|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47 |
||||||||
![]() விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் கண்ணீர்க் கோளங்களிலிருந்து (Lachrymal glands) சுரக்கும் நீர் கண்களைக் குளிர்வித்து, தூய்மைபடுத்தி, கண் இமைகளுக்கும் கண்களுக்கும் இடையே உராய்வினைத் தடுக்கும். இது உப்பு கலந்த நீர். கண் எரிச்சல் ஏற்பட்டாலோ (response to irritant) மனிதன் உணர்வு மாறுபாடுகள் (தூக்கம், மகிழ்ச்சி, கோபம், சிரிப்பு) ஏற்பட்டாலோ கண்ணீர் சுரக்கும்.
கண்களிலிருந்து சுரக்கும் நீர் பலவிதமான நன்மைகள் ஏற்படுத்துவதால் அதனைத் தொடர்ச்சியாகச் சுரக்கச்செய்ய சித்தர்கள் பலவிதமான வழிமுறைகளைக் கூறியுள்ளனர். நாம் கண்பதுகாப்பின் கீழ் பார்த்த பல முறைகள் கண்ணீர் சுரப்பினை இயல்பகச் சுரக்கச் செய்து கண் பாதுகாப்பிற்கு மட்டும் அல்லாது பொதுவான உடல் நலத்திற்கும் உதவியாக இருக்கும். குறிப்பாக பெண்கள் கண்மையிடல், எல்லோருக்கும் கண்ணில் மூலிகைச் சாறுகள் விடல், எண்ணை விடல் போன்றவை. இவ்விதமான கண்ணீர் சுரப்பினை சீராகச் சுரக்கச் செய்யும் வழி முறைகளைப் பின்பற்றாவிட்டால் கண்ணீர் சுரப்பு குறையும். கண்ணீர் குறைவாகச் சுரக்கச் செய்யும் செயல்களில் ஈடுபடுவதும் நல்லதல்ல (காட்டாகத் தொடர்ச்சியாக தொலைக்காட்சி போன்ற மின் சாதனங்களைப் பார்த்துக் கொண்டிருத்தல்). விழி நீரினைத் தடுப்பதால் ஏற்படும் நோய்களைக் கீழ்க்கண்ட சித்தர் பாடல் தெரிவிக்கின்றது.
“விழியினில் நீரடக்கில் விதமான இருந்து ரோகம்
வழியடு பீநசங்கள் வந்திடும் நேத்ர ரோகம்
அழுகிடும் சிரசில் ரோகம் அதனுடன் வாதங் கூடில்
பழுதுடுடல் பண்ணிக் குன்மம் பற்றிடுங் குணமுமுண்டே””.
இதய நோய்கள், பீனிச நோய்கள் (Sinusitis), கண்நோய்கள், தலைபாரம், மூளை பாதிப்பு, உடல் தளர்வு, வயிற்றுபுண் போன்றவை கண்களிலிருந்து வழியும் நீரினைத் தடுத்தால் உருவாகும் என இந்த சித்தர் பாடல் விளக்குகின்றது.
1. விழிக்கோளத்தில் உருவாகும் நீர் குறைவதால் கண் வறட்சி ஏற்படும் (De hydration). கண் வறட்சியால் கண்ணில் புண்கள் ஏற்படல், கண் சிவப்பு, போன்ற சிறிய பிரச்சனைகள் முதல் பார்வை இழப்பு வரை ஏற்பட வாய்ப்புள்ளது. 2. கண்ணீர் நுண்கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும். கண்ணீர் 95% நுண்கிருமிகளை (microbes bacteria, virus) 5 முதல் 10நிமிடங்களுக்குள் நீக்கிவிடும். 3. கண்களில் படக்கூடிய தூசு, புகை போன்ற வேதிப்பொருட்கள் கண்ணீரினால் வெளியேற்றப்பட்டு கண்பாதிப்பு தடுக்கப்படுகின்றது. 4. கண்ணீரினால் உடலிலிருந்து நச்சுப்பொருட்கள் வெளியேறும் (detoxification). 5. படபடப்பு, பதற்றம், மன எரிச்சல், சோர்வு, துக்கம், மன அழுத்தம், கோபம் போன்ற மன மாறுபாடுகளை உண்டாக்கக் கூடிய வேதிப்பொருட்கள் கண்ணீர் வழியே வெளியேறுகின்றது. கண்ணீர் வெளியேறுதல் என்பது உணர்வு மண்டலம், மூளை, இதயம் போன்ற உறுப்புகளுடன் தொடர்புடையது. எனவே மேற்கண்ட மன மாறுபாடுகளின் போது கண்ணீர் வெளியேறுவதால் மன ஆறுதலும் அமைதியும் கிடைக்கின்றது. 6. கண்ணீர் வெளியேறுவதால் மனதில் அன்பு, பாசம், கருணை மேம்படும். இதற்கு Oxytocin என்கிற வேதிப்பொருள் உடலில் கூடுவதே காரணம். அதே வேளையில் Cortisol போன்ற மன இறுக்கத்தை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் வெகுவாகக் குறைகின்றன. 7. உடம்பின் எதிர்பாற்றல் மேம்படுகின்றது. 8. ஒவ்வாமை (Allergies) ஏற்படுத்தும் காரணிகளிலிருந்து உடல் பாதுகாக்கப்பட்டுகின்றது. இதனால் கரப்பான் (Eczema), தோல் அரிப்பு (urticaria) போன்றவை குறைக்கின்றன.
இயல்பாக கண்களிலிருந்து வழியும் நீரினை தடுக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. (தொடர் கண் விழிப்பு, தொலைகாட்சி, அலைபேசி போன்ற மின் சாதனங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்தல்). கண்களிலிருந்து வழியும் நீர் சீராக உருவாகும் சித்தர் வழிகளைப் பின்பற்றல் வேண்டும். |
||||||||
by Swathi on 03 Aug 2015 1 Comments | ||||||||
Tags: Tears to Control Tears Kanneer Siddha Maruthuvam சித்த மருத்துவம் கண்ணீர் விழிநீர் | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|