|
|||||
பிரபல நடிகர் மனோபாலாவிற்கு அஞ்சலி.. |
|||||
பிரபல நடிகர் மனோபாலாவிற்கு அஞ்சலி.. இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டவரும் ஆவார். மனோபாலா ஒரு ஓவியர் என்பது பலருக்குத் தெரியாது . பாலசந்தர் என்ற இயற்பெயர் கொண்ட மனோபாலா தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக கமல் மூலம் சேர்ந்தவர், அவரோடு புதிய வார்ப்புகளில் தொடங்கி பல படங்கள் உதவி இயக்குநராக பணிப்புரிந்தவர். இவர் இயக்கிய முதல் படம் ஆகாய கங்கை ஆகும், அது தோல்வி படமாக இருந்தும் இவரது இரண்டாவது திரைப்படம் பிள்ளை நிலா என்ற ஹாரர் திரைப்படம், நல்ல வெற்றியை தந்து அவரக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. ரஜினிகாந்தின் ஊர்க்காவலன், விஜயகாந்தின் சிறைப்பறவை போன்ற படங்கள் மேலும் புகழ் சேர்த்தது. சதுரங்கவேட்டை திரைப்படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். காலத்திற்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக் கொண்டு பல அவதாரங்கள் எடுத்தார். திரைப்பட இயக்குநர், சீரியல் இயக்குநர், நகைச்சுவை நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், தயாரிப்பாளர் என கடைசியாக யூடியூபராகவும் மாறி பல பிரபலங்களை பேட்டிகள் எடுத்தார். கலையுலகச் செயல்பாடுகளில் எல்லோருக்கும் எப்போதும் தோள்கொடுக்க முன்வந்து நிற்பவர். கல்லீரல் பிரச்சினையால் அவர் தனது 69 வயதில் காலமானார். |
|||||
by Swathi on 03 May 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|