|
||||||||
12 மாதங்களின் தமிழ்ப்ப்பெயர்கள் |
||||||||
இவைதான் தொன்றுதொட்டு தமிழ் வரலாற்றில் இருந்த 12 மாதங்களின் தமிழ்ப்ப்பெயர்கள். இப்போது நாம் பயன்படுத்துகிற சித்திரை, வைகாசி... பங்குனி பெயர்கள் வடமொழிப் பெயர்கள்.
அவை எப்போது எப்படி தமிழினத்துக்குள் புகுந்தது என்பது வரலாறுக்கு மட்டுமே தெரிந்த உண்மை!
பழந்தமிழன் விண்மீன் தொகுப்புகளை அண்ணாந்து பார்த்து அவைகளை அவனுக்குத் தென்பட்ட உருவங்களுக்கு இணையாகப் பெயரிட்டான். இப்படித்தான் 12 ராசிகள் தோன்றின. அவைகளே மாதங்களின் பெயர்களாயின.
இது ஒருபுறம் இருக்கட்டும்.
எது உண்மையில் புத்தாண்டு நாள்/மாதம் என்கிற தேவையற்ற, சரியாகச் சொன்னால் பொருளற்ற சண்டை, இன்று நம் இனத்தை மேலும் சிதற வைக்கிறது. ஏன் எனத் தெரிந்தால் எல்லோரும் அமைதியாகி விடுவர்.
புவி ஒருமுறை சூரியனைச் சுற்றி வருவதைத்தானே ஓர் ஆண்டு என்கிறோம்? சரி, அது எப்போது சுற்றத் தொடங்கியது என்பது யாருக்காவது தெரியுமா? தெரிந்துகொள்ளத்தான் முடியுமா?
புவி சூரியனைச் சுற்றுவதையும் பிற கோள்களையும் அண்டத்தையும் மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கிக்கொள்ள முயன்ற பிறகுதானே நாளும், மாதமும், ஆண்டும் வடிவமைக்கப்பட்டன?
அப்படியிருக்க, எது புத்தாண்டு என்று யார் தீர்மானிக்க இயலும்?
பிறகென்ன சித்திரைப் புத்தாண்டு, தைப்புத்தாண்டு என்று தேவையற்று மோதிக்கொள்வது?
எங்கிருந்தோ தொடங்கவேண்டும். அது இங்கிருந்து தொடங்கலாம் என பலரும் ஒரு நாளைக் குறித்து கொண்டாட ஏதுவாகத்தானே இது உருவாகியிருக்க முடியும்?
எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். நீ தவறு என்று எவனும் எவனையும் பார்த்துச் சொல்ல முடியாது. ஊரோடு சேர்ந்து வாழ்!
-ஜேம்ஸ் வசந்தன்
#Tamil-Calendar #தமிழ்-நாட்காட்டி
|
||||||||
by Swathi on 20 Jan 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|