இருபதாம் நூற்றாண்டில் நாடகக்கலை புத்துயிர் பெற்ற காலத்தில் பயிற்சி பெற்ற நாடக நடிகர்கள், நடிகைகள் துவக்கப்பட்ட இந்த ஸ்பெஷல் நாடகங்களில் மக்கள் எல்லோருக்கும் தெரிந்த வள்ளி திருமணம், அரிச்சந்திரன், சத்தியவான் சாவித்திரி போன்ற கதைகளே இடம் பெறுகின்றன. தேசபக்திப் பாடல்கள் மற்றும் சீர்திருத்த பாடல்களும் ஸ்பெஷல் நாடகங்களில் பாடப்படும். நடிகர்களுடன் இசைக்குழுவினர், அரங்க வடிவமைப்பாளர்கள், ஒப்பனைக்காரர்கள் ஆகியோர் குழுவாக இணைந்து ஸ்பெஷல் நாடகங்கள் நடத்தப்படுகின்றன.
|