இவ்விளையாட்டில் சிறுவர் சிறுமியர் கலந்து கொள்வர்.இதில் அம்மாவாகச் ஒரு சிறுமிகள் இருப்பாள். அந்த சிறுமி தன் இடக்கையை மலர்த்தி வைத்துக் கொண்டு வலது கையால் தோசை சுடுவாள். அப்போது குழந்தைகள், தோசை வெந்ததா? என்று கேட்பர்.
'இல்லை' என்று அம்மா சொல்லத் திரும்பவும் "தோசை வெந்ததா?" எனக் கேட்பர்.
இப்போது அம்மா "வெந்தாச்சு" எனப் பதில் சொல்லியவாறு தோசையை எண்ணி அடுக்குவது போல் காண்பித்து அடுக்கி வைத்து விட்டு அம்மா குழிக்கப் போவதாகக் கூறி, சற்று தூரம் போய்த் திரும்பி வருவாள்.
அப்போது தோசையைக் காணாததால் குழந்தைகளிடம்
"தோசை எங்க? என்பாள். காக்கா கொண்டு போச்சு காக்கா எங்க? மரத்துல மரம் எங்க? வெட்டி முறிச்சாச்சு வெட்டி முறிச்ச வெறகு எங்க? எரிச்சாச்சு எரிச்ச சாம்பல் எங்க? பாத்திரம் பூசியாச்சு பாத்திரம் எங்க? ஆடு விழுங்கியாச்சு ஆடு எங்க? வெட்டித் தின்னாச்சு
என்று பதில் கூறுவர்.
இவ்விளையாட்டு பெற்றோருக்குத் தெரியாமல் குழந்தைகள் திண்பண்டங்களை எடுத்துத் தின்பதிலிருந்து தோன்றியிருக்கலாம்.இது சமையல் கலையைக் கற்றுக் கொள்கிற வாழ்வியல் விளையாட்டாகவும், தோசைகளை எண்ணுவது,சரியாக தங்களுக்குள் பங்கிட்டு கொள்வது என கணிதச் அறிவை வளர்க்கவும் பயன்படுகிறது.
இந்த விளையாட்டை உங்கள் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்து உங்கள் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்...
|