LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் - இப்படியும் ஒரு படத்தின் தலைப்பு !!

பெரும்பாலும் ரசிகர்கள் இடையே பிரசித்தம் பெற்ற வாக்கியங்கள் தலைப்பாக மாறுவதுண்டு. அதிலும் சமீபமாக நகை சுவை வசனங்கள் பல படங்களின் தலைப்பாக மாறுவது பெருகி வருகிறது.'வெள்ளையா இருக்கிறவன் பொய்  சொல்ல மாட்டான்' இத்தகைய தலைப்புடைய ஒரு படம்தான். Ignite films மற்றும் Innostorm எண்டெர்டைன் மெண்ட் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' படத்தை எழுதி இயக்குபவர் ' ஏ .எல் .அபநிந்திரன். விளம்பர துறையிலும் , வர்த்தக துறையிலும் அபி என்ற பெயரில் பிரபலமானவர் இவர்.இயக்குனர் ஒளிபதிவாளர் ராஜீவ் மேனனிடம் இவர் பல படங்கள் இணை இயக்குனராக பணியாற்றினார்.

' எந்த படத்துக்கும் தலைப்பு விளம்பரம் செய்ய மிக முக்கிய ஆயுதமாகும். அதிலும் குறிப்பாக குறைந்த முதலீட்டில் தயாரிக்க படும் படங்களுக்கு வித்தியாசமான தலைப்புகள் மிக முக்கியமானது ஆகும். 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' என்ற இந்த தலைப்பு  பிரபலமானது என்பதற்காக மட்டும் அல்ல , கதைக்கும் மிக  பொருத்தமானது என்பதால் தான் ஏற்றுக் கொண்டோம்.நமது  சமூகத்தில் நிலவி வரும் நம்பிக்கைகளும் மூடநம்பிக்கைகளும் தான் நமது வாழ்வின் நீரோட்டத்தை நிர்ணயிக்கிறது. அந்த உண்மையை சிரிப்பதுடன் சிந்திக்க வைக்கும் கதை அமைப்புடன் சித்தரிக்கும்  படம் தான் 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' . சாரங்கராஜன் ஒளிபதிவில் , 'காதல்' படத்தின் பாடல்கள் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்த ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைக்க, ஆண்டனி படத்தொகுப்பில், ஏ .செந்தில் குமாரின் கலை வண்ணத்தில், கபிலன் வைரமுத்து மற்றும் புகழேந்தி பாடல்கள் இயற்ற புதுமுகங்களோடு சில பரிச்சயமான முகங்களும் நடிக்கும் இந்த படத்தை தயாரிப்பவர் தேவன்ஷு ஆர்யா. இணை தயாரிப்பு  பிரபல ஒளிபதிவாளர் ரவி வர்மன் மற்றும்  ஷெட்டி ஆகியோர்.படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து மற்ற தொழில் நுட்ப சம்மந்தப்பட்ட வேலைகளின் இறுதி கட்டத்தில் உள்ளது. நல்ல கதை அமைப்பும் , நேர்த்தியான பட பதிவும் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியம்  என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன் நான்.இந்த படம் எல்லா தரப்பினரையும் , வயதினரையும் எலா நிறத்தவரையும் அடையும் என்பதில் சந்தேகமே இல்லை' என்று வெள்ளை மனதோடு விடை பெற்றார் இயக்குனர் அபநிந்திரன்.

Vellaiya Irukkiravan Poi Solla Maattan Movie English Poster
by Swathi   on 19 Jan 2015  0 Comments
Tags: Vellaiya Irukkiravan Poi Solla Maattan   வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்                 
 தொடர்புடையவை-Related Articles
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் - இப்படியும் ஒரு படத்தின் தலைப்பு !! வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் - இப்படியும் ஒரு படத்தின் தலைப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.