|
|||||
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம 12வது ஜீயராக பட்டமேற்றார் ஸ்ரீவராகாச்சாரியார் சுவாமி! |
|||||
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம 12 வது ஜீயராக ஸ்ரீவராகாச்சாரியார் சுவாமி பட்டமேற்றார். ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் 300 ஆண்டுகள் தொன்மையானது. ஆசிரமத் தின் 11வது பட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஜீயர் சுவாமிகள், கடந்த மார்ச் 19ம் தேதி பரமபதமடைந்தார். இதையடுத்து ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12வது ஜீயராக ஸ்ரீமுஷ்ணத்தில் பிறந்த, வேத, பிரபந்த பண்டிதரும், பல்வேறு ஆன்மிக பரீட்சைகளில் தேர்ந்த வருமான யாமுனாச்சார்யார் நியமிக்கப்பட்டார். இதன்படி யாமுனாச்சார்யார் சுவாமி ஸ்ரீவராகாச்சார்யார் என்ற பெயரோடு பட்டமேற்றார். இதற்கென ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் உள்ள பெரியாஸ்ரமத்தில் பல்வேறு வைதீகச் சடங்குகள், பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12 பட்டம் ஜீயராக ஸ்ரீவராகாச்சார்யார் சுவாமி பட்டமேற்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது, தமிழகத்தின் பல்வேறு திவ்வியதேசப் பெருமாள் கோயில் பிரசாதங்கள் ஜீயருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சார்பில் இணை ஆணையர் ஜெயராமன், தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டார் ஆகியோர் பிரசாதங்களை ஜீயருக்கு சமர்ப்பித்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு வைணவ மடாதிபதிகள், ஜீயர்கள் அருளாசி வழங்கி பேசினர். பின்னர் புதிய ஜீயர் சுவாமிகள் பக்தர்கள் மற்றும் சீடர்களுக்கு அருளாசி வழங்கி பேசினார். இரவு 7 மணியளவில் புதிய ஜீயர் சுவாமிகள் ஸ்ரீரங்கம் முக்கிய வீதிகளில் பட்டினப்பிரவேசமாக வலம் வந்தார். |
|||||
by Mani Bharathi on 22 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|