LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

உத்தரப்பிரதேச கும்பமேளா: தை அமாவாசை நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்!

உத்தரப் பிரதேச கும்பமேளாவில் தை அமாவாசை நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினார்கள். 
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கடந்த 15 ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. வருகிற மார்ச் 4ம் தேதி கும்பமேளா நிறைவடைகிறது. 

தினந்தோறும் கும்பமேளாவில் நீராடினாலும், விசேஷ நாட்களில் நீராடுவதை பக்தர்கள் மேலும் புனிதமாக கருதுகின்றனர். மகரசங்ராந்தியன்று, அதாவது பொங்கல் தினத்தன்று  பக்தர்கள் முதல் புனித நீராடலை கடைப்பிடித்தனர். 

இதனைத் தொடர்ந்து இரண்டாவது புனித நீராடல்  நடந்தது.  தை அமாவாசையை வட மாநிலத்தை சேர்ந்தவர் மவுனி அமாவாசை என்ற பெயரில் கடைபிடிக்கின்றனர். இந்த நாட்களில் பேசாமல் அமைதியாக இருப்பதையும் பக்தர்கள்  கடைபிடிக்கின்றனர்.

மவுனி அமாவாைசயை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள்  திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்கள். இதற்காக அதிகாலை 3 மணி முதலே பக்தர்களின் வருகை தொடங்கியது. 

கடும் பனியையும் பொருட்படுத்தாது, பக்தர்கள் புனித நீராடுவதற்காக திரண்டபடி இருந்தனர். சுமார் 3 கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 

40 காவல்நிலையத்தை சேர்ந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

கும்பமேளா பகுதி முழுவதும் 440 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு  கண்காணிக்கப்பட்டது. 

மூன்றாவது மற்றும் கடைசி புனித நீராடல் வருகிற 10ம் தேதி பசந்த் பஞ்சமி அன்று நடக்கின்றது. மார்ச் 4ம் வரை சுமார் 12 கோடி பக்தர்கள் கும்பமேளாவிற்கு வருவார்கள் என்று  எதிர்பார்க்கப்படுகின்றது.

by Mani Bharathi   on 06 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கிருபானந்த வாரியார் கிருபானந்த வாரியார்
பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள் பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள்
திருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்! திருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்!
இமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு! இமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு!
தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் 19-ந் தேதி இறங்குகிறார்! தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் 19-ந் தேதி இறங்குகிறார்!
பழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா துவங்கியது! பழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா துவங்கியது!
வேலூர், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 தெய்வீகத் திருமணங்கள்! வேலூர், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 தெய்வீகத் திருமணங்கள்!
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு! மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.