திருமாலின் அடியவர்களாகிய தாசர்களை (தாதர்கள்) போற்றிப் பாராட்டி ஆடும் ஆட்டம் தாதராட்டம் எனப்படும். இது தமிழகத்தில் நாயக்கர்களின் குடிப்பெயர்ச்சிக்குப் பின் உருவான ஆட்டம். இந்த ஆட்டத்தை தொட்டியப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த தொட்டியப்பட்டி நாயக்கர்கள் மட்டுமே ஆடுவர். இவர்கள் திருநெல்வேலி, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பரவலாக வாழ்கின்றனர். இவ்வாட்டம் பாடல், இசைக் கருவிகளின் இயக்கம், ஆட்டம் என்ற நிலையில் அமைவது. இவ்வாட்டத்தை ஆண்கள் மட்டுமே ஆடுகின்றனர்.
|