ஐம்பொன்னால் செய்யப்பட்டு பலகையில் வைக்கப்பட்டிருக்கும் வீரபத்ரசாமி என்ற தெய்வத்தின் உருவத்தை தலையில் சுமந்து கொண்டு ஆடும் ஆட்டம் வீரபத்ரசாமி ஆட்டம் என்பதாகும். கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட குறும்பர்கள் நிகழ்த்தும் இவ்வாட்டம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காவிரிப்பூம்பட்டினம், சுக்கராண்டவள்ளி, பெரியமுத்தூர், பஞ்சபள்ளி, காமனூர், கும்மனூர், கிருஷ்ணகிரி, கனகமுட்லு, செட்டி மாரன்பட்டி ஆகிய இடங்களில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. பம்பை, மேளம், தோல் பறை போன்ற இசைக்கருவிகளுடன் ஆடப்படும் வீரபத்ரசாமி ஆட்டம் குறும்பர் கோவில் விழாவில் இரவு முழுக்க ஆண்களால் மட்டுமே நடத்தப்படுகிறது.
|