|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 |
||||||||
வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் :
வாந்தி என்பது இரைபையில் உள்ள உணவுகள் மற்றும் சீரண நீர்கள் வயிற்றின் அழுத்து விசையினால் வாய் மூலமும் சில வேளை மூக்கின் மூலமும் வெளித்தள்ளப்படுதல் ஆகும். தமாக வெளித்தள்ளபடுவதும் (involuntary) நம் முயற்சியால் நிகழ்வதும் உண்டு(voluntaryvoluntary).
உடலில் வாந்தி ஏற்படுத்தும் சில முக்கிய காரணங்கள்
1. வயிற்றின் உள்ளடுக்கு அழற்சி (Gastritis)
2. வயிற்றுள் ஒவ்வாத உணவுகள்( food allergies), நச்சு கலந்த உணவுகள், ( food poisons – stomach flu) , விடக்கிருமிகள் கலந்த உணவுகள் (Food contaminated with microbes)
3. வயிற்று உணவுக்குழல் பின்னோட்டம் (Gastro gastro esophageal reflexophageal reflux), அளவிற்கு அதிகமாக உண்ணுதல்.
4.ஒற்றைத் தலைவலி.
5. வயிறு குடல் பாதைகளில் ஏற்படும் புண்கள் (Peptic Ulcers).
6. வயிற்று இயக்கம் மெதுவாக நிகழ்தல் (Gastro paresis = Slow stomach emptying)
7. கல்லீரல், பித்தப்பை கோளாறுகள் – கல்லீரல் சீரண நீர்க் குறைபாடு.
8. மன அழுத்தம் (Emotional Stress), பயம், கோபம், தூக்கம், படபடப்பு, போன்ற பிற மனநிலை மாறுபாடுகள்.
9. உடல் உறுப்புகளில் ஏற்படும் அதிக வலி வந்தியை உண்டாக்கும். காட்டாக. சிறுநீரகக் கல்.
10. கருவுற்றிருக்கும் காலம். (Morning sickness during pregnancy).
11. பயண வாந்தி (Sea sickness, Motion sickness).
12. சில நோய் நிலைகள்.
மாரடைப்பு, மூளைக்கட்டி, புற்று நோய்கள், தீவிரக்காய்ச்சல், குடல்வால் நோய் (Appendicitis), குடல் அடைப்பு நோய்கள் (Blockage in the intestine) போன்ற பல நோய்கள் வாந்தியினை உண்டாக்கும்.
13. மருந்துகள்.
புற்று நோக்கான மருந்துகள் (chemotherapy), மற்றும் கதிர்வீச்சு மருத்துவம் (Radio therapy), போன்றவை.
பொதுவாக வாந்தி என்பது உடல் இயங்கியலில் ஏற்படக்கூடிய மாற்றங்களைச் சீர் செய்வதற்காக உடலில் தாமாகவே ஏற்படும் நிகழ்வேயாகும். இந்த நிகழ்வின் போது வழக்கமாக உடலில் நன்மைகளே நிகழும். காட்டாக உணவோடு நச்சுக்கிருமிகள் வயிற்றிக்குள் சென்றால் வாந்தி நிகழும். இது ஒரு வகையான உடலின் எதிர்ப்பாற்றலாகும் (INNATE IMMUNITY). இதனால் கிருமிகள் உடலுக்குள் சென்று கேடுகள் விளையாமல் தடுக்கப்படும். இது போன்றே நச்சுப் பொருட்களும் ஒவ்வாத பொருட்களும் வாந்தியின் மூலம் வெளியேற்றப்படும்.
இது போன்ற நிலைகளில் வாந்தியைத் தடுக்க முற்பட்டால் பல கேடுகள் உடலில் நிகழும். வாந்தியை அடக்கினால் உண்டாகும் துன்பங்களைக் கீழ்க்கண்ட சித்தர் பாடல் நம்மக்கு தெரிவிக்கின்றது.
“சத்தியை யடக்கி னக்கால்
தடித்திட கடிகுட் டங்கள்
மெத்தவுந் தினவு பாண்டு
மேவு கண் ரோக முண்டாம்;
பித்தத்தின் விட பாகங்கள்
பெருகிடும் சுவாசம் காய்ச்சல்
பற்றிய காசமாகும்
பகர்ந்த இக் குணங்கள் உண்டே.
சத்தி - வாந்தி
வந்தியினை ஒருவன் தன் முயற்சியால் அடக்கினால் உடலில் நச்சுத்தன்மையுண்டாகி விடக்கடியினால் (Poisoning) ஏற்படுவது போன்ற தோல் அரிப்பும் தடிப்பும் ஏற்படும்.
இரத்த சோகை உண்டாகும். கண் நோய்கள் உண்டாகும்.
வாந்தியின் மூலமாக உடலின் அழல் (பித்தம்) என்கிற உயிராற்றல் சீர்படும் என்று நமக்கு தெரியும். இதனை அடக்குவதால் அழல் என்கிற சூடு உடலில் கூடும். பின்பு உடல் வீக்கமும் காய்ச்சலும் மூச்சு விட சிரமும் இருமலும் தொடரும் என்று இப்பாடல் நமக்குத் தெரிவிக்கின்றது.
கீழ்க்கண்ட நிலைகளில் உடனடி மருத்துவ ஆலோசனை தேவை.
1. நச்சு உள்ளே சென்றுவிட்டது என்ற ஐயம் (சந்தேகம்) இருந்தால் (Poisoning)
2. இரத்தம் வாந்தியுடன் கலந்திருந்தால்
3. வித்தியாசனமான நிறங்கள் (Brown, Black) வாந்தியில் தோன்றினால்.
4. 24 மணி நேரத்திற்கு மேல் வாந்தி தொடர்ந்தால்.
5. 8 மணி நேரம் வயிற்றுள் எதுவும் தங்கவில்லை எனில் (நீர் குடித்தாலும் உடனே வாந்தியானால்)
6. அதிக தலைவலி, கழுத்து இறுக்கம் இருந்தால்
7. 6 மணி நேரம் சிறுநீர் கழியவில்லை எனில்
8. அதிகமாக வயிற்று வலி, அடி வயிற்றில் திருகு வலி ஏற்பட்டால்.
9. உடலில் நீர்ச்சத்து குறைந்தால் (Dehydration).
நீர்ச்சத்து குறைந்ததை சில அறிகுறிகளால் அறியலாம். அவை வாய் வறட்சி, அதி தாகம், தோல் சுருக்கம், கண் சுருக்கம், அழுகை வரும் போதும் கண்ணீர் வராமலிருத்தல் மிகவும் குறைவாக சிறுநீர் கழிதல் அதுவும் அடர் மஞ்சள் நிறமாக இருத்தல்.
வாந்தியை தன் முயற்சியால் அடக்கக் கூடாது. அதே போல் காரணம் தெரியாமல் மருத்துவ ஆலோசனை இன்றி வாந்தியை நிறுத்தும் மருந்துகள் உபயோகிக்ககூடது. |
||||||||
by Swathi on 27 Jul 2015 0 Comments | ||||||||
Tags: வாந்தி சித்த மருத்துவம் Vomit Siddha Maruthuvam | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|