|
|||||
கன்னியாகுமரியில் ரூ 23 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில்! |
|||||
கன்னியாகுமரியில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.23 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருட பகவான் சன்னதி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இது தவிர கோயிலுக்கு பக்தர்கள் வருவதற்கு பாதை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. தற்போது கோயில் கட்டுமானப் பணி இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இப்பணிகளை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை பொறியாளர் சந்திரசேகர ரெட்டி தலைமையில் பொறியியல் துறை தலைமை அதிகாரி மற்றும் ஆலோசகர் கொண்டலராவ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் தலைமை பொறியாளர் சந்திரசேகர ரெட்டி கூறியதாவது: இந்தியா முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 6 இடங்களில் கோயில் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 22.5 கோடி மதிப்பீட்டில் கோயில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் வரும் டிசம்பர் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகம் எப்போது நடத்துவது என்பதை தேவஸ்தானம் முடிவு செய்யும். கோயிலுக்கு வருவதற்கு இணைப்புச் சாலை பணிகள் தற்போது நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். |
|||||
by on 30 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|