நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ஹன்சிகா இளவரசியாக நடிக்கிறார். இதற்காக வாள் சண்டைக் கற்று வருகிறார்.
இதில் ஹன்சிகாவுக்கு அம்மாவாக நடிக்கிறார் ஶ்ரீதேவி . இந்த படத்தில் நடிப்பதற்கு ஸ்ரீதேவிக்கு 5 கோடி சம்பளம் என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல்கள் கசிந்துள்ளது.
|