LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF

இன்று!!! இப்போது!!! பரபரப்பாக வேலைசெய்துகொண்டு இருக்கும் அன்பு உள்ளங்களே... எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கி படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்..

இது எனது அன்பு வேண்டுகோள்!!! 

என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய விவசாய சொந்தங்களே!! இன்று நாம் உண்ணும் உணவில் பூச்சிக்கொல்லி விஷமும், இரசாயன உரமும் கலந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை,இந்த சூழ்நிலை எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கு... அதில் எந்தவித மாற்றமும் இல்லை,பல்வேறு நாடுகளிலும் இதுதான் நிலைமை....,நான் தற்போது ஒரு பன்னாட்டு இயற்கை விவசாய அமைப்பின் தலைவர் குழுவில் நானும் ஒரு உறுப்பினராய் இருக்கிறேன். நமது ஊரில்... பக்கத்து ஊரில்... பக்கத்து மாவட்டத்தில்... அப்பிடின்னு மட்டும் இல்லாமல் எல்லா இடங்களிலும் ரசாயன விவசாயம் தான் இருக்கு...இப்பிடி இருக்குற இந்த நேரத்துல நாம் பல இடங்களில் பார்க்கிறோம். 

விளை பொருட்கள் விற்பனை அங்காடி என விளம்பர பலகை நிறைய இடங்களில் காணப்படுகிறது, அதேபோல நம்ம சமுதாய வலைத்தளங்களான FACEBOOK, WHATSAPP, TWITTER மேலும் பெரும்பாலான தனியார் தொலைக்காட்சிகள் என எல்லாவற்றிலும் விவசாயத்திற்கு ஒரு பெரிய இடம் உண்டு.

மக்களும் அதனை ஆர்வமாக விழிப்புணர்வுடன் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர்,அதுல வரக்கூடிய செய்திகள் இயற்கை விவசாயத்தை பற்றித்தான் அதிகமாக பகிரப்படுகின்றன, ஒளிபரப்பு செய்யப்படுகின்றது,அதேபோல் விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு பேச்சுகள், வாசகங்கள் காணொளிகள் இப்படி எல்லாவற்றையும் மக்கள் ஒருவருக்கொருவர் மாற்றி பகிர்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் முக்கிய இடம் பிடித்து அன்றாடம் பேசப்பட்டு வருகிறது இந்த இயற்கை விவசாயம். இது ஒரு புறம் இருக்க...

''கற்றது கை மண் அளவு... கல்லாதது உலகளவு'' என்ற ஒளவையாரின் வாக்கிற்கு ஏற்ப நாம் பயின்றது சிறிய அளவு என்றாலும் கூட ... நம் அறிவிற்கு எட்டியவரைஉண்மையாக இயற்கை விவசாயம் செய்கிறார்களா...?முழுமையான இயற்கை விவசாயம் செய்ய முடியுமா...?இயற்கை விவசாயம் எங்கே செய்யப்படுகிறது...?இயற்கை விவசாயத்தில் வெற்றி அடைகிறார்களா ...?இயற்கை விவசாயம் வெற்றிகரமாக செய்பவர்கள், கொடிய விஷத்தை தெளிச்சாலும் கட்டுப்படுத்த முடியாத புழுக்கள், சாறுஉறிஞ்சும் பூச்சிகள் ,ஒரு மாநிலம் அல்லது ஒரு நாடு முழுமைக்கும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடிய அமெரிக்கன் படை புழு போன்ற புழுக்கள் மற்றும் கொடிய நோய்கள் இவை எல்லாத்தையும் எப்படி கட்டுப்படுத்துறாங்க... என நமக்குள் தோன்றுகின்ற கேள்விகள் ஆயிரம்???? ஆயிரம்???? இந்த கேள்விகளுக்கு பதில் தேடிக்கொண்டே இருக்கிறோம் நாம்.. ஆனால் இன்னொரு பக்கம் நாங்கள் பெரிய நிறுவனமாக இருக்கிறோம் எங்களிடம் பதிவு பெற்ற இயற்கை விவசாயிகள் அதிகம் உள்ளனர்,

