|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 |
||||||||
விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள்
கீழ் நோக்கும் காற்று (அபான வாயு) என்கிற உடலின் காற்று சிறுநீர், மலம், விந்து, கருப்பையில் இருக்கும் குழந்தை இவற்றை குறிப்பிட்ட காலத்தில் கீழ் நோக்கித் தள்ளும்.
இதனை
“ நெளிந்திட்ட வாதம் அபானத்தைப் பற்றி
மணமான விந்து விழ மழைநீர்ப் பெய்ய வழிகாட்டி””
என்கிற பாடலால் நாம் அறியலாம்.
அபான வாயுவின் இயக்கத்தால் குறிப்பிட்ட நேரத்தில் தேவையான உடல் நிகழ்வுகள் நிகழும். மலம், சிறுநீர், விந்து போன்றவற்றை அடக்கினால் அந்த காற்றின் இயல்பான இயக்கம் பதிக்கப்பட்டு உடலில் பல கேடுகள் நிகழும்.
விந்து வெளியேறும் காலத்தில் வெளியேறாமல் தடுப்பதால் பல துன்பங்கள் உடலில் நிகழும். அவற்றைக் கீழ்க்கண்ட சித்தர் பாடலால் அறியலாம்.
“சுக்கிலம் தன்னை அடக்கின்
சுரமுடன் நீர்க்கட்டு ஆகும்
பக்கமாம் கைகால் சந்து
பாரநோய் வழி இறங்கும்
மிக்க மார்நோய் உண்டாகும்
மிகுத்திடும் பிரமேகம்தான்
தக்கதோர் போதுமாகின்
தரித்திடும் வாயுக்கூரே””
சுக்கிலம் என்பது விந்து ஆகும். விந்து வெளியேறும் காலத்தில் அடக்கினால் 1. சுரமுடன் சிறுநீர் பிரியாத நிலையும் ஏற்படும். 2. கை, கால், இடுப்பு சந்துகளில் (மூட்டுகளில், பொருத்துக்களில்) வலியும் வீக்கமும் உண்டாகும். மார்புநோய் உண்டாகும் என பாடல் தெரிவிக்கின்றபடியால் மார்பில் உள்ள முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல், இரத்தக் குழாய் போன்றவற்றில் நோய் ஏற்படும் என நாம் அறிந்து கொள்ளலாம். 3. மேக நோய் என்று சித்தர்களால் அழைக்கப்படும் சிறுநீர் தொடர்பான நோய்கள் உண்டாகும். இவற்றில் மது மேகம் எனப்படும் சர்க்கரை நோயும் (Diabetes mellitus) அடங்கும்.
விந்து வெளியேறும் காலம் என்பது ஆண் – பெண் உடல் தொடர்பின்போது ஏற்படும் உயர் உணர்வு ( Orgasm ) காலம் ஆகும். இந்த காலத்தில் விந்துவை அடக்க முற்படக் கூடாது. |
||||||||
by Swathi on 10 Aug 2015 3 Comments | ||||||||
Tags: Siddha Maruthuvam Vinthu Semen Sperm விந்து சித்த மருத்துவம் to Control Semen | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|