.

ஒரு சமூகத்தை ஒண்றிணைக்க கோயில்அவசியமானது என்றால், கிராமத்தின் ஜீவாதாரமானவிவசாயத்தைதூக்கிப்பிடிக்ககுளங்கள். 


கோயில் என்பது கிராமிய கலாச்சாரத்தின் ஒரு மைய புள்ளியாக இன்றும் இருந்து வருகிறது.பக்தியோடு கலைகளும், கலைகளோடு பக்தியும்இரண்டற கலந்து, அவை நம் கிராமிய மக்களின்வாழ்வியலை காலம் காலமாக செம்மைபடுத்தி வந்திருக்கின்றன. பக்தி கலாச்சாரம்மட்டும்இல்லை என்றால், கிராமிய கலைகள் என்றோ அழிந்துபோயிருக்கும் என்று கருத்துஆய்வாளர்கள் மத்தியில் இருகிறது. அதே நேரத்தில், கிராமிய கலைகளில்ஏற்றம்இல்லாமல் ஒரு தேக்க நிலை வந்ததற்கும், அதோடு தொடர்புடைய பக்தியே காரணம் என்றகுற்றச்சாட்டும் உள்ளது.


அந்தணர்கள், நாதஸ்வர/நடன கலைஞர்கள், இசை வல்லுனர்கள், ஆசாரிகள், சலவை தொழிலார்கள், உணவு தயாரிப்பவர்கள்,பூமாலை கட்டுபவர்கள் என அனைத்து வர்ண வகுப்பினர்களும் ஒரு சேர ஒத்துவாழும்பண்பாட்டின்அடையாளமாக கோவில்கள் கிராமங்களில்இருந்துவந்திருகின்றன. கோயில் இல்லாத ஊரில்குடியிருக்கவேண்டாம் என்ற சொல் வழக்கை கொண்டு, எந்த அளவுக்கு கோயில் ஒரு கிராமிய வாழ்வியலின்முக்கிய குறியீடாகஇருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.


இங்கு கோயில் என்பது ஒரு மதத்தின் அடையாளம் அல்ல. அது ஒரு இந்து கோயிலாகவும் இருக்கலாம், கிருத்துவதேவாலயமாகவும்இருக்கலாம். இஸ்லாமியர்களின் மசூதியாகவும் இருக்கலாம். 


கோயிலை நிர்மானிக்கும் போது, நமது மூதாதயர்கள் கிராமத்தில் ஒரு மேட்டுபகுதியிலேயே அமைத்தார்கள். அதாவது வெள்ளப் பெருக்கு காலங்களில் கோயில் ஒரு அடைக்கலமாக இருக்கும் என்ற எண்ணத்தில்தான். போஜன சாலைகள், வைத்திய சாலைகள்என்பவை கோயில் சார்ந்த ஒரு தர்ம சிந்தனைகளாகவே அன்று இருந்தன. அவை கோயிலின் ஒரு அங்கங்களாகவே இருந்தன. அப்படிப்பட்ட சேவைகளுக்கு பிரதி உபகாரமாக பணம் பெறுதல் ஒரு பாவகாரியமாகவேகருதப்பட்டது. ஆனால் அவைகள் மெல்ல மெல்லமறுக்கப்பட்டு,பின்புமறக்கப்பட்டுஇன்றுபொருளீட்டும்துறைகளாக ஓட்டல்களாகவும், மருத்துவமனைகளாகவும்உருவெடுத்திருக்கின்றன.


