இந்த தலைப்பை படிச்சிட்டு உங்களை கண்டபடி திட்டுராங்கனு நினைச்சுக்காதீங்க. இது ஒரு தமிழ் படத்தோட பெயர்தான். தற்போது உள்ள தமிழ் சினிமாவை பொறுத்தவரை 50 லட்சத்துக்குள்ள யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்பதுதான் நிலைமை. அந்த வகையில ஒரு படம்தான் இந்த வெந்தவன், வேகாதவன், அர வேக்காடு படம். இந்த படத்தில் மொத்தமாக மூன்று ஹீரோ, ஹீரோயின்களாம், மூன்று விதமான குணத்தை கொண்ட மனிதர்களின் காமெடி படமாம் இது. இந்த படத்தை ஜி.ஸ்ரீதர் என்பவர் டைரக்ட் செய்கிறார். ஜெயபிரகாஷ் என்பவர் இசை அமைக்கிறார். பிரண்ட்ஸ் புரொடக்ஷன் என்ற புது நிறுவனம் தயாரிக்கிறது.
|