|
||||||||||||||||||
குழந்தைகளைக் கொண்டாடுவோம் - முனைவர். கலை செழியன் |
||||||||||||||||||
குழந்தைகளைக் கொண்டாடுவோம் - முனைவர். கலை செழியன்கவனகக் கலை: ஒரே நேரத்தில் பல வகையான கேள்விகளை உள்வாங்கி நினைவில் வைத்து, மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் ஒரு தனிமனிதனுடைய ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய ஒப்பற்றக் கலையாக கவனக கலைத் திகழ்கிறது. இதில் வெறும் நினைவாற்றல் மட்டுமே முதன்மைப்படுத்தப்படுவது கிடையாது. நினைவாற்றல் என்ற எல்லையைத் தாண்டி, படைப்பாற்றல், உணர்வாற்றல் போன்ற பன்முகம் கொண்ட கலை கவனகக் கலை ஆகும். சுருக்கமாகக் கூறினால் மனித ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய கலை ‘கவனகக் கலை’ ஆகும். அறிமுகம்: முனைவர். திரு. செழியன் அவர்கள் தன்னுடைய 13வது வயதிலிருந்தே கவனகக் கலையில் ஈடுபாடு உடையவராகக் காணப்பட்டார். எந்த ஒரு கலையையும் பயன் சார்ந்த கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. உளவியல் அடிப்படையில் மிகப்பெரிய மன எழுச்சியைத் தூண்டக் கூடிய கலை ‘கவனகக் கலை’ ஆகும். கவனகக் கலையின் அடிப்படை ‘நினைவாற்றல்’ ஆகும். நினைவாற்றல் கலையை மனிதன் பெருக்கிக் கொள்வதற்கும், தினந்தோறும் வாழ்க்கையில் அதைப் பயன்படுத்துவதற்கும் கவனகக் கலை மிகப்பெரிய அளவில் உதவும். கவனகக் கலை பயிற்சிகளை மேற்கொண்டால் மிகப்பெரிய வாழ்வியல் பயனை அளிக்கும். மற்றவர்களிடம் நம்மை வேறுபடுத்தக் கூடிய மிக எளிமையான, வலிமையான கலை ‘கவனகக் கலை’ ஆகும். அனைவரையும் ஈர்க்கக் கூடிய கலை ‘கவனகக் கலை’ ஆகும். மூளைக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜன்: அடிப்படையில் நினைவாற்றல் என்பது மூளைக்குக் கொடுக்கும் பயிற்சியே ஆகும். அதிக சந்தோஷமோ, அதிக கோபமோ, அதிக படபடப்போ அடையும் போது மனிதனுக்கு மறதி ஏற்படும் என்பது உளவியல் ரீதியான உண்மை ஆகும். உடலும், மனமும் சேர்ந்து இயங்கக்கூடிய அளவுக்குப் பயிற்சியை நாம் எடுத்துக் கொண்டோமானால் நினைவாற்றல் சிறக்கும். ஆக்ஸிஜன் கிடைக்கும் போது மட்டும் தான் மூளை நன்கு செயல்படும். சாதாரணமாகவே மனிதன் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 20 விழுக்காடு மூளை பயன்படுத்திக் கொள்கிறது. ஆக மூளைக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகமாக உள்ளது. பயிற்சி: ஓடிக் கொண்டிருக்கும் உலகில் நுரையீரல் நன்கு சுருங்கி விரியுமாறு யாரும் மூச்சு விடுவது கிடையாது. கண்ணை மூடிக் கொண்டு மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளியிட வேண்டும். அப்படிச் செய்யும் போது எத்தனை முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுகிறோம் என்பதையும் எண்ணிக் கொள்ள வேண்டும். இது மிகவும் எளிமையான பயிற்சிதான். 40 நாட்கள் தொடர்ந்து இந்த பயிற்சியை மேற்கொண்டு வந்தால் நமக்கே ‘இது நாம் தானா’ என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு மாற்றம் ஏற்படும். தினந்தோறும் 20 நிமிடம் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். நேரம் இல்லாதவர்கள் 3 நிமிடம் வரை தங்கள் பயிற்சியை மேற்கொள்ளலாம். நமக்குப் பிடிக்காத வேலையைக் கூட ஆர்வத்துடன் செய்ய இந்த பயிற்சி உதவும். இந்த பயிற்சியை பெரும்பாலும் காலையில் செய்வது நல்லது. உணவு உண்ட பின் இந்த பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது. உணவு உண்பதற்கு முன்னே இந்த பயிற்சியைச் செய்து முடித்து விட வேண்டும். நினைவாற்றலை ஊக்கப்படுத்தக் கூடிய உணவுகள்: வல்லாரை, வெண்டைக்காய், பசலைக் கீரை, தூதுவளை, தேங்காய் போன்றவை நினைவாற்றலை ஊக்கப்படுத்தும். உணவு முறைத் தாண்டி எளிய உடற்பயிற்சியும் நினைவாற்றலை அதிகப்படுத்தும். யோகாவில் சர்வாங்காசனம், தலைகீழ் இருக்கை, போன்றவை நினைவாற்றலை அதிகப்படுத்தக் கூடியவை. யோகா நன்கு தெரிந்தவர்கள் முன்னிலையிலே இந்த பயிற்சிகளைச் செய்ய வேண்டும். நினைவாற்றல் இல்லாத துறையும் இல்லை. நினைவாற்றல் தேவைப்படாத வயதும் இல்லை. எல்லா வயதினர்க்கும் அவரவர் வயதிற்கேற்ப கவனகக் கலை பயிற்சிகள் வேறுபடும். |
||||||||||||||||||
by Lakshmi G on 04 Dec 2020 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|