எந்த அளவுக்கு கோயில் கிராம மக்களின்மனங்களில்இரண்டற கலந்திருக்கிறதோ, அதே மாதிரி கிராமங்களில் உள்ளகுளங்கள் கிராமிய பொருளாதாரத்தின்ஜீவநாடியாகஇருந்திருக்கின்றன. நன்குநிமார்னிக்கப்பட்டபண்டைய கிராமங்களை புவியியல்பார்வையோடுபார்த்தோமேயானால், அங்கு கீழக்குளம், மேலக்குளம், வடகுளம், தென்குளம் என்றும், ஓடி வரும் மழை நீரின் போக்கை அறிந்து அக்குளங்கள்அமைக்கப்பட்டிருப்பதுதெரியவரும். ஒரு ஆறு அந்த கிராமத்தை கடந்து செல்லுமேயானால், அதிலிருந்து வாய்க்கால்வெட்டப்பட்டு,விளை நிலங்களோடு சேர்க்கப்பட்டு,உபரியாகஇருக்கும் நீரை குளங்களில் கொண்டு சேர்க்கும்பாங்கை நாம் அறியமுடியும். இந்த ஆற்று நீர் தவிர, அங்குபெய்யும், மழை நீரும் அங்காங்கே சேகரிக்கப்பட்டுவாய்க்கால்கள்வழியாகபெருக்கப்பட்டு,விவசாயஉபயோகம் போக மீதமாகும் நீர் குளங்களில்சேமிக்கப்படும்.இப்படித்தான் நம் கிராமங்களில் உள்ள ஊரணிகளும், கம்மாய்களும், குளங்களும்வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.எப்படி நம் உடல், தேவைக்கு அதிகமான உயிர் சத்துக்களை கொழுப்புஉருண்டைகளாகமாற்றி,பிற்கால தேவைகளுக்காக,  நம் தோல்களுக்கு அடியில் சேமித்துவைக்கிறதோ அந்த மாதிரி, கிராம குளங்கள்இருந்துவருகின்றன. ஊரணியில் தண்ணீர் கட்டி நின்றால், அந்த கிராமத்தில் பொது சேமிப்பு மிக நல்ல நிலையில்இருக்கிறது என்று அர்த்தம். சென்னையில் கூட முப்பதுக்கும்மேற்ப்பட்டகுளங்கள் இருந்ததாக சரித்திரம் சொல்கிறது. ஆனால்அவைகளெல்லாம் எங்கே போயின?


பயம் கலந்த பக்தி இருப்பதால்என்னவோ, கிராம கோயில்களில் ஓரளவுக்கு சீரழிவு இருந்தாலும் முற்றிலுமாகஅழித்தொழிக்கப்படவில்லை. ஊர் விட்டு ஊர் போனாலும், கோயிலே இடிந்துவிழுந்து, வெறும்சூலமும் பலி பீடங்களும். மற்ற சில மிச்சங்கள் இருந்தாலும், வருடா வருடம் இன்னமும் கொடை நடக்கிறது, கஷ்ப்பட்டுகுடும்பம்நடத்திக்கொண்டிருந்தாலும், கோயில் கொடைக்கான வரியைமக்கள் மறு பேச்சுஇல்லாமல் அங்குவாழும் கிராம மக்கள் கொடுக்கிறார்கள். ஊர் தெய்வம் நம்மை காக்கும் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை ஆழ்மனதில் இருக்கிறது. எங்கே கொடுக்காமல்போனால்,தெய்வகுற்றம் ஆகி, தன் குடும்பதிற்கு கேடு வந்துவிடுமோ என்றபயம் கூட இருக்கலாம். 


பிழைப்புக்காக நகரம் நோக்கி இடம் பெயர்ந்த்விட்டமக்கள் கூட, அவரவர்களின்கோயில்களைமறப்பதில்லை. தாம் வாழ்ந்து, வளர்ந்த வேர்களுக்கு நன்றி செலுத்தும்விதமாகவேன்களிலும், மினி லாரிகளிலும் அந்தந்த பண்டிகை காலங்களில்வந்துபோகிறார்கள்.


ஆனால்குளங்கள்?


கோயில்களின்முக்கியத்துவத்தைபுரிந்து கொண்ட அளவிற்கு,குளங்களின்முக்கியத்துவம் இந்த சமூகத்துக்குபுரியாமல்போனது மிகவும் வருத்தத்துக்கு உரிய விஷயம்.

மனிதனின் சுயநல புயலில்தான் குளம் என்னும் இந்த ஜீவாதார வடிவம் காணாமல் போய்விட்டது என்பதை நிச்சயமாக சொல்லமுடியும்.பல் உயிர் ஓம்புதல், அனைவருக்கும் இந்த உலகத்தில் உயிர் வாழ உரிமை உண்டு, அடுத்தவன் வாழ்வுரிமையை சீர் குலைப்பதுதெய்வகுற்றம்,கிடைப்பதுகுறைந்துபோனால், அதை சீராக பங்கிட்டுக் கொள்ளுதல் வேண்டும்போன்றவை வெறும் ஏட்டில் எழுதி பார்க்க வேண்டியவிஷயமாகிஇன்று ஆகி விட்டது. வாய்கால்களைதூர்த்து அதை தன் விளை நிலங்களோடு சேர்த்துக் கொள்வதும், வரண்டுபோனகுளங்களின் கரைகளில் முதலில் வீடு கட்டிக் கொள்ள ஆரம்பித்து, பிறகு அதை படிப்படியாகவிரிவுபடுத்துவதும், கிணறுகளில் நீர் வற்றியபோதுஅதற்கானமூலாதாரங்களை ஆராயாமல், அதை சரி செய்யாமல், ஆழ் துழாய் கிணறுகள் அமைத்து அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதும்இயல்பானசெயல்களாகிவிட்டன.


