LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    கட்டுரைகள்/சிறப்பு நிகழ்ச்சிகள் Print Friendly and PDF
- விவசாயம் பேசுவோம்

வேளாண் பகுதி - இயற்கை வேளாண்மை – உரமிடுதலில் ஒருநெருடல்:

வேளாண் பகுதி
இயற்கை வேளாண்மைஉரமிடுதலில் ஒருநெருடல்:
முனைவர். . அரங்கசாமி 
   உழவியல் பேராசிரியர் (ஓய்வு)
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் - கோவை.

தொடர்பு: 13ஃ95-2 “உழவன் குடில்” அரசன் காடு; நம்பியூர் 638 458.
                   நம்பியூர் (வட்டம்), ஈரோடு (மாவட்டம்)

அ.பெ.எண்: 94861 15816

            நமது நாடு வெப்ப சலன நாடு (Tropical Country)  அதனடிப்படையில் நிலத்தின் கூறுகளும், பயிர் வகைகளும் அமைந்துள்ளது. நவீன பாசன முன்னேற்றங்களுக்குப் பின்னும். சுமார் 60% நிலங்கள் மானாவாரியாக உள்ளது. இந்த நிலங்களுக்கு எந்த விவசாயும் இரசாயன உரங்கள் போடுவதில்லை. இந்திய விவசாய நிலங்கள் 141.5 மில்லியன் எக்டரில் 85 மி. எக்டர் மானாவாரி நிலங்கள். பாசன நிலங்களிலும் சுமார் 10%  நிலங்களுக்கு இன்றைய நிலையிலும் உழவர்கள் தங்கள் இயலாமையால் இராசாயன உரங்களே போடுவதில்லை. இவ்வாறு சுமார் 90 மி. எக்டர் நிலங்களின் விளைபொருட்கள் ஆர்கானிக் எனும் கூற்றாளர்களின்படி உபயோகிப்பாளர்கள் சுகாதாரத்திற்கு உகந்தவை. ஆனால் இந்த விளைநிலங்களின் விளைச்சல் அகில் இந்திய விளைச்சலில் சுமார் 20% மட்டுமே மீமுள்ள 80% விளைச்சல், இரசாயன உரங்கள் பெறும் 51.5 மி. எக்டர் பாசனப் பகுதியின் விளைபொருள்களே!

            சமீப காலமாக இரசாயன உரமற்ற இயற்கை வேளாண்மை என்ற பெயரில், சிலர், உழவர் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்கள் கூற்றுப்படி, பயிர்களுக்குப் போடும் இரசாயன உரங்களின் விளைபொருட்கள் உபயோகிப்பாளர்களுக்கு சுகாதாரக்கேட்டை உண்டாக்குகின்றதென்பதாகும். ஆராய்ச்சி முடிவுகளின்படி இது ஏற்கத்தக்கதல்ல. பயிர் தன் வாள்ச்சிக்கும், மகசூலுக்கும் சத்துகளை எந்த வடிவில் எடுத்துக்கொள்கிறதென்பதை அறிந்தால் உண்மை விளங்கும். பயிர்களின் பெரிதளவு தேவைக்கு இரசாயன உரங்களையும், நுண்சத்துகளின் தேவைக்கும், மண்ணின் பரிணாமத்தை நிலைநிறுத்தவும் குறைந்த அளவு இயற்கை எருவையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தினால், மக்களுக்கும், மண்ணிற்கும் இம்மியளவு கூடத் தீங்கு நேராது.

