நையாண்டி மேளம் என்று இக்கலை பரவலாகச் சொல்லப்பட்டாலும் மக்கள் இதனை மேளம் அல்லது கொட்டு என்றே அழைக்கின்றனர். தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி என்றில்லாமல் எல்லா இடங்களிலும் பரவலாக இக்கலை நிகழ்த்தப்படுகிறது. மக்களை மகிழ்விப்பதற்குரிய கலை என்பதால் நையாண்டி மேளம் எனப் பெயர் பெற்றது என்றும், நையாண்டி என்பதற்கு கேலி என்ற பெயரும் உண்டு. இசைக்கருவிகள் மூலமும், இசைப்பவர் மூலமும் நையாண்டி செய்து பார்வையாளர்களை மகிழ்விக்கும் கலை என்பதால் இப்பெயர் பெற்றது என்றும்,பொதுவான கருத்து நிலவுகிறது. நாட்டார் தெய்வக் கோவில் விழாக்களில் தனியாகவும், சாமியாட்டத்திற்காகவும், கரகாட்டத்திற்காகவும் நையாண்டி மேளம் Pakkirisha Paattuஇசைக்கப்படுகிறது.
|