|
||||||||
தனி மனித சமாதானம் #உலக சமாதானத்தின் வேர். |
||||||||
![]() தனி மனித அமைதிக்கு உருவத்துள் உலவும் உயிரணு மனதில் அனுமானித்து அதன் அசைவும் ஓட்டமும் நிலையும் நம் உடலுள் காண முயல்வதே தியானம் தவம்..
தியானம் பழக பழக தன்னுள் உள்ள உயிர் அதிர்வு பிறவுயிர், பிற சடப் பொருள் என விரிந்து உணர உணர பிரபஞ்ச இயக்கம், நிலை, துவக்கம் வரை மனம் விரிந்து உணர்கிறது.
இந்த உணர்வே எல்லா இயக்கத்தின் மூலமான சுத்த வெளியில் மோதி அந்த சுத்த வெளியினுள் காணும் நுண் அதிர்வை தொடும் போது அண்டம் பிண்டம் அதனூடே நிகழும் சராசரங்களை ஒரே மனநிலையில் காணுவதே விஸ்வரூபம் எனும் துரியாதீதம் உச்சம். இங்கே மனம் தொட்டு விட்டால் தான்,தனது என்ற பேதம் நீங்கி எல்லாம் ஒன்றே, ஒன்றின் பல்வேறு தோற்றமே என்று மனம் நிறைவு பெறுகிறது. இந்த இடத்துக்குச் செல்லவே நம் மனது பசி தூக்கம் சுவை நகை நட்டு பகட்டு புகழ் பொருள் தேடல் என்று திசை மாறி அதைத் தேடித் தேடி நிறைவடைய முடியாமல் தடுமாறி எதைத் தேடியும், தேடியதைப் பெற்றும் திருப்தி இல்லாமல் வாழ்வே துன்பம் என்ற சலிப்பைத் தந்து விடுகிறது.
#துரியாதீதம் தொட்ட மனது ஆடம்பரங்களில் இருந்து விலகுகிறது. உடலியக்கத்திற்கு சிறு உணவு,உடல் சூடு பராமரிக்க நீர், நின்று உறங்க சிறிது நிலம்,உடல் மறைக்க உடை, இது போதும் என்று தன் தேவைகளை குறைத்து அமைதியாய் சலனமின்றி வாழப்பழகி விடுகிறது. #தன்னிறைவைப் பிறருக்குப் போதித்து இணைத்து விடும் இணைப்பே யோகம். இந்த யோகக் கல்வியை போதிக்கவே பல்வேறு வழிகளைத் தேடியே அனைத்து மதங்களும் தோன்றின. (நகர்கின்றனவா என்பதே கேள்விக்குறியாக தொக்கி நிற்கின்றன.)
மதக்கருத்து உணராமல் மதம் தோற்றுவித்தவனை வணங்க ஆரம்பித்து விடுகின்றன. பிற்காலங்கலில் தோற்றுவித்தவன் பக்குவ வாழ்விற்கு முன் வாழ்ந்த வாழ்வை விமர்சிக்கும் போலி நாத்திக கும்பலும் தோன்றி விடுவதும், அதனுள் மனிதன் மாட்டிக் கொள்கிறான் மனிதன். மதவெறி,இனவெறி தோன்றி விடுகிறது. இதை தவிர்த்து
எல்லையற்ற அளவில் விரிய வலுவுடைய மனதை சிறு சிலைக்குள் வழிபாடாகும் போது குறுகி நிற்க முடியாமல் பல சிலை வணக்கம் என கஷ்டத்திற்கு தகுந்தாற் போல் கடவுள் சிலைகளை மனிதன் மற்றிக் கொண்டே போகிறான். மனம் குறுகி ஒடுங்கினால் அணுவுள் உள்ள சுத்த வெளிக்குள் செல்வதும், விரிந்தால் அணுவைச் சுற்றியுள்ள சுத்தவெளியை உணர்கிறான்.
ஒடுக்கம் விரிவு இதுவே இயற்கை. விதை சிறிது (ஒடுக்கம்)அதில் தோன்றிய விருட்சம் விரிவு. விருட்சம் விதை உற்பத்திக்காக விரிந்து மீண்டும் பூத்து காய்த்து பல விதைகளில் ஒடுங்கி விடுகிறது... இதைச் சீர் செய்து கல்வியாகவே 18- வயதுக்குள் தரத் தக்க அளவில் குழந்தை வளர்ப்பு அமைய வேண்டும். இதுவே உலக அமைதிக்கும் தனி மனித அமைதிக்கும் ஏற்ற #கல்விக் கொள்கை. வேதாத்திரிய சாரத்தில்..
|
||||||||
by Swathi on 17 Dec 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|