            பயிர்களின் சீரான வளர்ச்சிக்கும் உச்ச விளைச்சலுக்கும் 16 வகை தாதுசத்துகள் தேவையென்று கண்டறியப்பட்டுள்ளது. அவைகளில் கார்பன் (C), ஹைட்ரஜன் (H), ஆக்சிஜன் (O), நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P),  பொட்டாஸ் (K),  எனும் ஆறும் பயிர்களுக்கு மிகுதியாகத் தேவைப்படும் முதன்மை சத்துக்களாகும் (Primary nutrient). அடுத்து கால்சியம் (Ca), மக்னீசியம் (Mg), சல்பர்  (S) எனும் மூன்றும் சிறிதளவே தேவைப்படும் இரண்டாம் நிலை சத்துகளாகும் (Secondry nutrient). மீதமுள்ள இரும்பு (Fe), மாங்கனீஸ்  (Mn), துத்தநாகம் (Zn),  தாமிரம் (Cu), போரான் (Bo), மாலுப்டீனம் (Mb), குளோரின் (C) எனும் ஏழு தாதுக்களும், மிக மிகக் குறைந்த Ppm (Parts/ million) என்ற அளவிலேயே தேவைப்படும் மூன்றாம் நிலை நுண்சத்துக்கள் (Trace nutrient) என்று   வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் எந்த ஒரு தாது சத்தும், பரிந்துரையை விடக் குறையுமேயானால், பயிர்களின் மகசூலும், அவற்றின் தரமும் குறையும், குறிப்பிட்ட 16 சத்துகளில் C,H,O எனும் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் மூன்றும், காற்றுப் பகுதியில் (atmosphere) அபரிமிதமாக இருப்பதால், பயிர்கள் காற்றிலிருந்து நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. மீதமுள்ள 13 சத்துக்களும் பயிர்களின் வகை, அவற்றின் மகசூலுக்குத் தக்கபடி பரிந்துரைக்கப்படுகிறது.

            இரசாயனம் மற்றும் ஆர்கானிக் என்று வுறு பிரிப்பவர்கள், பயிர்கள் தாது சத்துக்களை எந்த வடிவில் எடுத்துக் கொள்கிறதென்ற அடிப்படை அறியாத நிலையில் இரசாயன உரங்களைத் தீவிரமாக எதிர்க்கிறார்கள். பயிர்கள் சத்துக்களை மண்ணிலிருந்து இரசாயன வடிவில்தான் எடுத்துக் கொள்கிற தென்பதை புரிந்துக் கொண்டால் தேவையற்ற பீதிக்கு ஆளாக மாட்டார்கள். இரசாயன உரங்களை முற்றிலும் தவிர்த்து .இயற்கை எரு மட்டுமே பயிர்களின் முழுத்தேவைக்கும் பரிந்துரைக்கும் பட்சத்தில் அவற்றின் தேவை எக்டருக்கு 500 to 1000 டன் என்றளவிலிருக்கும். இந்த அளவிற்கே போட்டாலும், போடப்பட்ட எரு மண்ணில் உள்ள பாக்டீரியா மற்றுமுள்ள நுண்ணுயிர்களின் இரசாயன மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு இரசாயன உருவில் வேதிப்பொருள்களாக நைட்ரேட் (No3)  அமோனியா (NH3)  பாஸ்பாரிக் அமிலம் (P2O5)  போன்ற ரூபங்களிலேயே எடுத்துக் கொள்கிறது. இங்கே ஆர்கானிக், ஆர்கானிக் என்று மூவுவோரின் கூற்று பயிர்களாலேயே அடியோடு நிராகரிக்கப்படுகிறது. மேலும் இயற்கை எரு மட்டுமே போடும்போது மண்ணில் உள்ள நுண்உயிர்கள் அவற்றை இரசாயன மாற்றத்திற்கு உட்படுத்த காலதாமதமும் ஏற்படுகிறது. இதனால் பயிருக்கான சத்துக்கள் காலதாமதமாகக் கிடைப்பதால் பயிரின் ஆரம்ப வளர்ச்சி சுணக்கத்திற்குள்ளாகிறது. மேலும் போடப்பட்ட எருவின் சத்து 1ஃ3ல் ஒரு பங்கு மட்டுமே சம்ந்தப்பட்ட பயிருக்குக் கிடைக்கிறது. ஆனால் இரசாயன உரத்தில் உள்ள சத்தக்கள் எளிதில் கிடைக்கும் பக்குவத்தில் தயாரிக்கப்படுவதால் உடனடியாகப் பயிர்கள் எடுத்துக் கொண்டு திடகாத்திரமாக வளர்ந்து உயர் விளைச்சல் கொடுக்க வகை செய்கிறது.