தன் விளை நிலத்திற்கு நீர் வேண்டியிருக்கிறது, அதற்கு அரசு வாய்கால்களில் நீர் தருவிக்க வேண்டும்.இல்லையேல் ஆழ்துழாய் கிணறு அமைத்து நீர் எடுக்க எனக்கு உரிமை இருக்கிறது என்று பேசும் எந்த ஒரு விவசாயிகள்தான் அதிகம். ஆனால், அதே கிராமத்தில் பெய்தமழைக்கால உபரி நீரை எந்த அளவுக்கு தங்களின் கூட்டுமுயற்சியால்மண்ணுக்குள்செலுத்தப்பட்டது என்ற கடமையை எந்த ஒரு விவசாயியும்நினைத்துப்பார்ப்பதில்லை. ஊரை சுற்றி உள்ள குளங்கள்தான், மழைக்கால உபரி நீரை மண்ணுக்குள் செலுத்தும்தலையாயபணியைசெய்கின்றன, அதற்கு பக்கபலமாக இரத்த நாளங்கள் மாதிரி இருக்க வேண்டியவைவாய்கால்களும்,வடிகால்களும் என்பதை ஏனோ மறந்துவிட்டார்கள்.அவர்களை சொல்லி குற்றமில்லை.பொருளாதாரத்திலும்,படிப்பறிவிலும், சமூகத்திலும் பின் தங்கிய இந்த மக்களை வழிகாட்டிமேலுயர்த்துவதற்கு கிராமங்களில் நேர் சிந்தனை கொண்ட ஆட்கள்இல்லை. இவர்களைதவறாக திசை திருப்புவதற்குநிறைய பேர் இருக்கிறார்கள் என்பதுதான் காலத்தின் கோலம்.


குளங்களில் தேங்கும் மழைக்கால உபரி நீர் ஒரு சேமிப்புமட்டுமல்ல. அது ஒரு முதலீடும் கூட. மீன்கள்வளர்க்கலாம்.பசும் சோலைகள் உருவாக்கலாம். இது போல இன்னும்என்னென்னவோஇருக்கின்றன.சேமிப்பை தொலைத்துவிட்டு, வாழ்வாங்கு வாழ்ந்த குடும்பங்கள் எங்காவது இருக்கிறதா என்ன? 


இன்றைக்கு கிராமங்கள் சீர்குலைந்து நகரங்கள் பெருத்துபோனதற்குமுக்கிய காரனம், நாம் இயற்கையோடு ஒத்துவாழும்முறையிலிருந்து விலகி, அதற்கு முரனாக வாழ கற்றுக் கொண்டு விட்டோம். வயல்களுக்கு ஆதாரம் குளங்கள். கிராம மக்களின்வாழ்வியலுக்கு ஆதாரம் குளங்கள். இன்றைக்குபெரும்பாலான கிராமங்களில் குடிநீர் வழங்க குளங்கள்இல்லை. ஆழ்துழாய் கிணறு அமைத்து, மேல்நிலை தொட்டி அமைத்து, தினம் தினம்பற்றாக்குறையோடு போராடும் ஒரு சின்னமாகத்தான் அது விளங்குகிறது.


சென்னையில் கூட வெள்ள நீர் சேர்ந்தால், ஏன் அவ்வாறுவெள்ள நீர் சேர்கிறது? அதன் வடிகால்களை ஆக்ரமித்தது யார்? என்றுயாரும் கேட்பதில்லை. தங்களுக்கு வெள்ளநிவாரன நிதி ஏன் தரப்படவில்லை? என்று கேட்டுதான் மக்கள் சாலை மறியல்செய்கிறார்கள்.பிரச்சனையின் ஆணிவேரை அறிந்து, அதை சரி செய்யாமல்,விளைவுகளுக்குமருத்து கேட்கிறார்கள். அரசுக்கும்குளங்களைபராமரிப்பதில்அக்கறையில்லை. ஊருக்குபொதுவாக ஏதாவது கட்டிடம் எழுப்பவேண்டுமென்றால், அவர்களுக்கு முதலில் உறுத்துவதுவறண்ட குளங்கள்தான். தற்கால குழந்தைகளிடம், வள்ளுவர் கோட்டம் இருந்த இடத்தில் முன்பு ஒரு பெரியகுளம் இருந்தது என்று சொன்னால் நம்பமறுப்பார்கள். தினம் ஆயிரம் கார்களும், கோடிக் கணக்கில் வியாபாரம் நடக்கும் பாண்டிபஜார் ஒரு காலத்தில் குளமாக இருந்தது.


