இசைக்கருவிகளின்றி வண்ணத்தாள் ஒட்டப்பட்ட நீளமான குச்சியை மட்டுமே வைத்துக் கொண்டு சிறுவர்கள் தனியாகவும், சிறுமிகள் தனியாகவும் ஆடும் ஆட்டமே வைந்தானை ஆட்டம் எனப்படுவதாகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக நிகழ்த்தப்படும் இக்கலையில் 30 கலைஞர்கள் பாடல்களுடன் 18 செ.மீ. நீளமுள்ள மரக்குச்சியைக் கையில் வைத்து அடித்துக் கொண்டு இந்த ஆட்டம் ஆடப்படுகிறது. இது வட்ட வடிவ ஆட்டம். வட்டத்தின் நடுவில் ஒரு கல் வைக்கப்பட்டிருக்கும். அக்கல்லைப் பெண் தெய்வமாகக் கருதி அதனைச் சுற்றியே இசைக்குத் தகுந்தவாறு வைந்தானை ஆட்டம் நிகழ்த்தப்படுகிறது.
|