            இயற்கை எருக்களான பண்ணைக்கழிவு, மக்கிய தொழு உரம், சாண எரிவாயுக் கழிவு, மண்புழு எரு, ஆட்டுக்கழிவு, கோழி எச்சம், போன்றவற்றில் முதன்மை சத்துக்களின் அளவு மிகமிகக் குறைவு. 0.4 to 3.5 சதவீத அளவிலேயே உள்ளது. ஆகவே அதிக உரமேற்று அமோக விளைச்சல் தரும் பயிர்களின் தேவையை ஈடுகட்ட எக்டருக்கு 500 முதல் 1000 டன் வரை தேவைப்படும். இன்றைய உழவர்களிடம் இதில் 1/100 பங்குகூட அவரவர் பண்ணையிலேயே இல்லை. விலைகொடுத்து வாங்குவதற்கும், களநிலவரப்படி டன் ஒன்றுக்கு ரூ.750 மதல் 1000 வரை என்ற நிலையில் உள்ளது. இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலைக்கு ஒவ்வாது.

            இரசாயன உரங்கள் ஓரிரு சத்துக்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்படுவதால் பயிர்களின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சத்துகளின் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆகவே மூன்றாம் நிலை நுண் சத்துகளுக்கு இயற்கை எருக்கள் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. நுண்சத்துகளை தன்னகத்தே கொண்மே பயிரும், பயிர் சார்ந்த கழிவும்தான் இயற்கை எருக்களாக மாற்றப்படுகின்றன. இதில் உள்ள நுண்சத்துகள், உரமிடும் பயிர்களின், நுண்சத்து தேவைக்கு ஏற்றதாக அமைகிறது. எருவில் உள்ள நுண்சத்துகளின் அளவைக் கொண்டுதான் எக்டருக்கு ஆண்டொன்றிற்கு 12.5டன் என்றளவில் பரிந்துரைக்கப்படுகிறது.

            வேளாண் பல்கலைக்கழக உழவியல் துறையில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து, பயிர்களுக்கான உரப் பராமரிப்பில் கிடைக்கப் பெற்ற ஆய்வுகளின் அடிப்படையிலும், ஓய்விற்குப்பின், நேரடி விவசாயத்தில் ஈடுபட்டு கள நிலவர இடர்பாடுகளை உணர்ந்தவன் என்ற முறையிலும் உழவர் பெருமக்களுக்கு என் வேண்டுகோள், உரமிமும் விவகாரத்தில் இயற்கை எரு மட்டுமே என்ற கூவலால் தற்போது “டெங்கு” போல் பரவி வரும் செய்திகளை நம்பி செயல்பட வேண்டாம். எந்தப் பயிராயிருப்பினும் அதற்கான ஒருங்கிணைந்த உரப்பராமரிப்பு முறையை பயன்படுத்தி வெற்றி காணுங்கள்.

            இரசாயன உரங்களே புழக்கத்திற்கு வராத நிலையில், இயற்கை எருக்களை மட்டுமே பயன்படுத்திய 1950களில் மக்கள் தொகை 30 கோடி மட்டுமே, ஆர்கானிக் உணவை மட்டுமே உண்ட அன்றைய மக்களின் சராசரி வாழ்நாள் வயது 27.இரசாயன உரங்களால் சுகாதார சீர் அழிவு ஏற்பட்டு விட்டதென்ற நிலையில் வாழும், 127 கோடி மக்களின் சராசரி வாழ்நாள் வயது 69 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. அபரிமித முன்னேற்றம் கண்டுள்ள சுகாதாரத் துறையின் ஈடுபாடு ஒரு காரணமென்றாலும், இரசாயன உரங்களால் விளைச்சல் பெருகி, உயர்தரமான போதிய உணவும் ஒரு மிக முக்கியக் காரணம் என்பதை ஆர்காளிக் கூற்றாளர்கள் உணர வேண்டும். நாளொன்றிற்கு இறப்பு நீங்கலாக பெருகி வரும் சுமார் 58,000 (ஐம்பத்தெட்டாயிரம்), புதிய வயிறுகளுக்கு, குறைந்து வரும் நிலப்பரப்பில் தேவையான உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தததில் விஞ்ஞானிகள் உள்ளனர். அதிக உரமேற்று அமோக விளைச்சல் தரும் இரகங்களையும், அவற்றின் அபரிமித சத்துக்களின் தேவையையும், இரசாயன உரங்களால் எந்தத் தீமையும் இல்லை என்பதை ஆராய்ச்சி ரூபமாக அறிந்த நிலையில், இவ்வுரத்தை தவிர்த்துப் பரிந்துரை செய்ய இயலாது. நுண்சத்துகளின் தேவையோடு மண்ணின் பரிணாமத்தையும் கணக்கிட்டு இயற்கை எருவையும், உயர் விளைச்சலுக்கேற்ற இரசாயன உரங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தினால் எந்தத் தீங்கும் நேராதென்பதை இயற்கைக் கூற்றாளர்களுக்கு அறிவுறுத்திக் கொள்கிறேன்.