எங்கள் நிறுவனம் சுமார் 3000 குடும்பத்திற்கு மேல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான காய்கறிகள், உணவு பொருட்கள் மர செக்கில் ஆட்டப்பட்ட கடலை எண்ணெய் / நல்லெண்ணெய் / தேங்காய் எண்ணெய் இப்பிடி பல்வேறு வகையானஇயற்கை விளைபொருட்கள்  விநியோகம் செய்கிறோம் ,மேலும் எங்களிடம் பொருட்கள் தரமாகவும் சுவையாகவும் இருப்பதனால் மக்கள் அதனை சாப்பிட்டு பார்த்துட்டு திரும்ப திரும்ப கேட்டு வாங்கிக்கொள்கின்றனர் என பெருமையாக கூறிக்கொள்கின்றனர், ஒரு சிலர் ...,மேலும் பல பேர் Website / facebook / whatsapp என பல ஊடகங்களின் மூலமாக விளம்பரம் செய்கின்றனர்.. இன்று இயற்கை விவசாய பண்ணைகளின் எண்ணிக்கை அதிகமா??? இயற்கை விளைப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை அதிகமா???? என்ற கேள்விக்கு கடைகளின் எண்ணிக்கையே அதிகம் என தோன்றுகிறது. இப்படி இருக்கிற.. இந்த காலகட்டத்தில் இயற்கை விவசாயிகளை நான் உண்மையாக ஆதரிக்கிறேன், அவர்கள் வயலுக்கு குடும்பத்துடன் சென்று ஒரு நாளாவது வேலை செய்கிறேன் அல்லது அவர்களை நேரில் சந்திச்சு வயலில் விளைந்த பொருட்களை வாங்கலாம்னு இருக்கேன் என்று நல்ல எண்ணம் படைத்தவர்கள் எண்ணிக்கை இன்று அதிகரித்து கொண்டே  வருகிறது , அதிலும் சொல்லப்போனால் இளம்சமுதாயத்திடம் இந்த எண்ணம் கூடிக்கொண்டு வருகிறது,

நாமும் அதைத்தான் ஆதரிக்கிறோம்,விவசாயிகளுக்கு ஏதும் இலவசமாக நீங்கள்  தரவேண்டாம்..உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது உங்க குழந்தைகளை அழைத்துகொண்டு இயற்கை விவசாய நடைபெறும் வயலுக்கு நேராக சென்று அவர்கள் விளைவிக்குற பொருட்களை நேரடியாக அவரிடம் பணம் கொடுத்து வாங்கிட்டு வாங்கனு தான் சொல்லுறோம்அதற்கு ஒரு முன்னோட்டமாக முத்தான ஒரு வாய்ப்பாக ஏற்பாடு செய்யலாம்னு இருக்கேன்,அது என்னவென்றால் நமக்கு தெரிஞ்ச இயற்கை விவசாயிகள் ,உண்மையாக இயற்கைவிவசாயம் சாகுபடியில் ஈடுபடுபவர்கள் , அதேபோல் நமக்கு தெரியாமல் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளின் விபரம் சேகரித்தல் மேலும் அவர்களின் வயலுக்கு சென்று பார்த்துவிட்டு சம்மதத்துடன் உலகுக்கு அடையாளம் காட்ட முயற்சி செய்ய உள்ளோம்.

அதன் மூலம் நம் சமுதாயத்திற்கு உண்மையான இயற்கை விவசாயிகளை அடையாளம் காண்பிக்கலாம்னு என்று ஒரு எண்ணம் எனக்கு தோன்றி உள்ளதுஇது ஒரு மிக பெரிய முயற்சி என்னால் ஒருவனால் செய்வது கடினமான ஒரு செயல் அதற்கு என் சொந்தங்களான உங்களிடம் உதவி கேட்கிறேன்., நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன் என்று நினைப்பவர்கள் என்னுடைய whatsapp அல்லது E-mail id க்கு தெரியப்படுத்தவும்.,

உன்னால் முடியும் தோழா "மகேந்திர எம் மணிவாசன்", இயற்கை விவசாய ஆராய்ச்சியாளர், உறுப்பினர் உலக இயற்கை விவசாய அமைப்பு ஜெர்மெனி...
Mobile: +919443338279Office Mobile: +919965737555E.mail: drmmmphd@gmail.com

by Mani Bharathi   on 28 Jun 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தாயகப் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்டி  தாயகம் திரும்பி, இயற்கை விவசாயம் செய்யும் பிரியா வர்தீஷ்- சிறப்பு நேர்காணல்! தாயகப் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்டி தாயகம் திரும்பி, இயற்கை விவசாயம் செய்யும் பிரியா வர்தீஷ்- சிறப்பு நேர்காணல்!
கூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள் கூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள்
இயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு இயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு
தேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை தேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை
ஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா? ஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா?
பயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா பயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா
மரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும் மரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும்
இயற்கை வளங்கள் நீர்நிலைகள் பாதுகாப்பில் கிராமசபை - 'நல்ல சோறு' ராஜமுருகன் இயற்கை வளங்கள் நீர்நிலைகள் பாதுகாப்பில் கிராமசபை - 'நல்ல சோறு' ராஜமுருகன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.