LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    கட்டுரைகள்/சிறப்பு நிகழ்ச்சிகள் Print Friendly and PDF
- கிராமப்புற வளர்ச்சி

நம்பிக்கை பஞ்சாயத்துகள் 1. திரு. RVS. சிவராசு, MBA., தலைவர், பிரதாபராமபுரம் ஊராட்சி

நம்பிக்கை பஞ்சாயத்துகள்

திரு. RVS. சிவராசு, MBA., தலைவர், பிரதாபராமபுரம் ஊராட்சி.

திரு. RVS. சிவராசு, MBA., தலைவர், பிரதாபராமபுரம் ஊராட்சி.

 

 அறிமுகம்:

    ஒவ்வொரு கிராமங்களில் இருக்கக்கூடிய தலைவர்களை அடையாளம் கண்டு அவர்கள் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்தும், கிராமங்களின் வளர்ச்சி மேம்பாடு குறித்தும் எடுத்துரைக்கும் நிகழ்வாக இந்நிகழ்வு உள்ளது.

நெறியாளர்:

    கிராம அரசாங்கத்தை நன்கு புரிந்தவர், பின்புலத்தை நன்கு அறிந்தவர், பஞ்சாயத்து ராஜ் செயல்பாட்டாளராகத் திரு. பிரபாகரன் அவர்கள் திகழ்கிறார். உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் வளர்ச்சி குறித்த முதுநிலைப்பட்டம் பெற்றவர். அடிப்படையில் பொறியாளர். பல கிராமங்களுக்கு நேரிடையாகச் சென்று களப்பணி செய்து, அவற்றை உள்வாங்கிக் கொண்டு பயணிக்கக் கூடியவர். களப்பணியின் மூலம் அனுபவ அறிவை பெற்றவர்.

திரு. ஆர்.வி.எஸ். சிவராசு:

    முதுகலைப் பட்டம் பெற்றவர். நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். பணம் கொடுத்து ஓட்டு வாங்காமல் தன் அதிகாரத்திற்குட்பட்டு தன்னால் எவ்வளவு நன்மைகள் மக்களுக்குச் செய்ய முடியும் என்பதை எடுத்துக் கூறி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.. தமிழகத்தின் மிகப்பெரிய கிராமங்களில் இக்கிராமமும் ஒன்றாகத் திகழ்கிறது.

நீர்வளத்தை மேம்படுத்துதல்:

    இந்த ஊரில் சின்ன ஏரி, பெரிய ஏரி என இரண்டு ஏரிகள் உள்ளன. ஆனால் இதற்கு நீர்வரத்து என்பது இல்லை. அதாவது மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும். கோடைக் காலத்தில் வறண்டு போய்விடும். ஆண்டுதோறும் ஜனவரி 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் கடலில் கலக்கும் கடைசி பகுதியில் தான் இந்த கிராமம் உள்ளது. கடலில் கலக்கும் தண்ணீரானது இந்த ஊருக்குள் வராமல் எல்லைப் பகுதி வழியாகச் சென்று கடலுக்குள் கலக்கிறது. இவரது முயற்சியாலும், மக்களின் பங்களிப்பினாலும் கடலுக்குள் வீணாகக் கலக்கும் நன்னீரானது இந்த கிராமத்திற்கு வரும்படி வெற்றி கண்டது.

பால்கொள்முதல் நிலையம்:

    கால்நடை வளர்ப்பதற்கான எல்லா சூழலும் இந்த ஊரில் உள்ளது. கிட்டத்தட்ட 70 பேர் மாடுகள் வைத்துள்ளனர். அதை மனதில் வைத்துக் கொண்டு, மக்களின் பங்களிப்புடன் பால் கொள்முதல் நிலையத்தை உருவாக்கினார். இதன் மூலம் பால் உற்பத்தி நிறுவனத்திற்குப் பால் வழங்கும் பணியைக் கூட்டுறவுச் சங்கம் அமைத்து மேற்கொள்கிறார்கள். இதனால் பாலிற்கு நல்ல விலையும் கிடைக்கிறது. மக்களின் பொருளாதாரமும் மேம்படுகிறது.

தையல் பயிற்சி:

    மாற்றுத் திறனாளிகளுக்காகத் தையல் பயிற்சி இவரால் இந்த கிராமத்தில் தொடங்கப்பட்டது. இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும் இந்த பயிற்சியின் இறுதியில் அவர்களுக்குச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தையல் இயந்திரமும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், சிறு பொம்மைகள் செய்தல், கைப்பை போன்ற கைத்தொழில்களும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

கிராமப் பேரிடர் மேலாண்மை குழு:

    கடலோர கிராமமாக இந்த கிராமம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் எதிர்பாராத இயற்கை சீற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் அதிகம் ஏற்படுகிறது. அவசரக் காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும், ஏற்பட்ட சேதத்தை எவ்வாறு மீட்டெடுக்க முடியும் என்று செயல்படக் கூடிய ஒரு குழு வேண்டும் என்ற நோக்கத்தில் ‘கிராமப் பேரிடர் மேலாண்மை குழு’ ஒன்றை அமைக்க உள்ளார்.

பஞ்சாயத்து அலுவலகம்:

    ‘லஞ்சம் வாங்கக் கூடாது, லஞ்சம் வழங்கவும் கூடாது’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்டதாக இவரது அலுவலகம் திகழ்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர் நடுநிலைத் தன்மை உடையவராக இருந்தால் மட்டும் தான் அனைத்து தரப்பு மக்களைக் குறித்தும் யோசிக்க முடியும் என்பதால் எந்த கட்சி சாராதவராகவும் உள்ளார்.

ஊராட்சி மன்றத் தலைவரின் கடமை:

    ஒரு கிராமத்தின் கட்டமைப்பினை மேம்படுத்துவது மட்டுமே ஊராட்சி மன்றத் தலைவரின் கடமை கிடையாது. அக்கிராமத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் ஊராட்சி மன்றத் தலைவரின் கடமையே ஆகும். மக்களின் தேவைகளை அறிந்து, அதற்கான அரசுத்திட்டங்களை அவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்.

by Lakshmi G   on 07 Dec 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கருங்காலி மரத்தின் அற்புத பயன்கள்.. கருங்காலி மரத்தின் அற்புத பயன்கள்..
ஓங்கிய வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் ஓங்கிய வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம்
வேளாண் பகுதி - இயற்கை வேளாண்மை – உரமிடுதலில் ஒருநெருடல்: வேளாண் பகுதி - இயற்கை வேளாண்மை – உரமிடுதலில் ஒருநெருடல்:
பாரம்பரிய அரிசி வகைகளும் -பயன்களும் பாரம்பரிய அரிசி வகைகளும் -பயன்களும்
விவசாய பழமொழிகள்.. விவசாய பழமொழிகள்..
வனத்துக்குள் தமிழ்நாடு வனத்துக்குள் தமிழ்நாடு
கொரோனாவிற்கு பின் நாம் செல்லவேண்டிய தற்சார்பு வாழ்வியல் திசை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு.. கொரோனாவிற்கு பின் நாம் செல்லவேண்டிய தற்சார்பு வாழ்வியல் திசை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு..
கிராமப்புற தயாரிப்புகளை நாடறியச் செய்து வெற்றி பெற வழிகாட்டும் இளைஞர் பழனிராஜனின் ஆலோசனைகள்! கிராமப்புற தயாரிப்புகளை நாடறியச் செய்து வெற்றி பெற வழிகாட்டும் இளைஞர் பழனிராஜனின் ஆலோசனைகள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.