திருமலை பிரம்மோற்சவத்தின் போது உண்டியல் மூலம் ரூ. 20.52 கோடி வசூலானது.
ஏழுமலையானுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவர். விரதம் இருந்து பாதயாத்திரையாக சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.
இதையொட்டி தேவஸ்தானம் புரட்டாசி மாதத்தில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பரிந்துரைக் கடிதங்களுடன் வரும் விஐபி தரிசனத்தை ரத்து செய்துள்ளது.
அதன்படி செப்டம்பர் 22, 23, 29, 30 மற்றும் அக்டோபர் 6, 7, 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
மேலும் திருமலையில் நடந்த பிரம்மோற்சவத்தின் போது உண்டியல் மூலம் ரூ.20.52 கோடி வருமானம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
|