|
|||||
சனீஸ்வரர் தனிச்சன்னிதி கண்ட திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிசேகம்! |
|||||
சனீஸ்வரர் தனிச்சன்னிதி கண்ட திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிசேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் மற்றும் சுற்றுக் கோயில்களில் ரூ.1 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சோழர் காலத்தில் இருந்தது போன்று, பழமையை மீட்டெடுக்கும் வகையில் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு உள்ளன. 9 சுற்றுக் கோயில்களுக்கு கடந்த ஜனவரி 27-ந் தேதி கும்பாபிசேகம் நடந்தது. தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிசேகத்தையொட்டி பூர்வாங்க பூஜைகள் கடந்த 3-ந் தேதி தொடங்கி, யாக பூஜைகள் நிறைவு பெற்றன. இதனையடுத்து ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு வேதமந்திரம் முழங்க புனிதநீர் ஊற்றப்பட்டது. இதில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சனிப்பரிகாரம் செய்யும் இக்கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. |
|||||
by Mani Bharathi on 11 Feb 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|