தமிழகத்தில், தீபாவளி பண்டிகை நாளில் மட்டும் சுமார் 154 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம், 6,838 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நாள் தோறும், சுமார் 67 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகின்றன. இந்நிலையில்,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில், 150 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால், 12 நாட்களுக்கு தேவையான மது வகைகள், கடைகளில் முன்கூட்டியே இருப்பு வைக்கப்பட்டன. எதிர்பார்த்தது போலவே, இலக்கைத் தாண்டி நேற்று முன்தினம், தீபாவளி அன்று மட்டும், 154 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது, கடந்த ஆண்டு விற்பனையை விட 22 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
|