நாம் ஒன்றைதெளிவாகபுரிந்து கொள்ளவேண்டும்.இனி கிராமங்களில்விவசாயம் செழிக்க வேண்டுமானால், அதற்கு ஆதாரமான குளங்கள்மீண்டும் புனருத்தம் செய்யப்படவேண்டும். "மரங்களை யாராவது வெட்ட வந்தால், அந்த மரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு நீங்கள் நில்லுங்கள். மரம் வெட்ட வந்த கோடாரிகள், முதலில் நம்மீதுஇறக்குகிதா என்றுபார்ப்போம்.இப்படி செய்தால்தான் மரங்கள் பிழைக்கும். நாமும்இயற்கையோடு ஒத்து வாழ முடியும்" என்றார் சுந்தர்லால் பகுகுனா என்றசுற்றுசூழல் ஆர்வலர்.


அந்த மாதிரி, விவசாயிகள்அனைவரும் ஒன்று சேர்ந்து கிராம குளங்களுக்குவரும் அச்சுறுத்தல்களை முறியடிக்கவேண்டும்.குளங்களைபாதுகாப்பது நம் ஜீவாதார உரிமை என்பதை ஒவ்வொருவிவசாயியும் உணர வேண்டும். தம் நிலத்தில் பெய்யும் மழை நீர் எப்படிவிழுந்துபோகிறது? அதன் ஓட்டத்தை எப்படி தடுத்து நிறுத்தலாம்? எவ்வாறு அதை விரைவாகமண்ணுக்குள் செலுத்தலாம்? என்று ஒவ்வொருவிவசாயியும் சிந்திக்க தொடங்க வேண்டும்.மழைக்கால உபரி நீர் குளங்களில்சேமிக்கப்படவேண்டும் என்பதில் ஒவ்வொரு கிராம வாசியும் நன்கு உணர வேண்டும்.


'நாடென்ன செய்தது நமக்கு? என கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்னசெய்தாய் அதற்கு? என நினைத்தால் நன்மை உனக்கு.' என்றதிரைப்பட பாடல் உடனே ஞாபகத்திற்குவருகிறது.இன்னும்வரக்கூடியஆண்டுகளில் உணவு உற்பத்தியும், நீர் ஆதாரமும் முக்கிய விஷயங்களாகபேசப்படப்போகின்றன.எனவே,விவசாய பெருமக்கள்குளங்கள்பால் தங்கள் கவனத்தை திசை திருப்பவேண்டும்.குளங்கள் இல்லாத ஊரில்குடியிருப்பதில்லை என்பதை ஒரு அடிப்படைகோட்பாடாகவே கொள்ளவேண்டும்.

வளமான இந்தியா வேண்டுமானால், கிராமங்களில்வற்றாதகுளங்கள்வேண்டும். கிராம மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள்.


- மெலட்டூர் இரா நடராஜன்
by Swathi   on 28 Nov 2014  4 Comments
Tags: குளம்   Kulam   மெலட்டூர் இரா நடராஜன்   Molatur Ra Natarajan           
 தொடர்புடையவை-Related Articles
குளம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் - மெலட்டூர் இரா நடராஜன் குளம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் - மெலட்டூர் இரா நடராஜன்
கருத்துகள்
14-Mar-2017 07:06:00 vengatesh said : Report Abuse
எனக்கு பிடித்திருக்கு இந்த தகவல். ஆகையால் நான் எனது கிராமத்தில் எடுத்துரைப்பேன். நன்றி .....
 
11-Sep-2016 03:05:57 raju said : Report Abuse
good
 
21-Mar-2016 20:33:28 ரெக்ஸ் வாஸ் said : Report Abuse
இன்றைய உயிர் நாடியான செய்தியை ஒரு நகரும் திரைப்படம் போல் சொல்லிய விதம் மிக அருமை மேலதூர் இராநடராஜனின் இக்கட்டுரை இன்றைய மாணவ செல்வங்களுக்கு போதி மர நிழலாக இருக்கும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை நன்றி உள்ளத்துடன் ரெக்ஸ் வாஸ் வேளாண்மை ஆலோசகர் புது வாழ்வு திட்டம் 7402704708
 
11-Dec-2014 05:47:42 பாபு said : Report Abuse
மிக அருமையான பதிவு. மக்களுக்கு பயனுள்ள, மற்றும் சிந்திக்க வைக்கும் பதிவு.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.