     சுகந்த வாழ்க்கை என்ற பெயரால் பெருகி வரும் போக்குவரத்து வாகனங்களாலும், நாளுக்கு நாள் பெருகி வரும் பல லட்சம் ஆலைகளின் புகை, இரசாயனக் கழிவு மற்றும் குப்பைகளாலும் சுற்றுச்சூழல் மாசுபட்டுக் கிடக்கிறது. இதனால் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர் போன்றவை கெட்டுக் கொண்டிருக்கிறது. இவற்றால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை அரசு இயந்திரத்;தின் உதவியுடன் சரிசெய்ய இயற்கை ஆர்வலர்கள் முயற்சி எடுக்க வேண்டும். இதை விடுத்து வேளாண் இடுபொருள்கள் காலத்தே கிராம அளவில் கிடைக்காமலும், கிடைக்கும் பொருள்களின் விலை சிறு, குறு விவசாயிகளின் வாங்கும் திறனுக்குப் பன்மடங்கு அதிகமாகவு; உள்ளது. அதேவேளையில் வேளாண் விளைபொருட்களுக்கு பண்ணை அளவில் சரியான விலை கிடைக்காமல், விவசாயத்தை விட்டு மாற்றுத் தொழிலுக்குச் சென்று விடலாமென்று தத்தளித்துக் கொண்டிருக்கும் உழவர்களை துன்புறுத்தாதர்கள். உண்டி கொடுத்து உயிர் கொடுப்போரின் மனதில் தேவையற்ற பீதியைக் கிளப்பாதீர்களென்று சிரம் தாழ்த்திக் கரம் கூப்பி வேண்டிக் கொள்கிறேன். இந்த நேரத்தில் வள்ளுவரின் பொன்மொழியை அவர்களுக்கு நினைவூட்டி நிறைவு செய்கிறேன்.

     “உழவினார் கைமடங்கின் இல்லை விழைவதூம்
      விட்டேம் என்பார்க்கு நிலை”

வாழ்க வேளாண்மை! வளர்க உழவர் நிலை!:

by Lakshmi G   on 02 Apr 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கருங்காலி மரத்தின் அற்புத பயன்கள்.. கருங்காலி மரத்தின் அற்புத பயன்கள்..
ஓங்கிய வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் ஓங்கிய வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம்
பாரம்பரிய அரிசி வகைகளும் -பயன்களும் பாரம்பரிய அரிசி வகைகளும் -பயன்களும்
விவசாய பழமொழிகள்.. விவசாய பழமொழிகள்..
நம்பிக்கை பஞ்சாயத்துகள்  1. திரு. RVS. சிவராசு, MBA., தலைவர், பிரதாபராமபுரம் ஊராட்சி நம்பிக்கை பஞ்சாயத்துகள் 1. திரு. RVS. சிவராசு, MBA., தலைவர், பிரதாபராமபுரம் ஊராட்சி
வனத்துக்குள் தமிழ்நாடு வனத்துக்குள் தமிழ்நாடு
கொரோனாவிற்கு பின் நாம் செல்லவேண்டிய தற்சார்பு வாழ்வியல் திசை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு.. கொரோனாவிற்கு பின் நாம் செல்லவேண்டிய தற்சார்பு வாழ்வியல் திசை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு..
கிராமப்புற தயாரிப்புகளை நாடறியச் செய்து வெற்றி பெற வழிகாட்டும் இளைஞர் பழனிராஜனின் ஆலோசனைகள்! கிராமப்புற தயாரிப்புகளை நாடறியச் செய்து வெற்றி பெற வழிகாட்டும் இளைஞர் பழனிராஜனின் ஆலோசனைகள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.