LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் 19-ந் தேதி இறங்குகிறார்!

மதுரை சித்திரைத் திருவிழாவில், தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் ஏப்ரல் 19-ந் தேதி இறங்குகிறார்.

சித்திரைப் பெருந்திருவிழா ஏப்ரல்  15- ந் தேதி தொடங்குகிறது. விழாவையொட்டி ஏப்ரல் 17- ந் தேதி மாலையில், அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார்.

தொடர்ந்து 18-ந் தேதி மதுரை மூன்றுமாவடியில் அதிகாலையில் எதிர்சேவை நடக்கிறது.  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் பெருமாள் வைகையாற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் 19-ந் தேதி அதிகாலையில் இறங்குகிறார்.

20-ந் தேதி வைகை ஆறு தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்வும், அன்று இரவு தசாவதாரம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

21-ந் தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு அலங்காரத்தில் அழகர் காட்சி தருவார். அன்று அதிகாலையில் சுவாமி அழகர்மலை நோக்கிச் செல்வார்.

22-ந் தேதி இரவு அப்பன்திருப்பதி மண்டபங்களில் கள்ளழகர் காட்சி தருவார். 23-ந் தேதி காலை 11 மணிக்கு சுவாமி அழகர்கோவில் சென்று இருப்பிடம் சேருவார்.இதையொட்டி அழகர்கோவிலில் இருந்து மதுரை வண்டியூர் வரை சுமார் 445 மண்டபங்களில் கள்ளழகர் சென்று எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து திரும்புவார்.

உலக அளவில் பிரசித்திபெற்ற இந்த சித்திரை திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். அவர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக போலீஸ் பாதுகாப்புடன் 27 உண்டியல்பெட்டிகள் சுவாமி செல்லும் வழியாகவே சென்று கோவிலை வந்தடையும். 

இதற்காக இக்கோவிலின் திருக்கல்யாண மண்டப வளாகத்தில் உண்டியல்பெட்டிகள் தற்போது தயார்நிலையில் உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும்  பலர் செய்து வருகின்றனர்

by Mani Bharathi   on 11 Apr 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கண்ணகி கோயில் திருவிழா கோலாகலம். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கண்ணகி கோயில் திருவிழா கோலாகலம்.
மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி எழுந்தருளினார் கள்ளழகர். மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி எழுந்தருளினார் கள்ளழகர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்.
உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா? உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா?
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு. பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு.
பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள். பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.